
தமிழகத்தின் துணைமுதல்வர் பதவி தளபதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.பொறுமை காத்த அவருக்கு...காலதாமதமாக கிடைக்கப்பட்ட பதவி இது.அதற்கு காரணம் இவர் கலைஞரின் மகன் என்பதே!இல்லவிடின்..இவர் திறமைக்கு என்றோ உச்சிக்கு போயிருக்க வேண்டியவர்.
இரண்டு நாட்கள் முன் கழகத்தில் நுழைந்து,நேற்று..பதவி கிடைத்து..இன்று அமைச்சர் ஆனவர் இல்லை இவர்.
தனது சிறு வயதிலேயே..கழகத்தின்பால் பற்றுக் கொண்டவர் இவர்.
இந்திராவின்..அவசரக்காலநிலையின் போது...ஸ்டாலின் கைது செய்யப்பட்டு...சிறையில் துன்புறுத்தப்பட்டார்.அடி உதை வாங்கினார்.அன்று மட்டும்..சிட்டிபாபு ஸ்டாலினுக்கு விழுந்த அடியில்..குறுக்கே புகுந்து தடுக்கவில்லையெனில்..இன்று ஸ்டாலின் இல்லை.ஆகவே இந்நாளில் சிட்டிபாபுவிற்கு நாம் நன்றி செலுத்த்க் கடமைப்பட்டிருக்கிறோம்.
தற்போது..கலைஞரின் மந்திரிசபையில்..உள்ளாட்சித் துறை அமைச்சரான இவர்..நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.தி.மு.க., சென்னை மாநகர மேயராக இருந்திருக்கிறார்.அச்சமயத்தில்..சென்னையை சிங்காரச்சென்னையாக ஆகியவர்.பாலங்கள் நிறைந்த நகரமாக சென்னை உருவாக காரணமாய் இருந்தவர்.
தனிப்பட்டமுறையில்...யாரையும் கடுஞ்சொல் கூறி வசை பாடாதவர்.கடந்த நாடாளுமன்றத்தேர்தலில்...கலைஞரால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியா உடல் நிலையில்...மாநிலம் முழுதும்..பிரச்சாரம் செய்து..கழகத்தை பெரும் வெற்றி பெறச் செய்தவர்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குமேல்..பொதுவாழ்வில் இருந்துவரும் ஸ்டாலின்..கலைஞரின் மகன் என்பதால் துணைமுதல்வராய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்..என சில அறிவுஜீவிகள் ஆராய்ந்து கண்டுபிடித்தது போல பேசினாலும்...
ஒரு திறமையற்றவர்க்கு இப் பதவி வழங்கப்படவில்லை...
ஒரு உண்மை ஊழியனுக்கு...ஒரு நல்ல மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது..
மேலும்...தி.மு.க.,ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்..அதில் யாருக்கு எந்த பதவி தர வேண்டும் என்பது அக்கட்சியின் விருப்பம்.
ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி..வரவேற்பதுடன்..மக்கள் உங்களிடமிருந்து இன்னும் அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்..அவர்கள் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுங்கள் என்கிறோம்.
சரியான சமயத்தில்..சரியான நபரை..சரியான பதவிக்கு தேர்ந்தெடுத்த கலைஞருக்கு நம் பாராட்டுகள்.
7 comments:
திராவிடனுக்கு துணை முதல்பதிவர் கொடுத்து ஆரிய-திராவிட போரில் வெற்றி பெறும் திமுக தலைவர் வாழ்க !
:)
//கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குமேல்..பொதுவாழ்வில் இருந்துவரும் ஸ்டாலின்..//
இன்னும் இளைஞர் அணி செயலாளாரா இருக்காரா என்ன?
நான் முப்பத்தஞ்சு வயசுன்னு நினைச்சேன், அனுபவமே முப்பத்தஞ்சு வருஷமா?
நியாயமாகத்தான் அவருக்கு குடுக்கப்பட்டிருக்கிறது ...
பாப்போம் என்ன நடக்குதுன்னு..
/// கோவி.கண்ணன் said...
திராவிடனுக்கு துணை முதல்பதிவர் கொடுத்து ஆரிய-திராவிட போரில் வெற்றி பெறும் திமுக தலைவர் வாழ்க !
:)//
முதல்பதிவர் ????
:-)
// இயற்கை said...
:-)//
நன்றி இயற்கை:-)
வாங்க ஜோதி சார்..ரொம்பநாளா நம்ம பக்கம் காணோம்
//கடைக்குட்டி said...
நியாயமாகத்தான் அவருக்கு குடுக்கப்பட்டிருக்கிறது ...//
நன்றி
Post a Comment