Thursday, May 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

அதிகாரி- நேற்று வலது கைல கட்டுப்போட்டு லீவ் கேட்ட..இன்னிக்கு இடது கைல கட்டு போட்டுண்டு இருக்கே?
அலுவலர்- ஆஃபீஸிற்கு கிளம்பற அவசரத்தில..நேற்று எந்த கைல கட்டுப்போட்டேன்னு மறந்து போச்சு சார்..

2.கதை,வசனம்,டைரக்ஷன்,பாடல்,ஹீரோ பாத்திரம் என எல்லாப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு..ஒரு படம் பண்ண ஆசை..யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாங்களா?
அவ்வளவு ஈஸியா ஒரு ஏமாளி கிடைக்க மாட்டாங்களே!

3.அந்த கோவில்ல ஒரு உண்டியல்ல ஏன் லஞ்சம்னு போட்டிருக்கு
தங்களுக்கு எந்த காரியத்தையாவது சாதித்துதர வேண்டிகிட்டு..அதுக்கு பக்தர்கள் போட்ட லஞ்ச உண்டியல் அது.

4.டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்

5. கொடுத்த கடனை மூணு தரம் கேட்டும்...திரும்ப கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்களே
நான் அஞ்சுதரம் கேட்டப்பிறகு தானே கடன் கொடுத்தீங்க

6.என்னோட அதிகாரி..அவர் துணிகளை நான் துவைச்சுத் தர முடியுமான்னு கேட்கிறார்
ஏன் அப்படி கேட்கிறார்
நான் நல்லா சோப் போடறேனாம்.

6 comments:

shabi said...

அய்யோ அய்யோ
ஆஃபீசர் ஜோக் சூப்ப்ர்

shabi said...

ME THE FIRST ............................................

வால்பையன் said...

//டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்//

அப்படியே தொட்டுக்க சைட்டிஷ் என்னான்னு சொல்லுங்க!

தினேஷ் said...

//கதை,வசனம்,டைரக்ஷன்,பாடல்,ஹீரோ பாத்திரம் என எல்லாப் பொறுப்பையும் நானே ஏத்துக்கிட்டு..ஒரு படம் பண்ண ஆசை..யாராவது தயாரிப்பாளர் கிடைப்பாங்களா?//

T.Rட்டா கேட்டா சொல்வார்...

///டாக்டர்- நீங்க அதிகம் குடிச்சதால..குடல் புண்ணாயிடுச்சு..இந்த மருந்தை தினம் மூணு வேளை சாபிடுங்க
நோயாளி-ராவா சாப்பிடணுமா இல்ல தண்ணீ கலந்தா டாக்டர்//

sprite கலந்துனுதானே டாக்டர் சொன்னார்

அக்னி பார்வை said...

suppar saar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
shabi
வால்பையன்
சூரியன்
மங்களூர் சிவா
அக்னி பார்வை