ஜெ அணிக்கு நிறைய தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக..பல பதிவுகள் இரண்டு நாளாக தமிழ்மணத்தில் காணப்படுகின்றன.ஒரு பதிவர்..ஜெ யின் கூட்டங்களில் அவர் பேச்சு இதற்கு ஒரு காரணம் என்றுள்ளார்.
ஈழப்பிரச்னை..பிரமாத மாறுதலை ஏற்படுத்தாது..என அனைத்துப் பிரிவினருக்குமே தெரியும்..ஏதோ ஆற்றாமையில்தான் பதிவிடுகிறோம்.கட்சி வேறுபாடின்றி..இரு திராவிட கட்சி தொண்டர்களிடையே
காங்கிரஸ் வெல்லக்கூடாது என்ற எண்ணம் உள்ளது.மேல்தட்டு மக்கள்,மத்திய வர்க்கத்தினர் கூட இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது சந்தேகமே.
தி.மு.க., கட்டுக்கோப்பான கட்சி என்பதால்..அதன் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் ஓட்டுகள் சிதறாது.அதுவே..அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில்
வாக்குகள் சிதறி..அ.தி.மு.க.வோ..அதன் கூட்டணியோ வெற்றி பெறும்.
ஆகவே..ஜெ வெற்றி பெறும் தொகுதிகளில் அவர் பேச்சாலோ,அவர் வாக்குறுதி நம்பியோ யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
மேலும்..ஜெ கூட்டணி பலம் வாய்ந்தது,..என்பதில் சந்தேகமில்லை.கூட்டணி பலம்தான்..பேச்ச் பலம் இல்லை என்பது திட்டவட்டமே!
ஆகவே ஜெ பெறும் வெற்றி கணிசமாக இருக்கும்..என்பது..உண்மையே.
அதே போன்று தி.மு.க.,வும் 15 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.காங்கிரஸ் படு தோல்வி அடையும்.
இதுதான் நிதர்சனம்.
10 comments:
அப்படி தான் எனக்கும் தெரியுது!
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
note this
DMK + 23
ADMK + 16
BJP - 1
காங்கிரசுக்கு ஓட்டு போடுவது,நமது கழுத்தில் நாமே சுருக்கு போடுவது!
மஞ்சல் துண்டு நிறைய பாடம் கற்று கொள்வார்- ந்
அதுதான் நடக்கப்போகிறது அருண்
வருகைக்கு நன்றி புலிகேசி
உங்கள் கணிப்பு சரியானால் சந்தோஷம் தான் வாக்காளன்
நன்றி ttpian
ஜெ பேச்சுக்கு எப்படி ஓட்டு கிடைக்காதோ அதேபோல கலைஞரின் பேச்சு மற்றும் அறிக்கைகளால் விழுற வாக்கு கூட விழாம போக வாய்ப்பிருக்கிறது.
//ஜோதிபாரதி said...
ஜெ பேச்சுக்கு எப்படி ஓட்டு கிடைக்காதோ அதேபோல கலைஞரின் பேச்சு மற்றும் அறிக்கைகளால் விழுற வாக்கு கூட விழாம போக வாய்ப்பிருக்கிறது.//
அப்படி தான் தெரியுது!
Post a Comment