சரத்குமார்,டி.விஜய் ராஜேந்தர்,பாக்கியராஜ் அவ்வளவு ஏன்? நடமாடும் பல்கலைக் கழகம் என போற்றப்பட்ட நெடுஞ்செழியன் ஆகியோர் கட்சி ஆரம்பித்து தோல்வி கண்டவர்கள்.இன்றும்..முதல் இருவர் கட்சிகள் இருந்தும்..மக்கள் ஆதரவு இல்லை.
ஆனால்...விஜய்காந்த் அவர்கள் ஆரம்பித்த தே.மு.தி.க., மூன்றாவது சக்தியாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது..என்பது மறுக்க முடியா..மறக்க முடியா உண்மை.
நாடாளுமன்ற தேர்தலில்..7 தொகுதிகளுக்கு மேல் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பெற்றுள்ளது இக்கட்சி.முழு விவரங்களும் வந்ததும்..இது பெற்ற சத விகித ஓட்டுகள் தெரியும்.ஆயினும்..25 தொகுதிகளில்..இது பெற்ற ஒட்டுகளை கணக்கிட்டால்..20 லட்சத்திற்கும் மேல்.மொத்தம் 40 தொகுதிகளிலும் கணக்கிட்டால் இக்கட்சி கணிசமாக ஓட்டுகள் பெற்றிருப்பதும்..பல முக்கிய வேட்பாளர்கள் தோற்பதற்கு இக்கட்சி காரணமாய் இருந்திருப்பது தெரிய வரும்.
நான்..சில பதிவுகளில் அவரை கிண்டல் செய்து..குறைத்து மதிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.
இது எப்படி சாத்தியமாயிற்று?
விஜய்காந்தின் இடைவிடா உழைப்பு...அதை பாராட்டும் அதே நேரத்தில்...விஜய்காந்த் அவர்கள்..இன்றைய நடைமுறையை மனதில் கொண்டு.. சற்று வளைந்து கொடுக்க வேண்டும்..தேர்தல் சமயங்களில் கூட்டு வைப்பது இன்று..தேசிய கட்சிகளுக்கே இன்றியமையாததாய் ஆகிவிட்டது.இக்கூட்டணி விஷயத்தில்..இனி வரும் தேர்தல்களில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.மற்றக் கட்சித் தலைவர்களை வசை மாறி பொழிவதை நிறுத்த வேண்டும்.
பா.ம.க., வை இவர் வரவு கண்டிப்பாக பாதித்துள்ளது.அக்கட்சி இன்று பல இடங்கள் கீழே தள்ளப்பட்டுவிட்டது.இனி..இரு திராவிடக் கட்சிகளும் பா.ம.க., வை மதிக்காது.
எது எப்படியோ..விஜய்காந்த் இன்று வளர்ந்து வரும் சக்தி.இவரை சாதாரணமாக இனி நினைக்கக் கூடாது.
(மொத்தமாய் 31,25,801 வாக்குகள்.
10.09%.
கழகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சக்தி விஜயகாந்த் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.)
10 comments:
//"விஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சக்தி.."//
ஆமாம், "விஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சகதி.." தான்
மொத்தமாய் 31,25,801 வாக்குகள்.
10.09%.
கழகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சக்தி விஜயகாந்த் என்பது தெள்ளத்தெளிவாகிவிட்டது.
கருத்துக்கு நன்றி கோவி
வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி ஊர்சுற்றி..பதிவில் சேர்த்துவிட்டேன்
நிச்சயம் இவர் ஒரு மாற்று சக்தி தான்
கருத்துக்கு நன்றி அக்னி
விஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சகதி..//
நல்லாக் கவனிங்க அய்யா.
உள்குத்து புரியாம நன்றி சொல்லிட்டீங்க.
நீங்க சொன்னது சக்தி
கோவியார் சொன்னது சகதி
புரிந்துகொண்டுதான் சொன்னேன்.அவர் கருத்துக்கு நன்றி என்று மதி
விஜயகாந்தினால் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிதான்..
இதனை இப்படியே தொடரச் செய்யத்தான் இரண்டு திராவிட கழகங்களும் விரும்புவார்கள்.
விஜயகாந்துக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல் நிச்சயமாக வேள்விதான்..
நன்றி உண்மைத் தமிழன்
Post a Comment