
எம்.ஜி.ஆர்.,பிக்சர்ஸ் மூன்று படங்களை எடுத்தனர்..அந்த மூன்றும் முத்துக்கள்.நாடோடி மன்னன்,அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன்.
எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் மஞ்சுளா,லதா,நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.தாய்லாந்து,ஹாங்காங்,ஜப்பான்,சிங்கப்பூர்,மலேஷியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது.இப்படத்தில் பிரமாதமான கதை இல்லையென்பதால்..காட்சிகள் பிரமாண்டமாய் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., விரும்பினார்.ஒசாகாவில் நடைப்பெற்ற எக்ஸ்போ 70 கண்காட்சியை முழுவதும் காட்ட விரும்பினார்.ஆனால்..அவரது காரைக்கூட அங்கு அவர்கள் அனுமதிக்கவில்லை அந்த அளவு கூட்டம்.
அவருக்கு அப்போது வயது 53..ஆனாலும்..தோளில் காமெராவை மாட்டிக்கொண்டு அவர் கிளம்பிவிட்டார்.எங்கெங்கு படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிந்து வந்து ..அடுத்த நாள் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்.இதயம் பேசுகிறது மணியன்..அவர் தங்க இடம்..மற்ற ஏற்பாடுகளைக் கவனித்தார்.
'உலகம் அழகுக் கலைகளின் சிகரம்' என்ற பாடல் இருநூறு ஷாட் எடுக்கப்பட்டது.படத்தில் அப்பாட்டு நான்கு நிமிடங்களே வரும்.இப்பாடல் எக்ஸ்போ முழுதும் காட்டியது.
1971ல் இந்திரா காந்தி..தி.மு.க., வை ஒழிக்க நினைத்தார்.ஆனால் தி.மு.க., பெருவாரியான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்திருந்தது.அச்சமயம்..மணியனின் 'இதய வீணை' படபிடிப்புக்கு காஷ்மீர் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.,அங்கிருந்து கலைஞருக்கு தொலைபேசினார்.தனக்கு வர்த்தகத் துறை அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம்..ஒரு நடிகர் நடிக்கும் காலத்து அமைச்சராக முடியாது என்றுள்ளதாக கருணாநிதி கூரினார்.இது விஷயமாக இந்திராவிடம் பேசக்கோரினார் எம்.ஜி.ஆர்., ஆனால் கலைஞர் மறுத்துவிட்டார்.எம்.ஜி.ஆரை நடிப்பை விட்டுவிடச் சொன்னார்.எம்.ஜி.ஆர்., அதற்கு மறுத்தார்.
தகராறு இங்கேதான் ஆரம்பித்தது.இச்சமயத்தில் கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை நடிப்பிற்கு கொண்டு வந்தார்.
மதுரையில் தி.மு.க., கூட்டம் ஒன்றில்'தி.மு.க., ஊழல் கட்சியா?'என எம்.ஜி.ஆர்., கேட்டதுடன் நில்லாது...கட்சியின் கணக்கைக் கேட்டார்.
பொருளாளரின் வேலை கணக்கு காட்டுவது..கணக்கு கேட்பதில்லை என்றார் கலைஞர்.கலைஞர்..நெடுஞ்செழியனுடன் பேசி..எம்.ஜி.ஆரை..கட்சியை விட்டு நீக்கினார்.
அப்போது கண்ணதாசன்..'அவரைப் பற்றி குறைத்து மதிப்பிடாதீர்கள்..கலாட்டா வரும்' என்றார்.
'நான் சமாளித்துக் கொள்வேன்' என்றார் கலைஞர்.
நேற்று இன்று நாளை படபிடிப்பில் இருந்தவரிடம்..கட்சியை விட்டு நீக்கப்பட்டது சொல்லப்பட்டது.'இப்போதுதான் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்' என்றார் எம்.ஜி.ஆர்.,பின் அப்படத்தில்..'தம்பி நான் பிறந்தேன் காஞ்சியிலே' என்ற பாட்டில்..முதன் முறையாக அ.தி.மு.க., கொடி காட்டப்பட்டது.அப்படம் வெளியான திரையரங்குகள் சூறையாடப்பட்டன.
உலகம் சுற்றும் வாலிபன் பட வெளியீட்டில் அக்கறைக் காட்டினார் எம்.ஜி.ஆர்.,அரசு அவ்வப்போது சிறு சிறு தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பித்தது.சென்சார் பிரச்னையை எழுப்பினார்கள்.திண்டிக்கல் இடைத்தேர்தல் வந்தது.கட்சி ஆரம்பித்து ஆறே மாதம் ஆன நிலையில்..அ,தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சென்னை நகராட்சி தி.மு.க., வசம் இருந்தது.உலகம் சுற்றும் வாலிபன் சுவரொட்டிகள் போட முடியாவண்ணம்..வரியை உயர்த்தியது நகராட்சி.எம்.ஜி.ஆர்., எந்த போஸ்டரும் போடவில்லை.இதனிடையே இன்கம்டேக்ஸிலிருந்து தொல்லை கொடுக்கப்பட்டது..எல்லா இன்னல்களையும் மீறி..1973ல் படம் வெளிவந்தது.தேவி பேரடைஸில் வெளிவந்த இப்படம்..மாபெரும் வெற்றி பெற்றது.படம் 28 வாரங்கள் ஓடியது.
இப்படத்தில் வந்த பாடலின் வரிகள்.
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்