Saturday, May 30, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 12

1965ல் வந்த படங்கள்

பழனி
அன்புகரங்கள்
சாந்தி
திருவிளையாடல்
நீலவானம்

சாந்தி 100நாட்கள்..

திருவிளையாடள் மாபெரும் வெற்றி படம்.வெள்ளி விழா படம்.வசூலில்..ஒரு புராண படம் ஒரு கோடியைத் தாண்டியது இப்படத்திற்கு மட்டுமே.முதன்முதல் ஃஃபிலிம் ஃபேர் தமிழ்படங்களுக்கு விருது கொடுக்க ஆரம்பித்த ஆண்டு.சிவாஜிக்கு சிறந்த கதாநாயகனுக்கான விருது வழங்கப்பட்டது.

இலங்கை வானொலியில்..224 முறை..இப்படத்தின் ஒலிச்சித்திரம் ஒலிப்பரப்பப்பட்டது.

1966ல் வந்த படங்கள்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ்
சரஸ்வதி சபதம்
செல்வம்

மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம்..100 நாட்கள் ஓடிய படம்.

இவ்வாண்டுதான் ஜனவரி 26ல் சிவாஜிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.இவ்விருது பெற்ற முதல் தமிழ்ப் பட காதாநாயகன் இவர்தான்.

மோட்டார்..படத்தில் 13 குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தார் சிவாஜி..அப்போது அவ்ர் வயது 38.அதில் ஜெயும் ஒரு மகள்...,

1967 படங்கள் அடுத்த பதிவில்...

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அதில் ஜெயும் ஒரு மகள்..., அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சேர்த்துவிட்டேன்
வருகைக்கு நன்றி SUREஷ்

முரளிகண்ணன் said...

நல்ல தகவல்கள்.

சிவாஜின்னாலே அங்கே சுரேஷ்க்குத்தான்

முதல் மரியாதை.

*இயற்கை ராஜி* said...

நல்ல தகவல்கள்

ஜோ/Joe said...

சகாப்தத்தின் சாதனை பட்டியல் தொடரட்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
முரளி
இய‌ற்கை
ஜோ/Joe

முரளிகண்ணன் said...

சார்,

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி முரளி

G.Ragavan said...

பழநியும் அன்புக்கரங்கள் சுமார் ரகம் என்றாலும் மற்ற மூன்று படங்களுமே மிக அருமை. ஒவ்வொன்றும் ஒரு விதம். பாட்டுகளும் கலக்கல்.

சாந்தி படத்தில் வரும் செந்தூர் முருகன் கோயிலிலே...யார் அந்த நிலவு... அடடா!

திருவிளையாடலில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். கே.பி.சுந்தராம்பாள், டி.ஆர்.மகாலிங்கம், பாலமுரளிகிருஷ்ணா போன்றோரும்... டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பீ.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி என்று ஒரு பட்டாளமே பாடியிருப்பார்கள்.

நீலவானம்... ஓ லிட்டில் பிளவர்...சீ யுவர் லவர்... ம்ம்ம்ம்ம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராகவன்..சிவாஜியின் ஒவ்வொரு படம் பற்றி எழுதினால்..எழுதில் கொண்டே இருக்கலாம்.
ஒரு உபரி தகவல்..நீலவானம்..படத்திற்கு கதை,வசனம்..கே.பாலசந்தர்