Saturday, October 24, 2009

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

12 comments:

இராகவன் நைஜிரியா said...

சிறுகதை...ஓகே...

வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.

மங்களூர் சிவா said...

/
இராகவன் நைஜிரியா said...

சிறுகதை...ஓகே...

வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கின்றேன்.
/
கலிகாலம் :(((

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நச்..,

VISA said...

காதல் கத்திரிக்காய் எல்லாம் சும்மா டமாஷு தான். அவரவர் வசதிக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நச்..,//

நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// VISA said...
காதல் கத்திரிக்காய் எல்லாம் சும்மா டமாஷு தான். அவரவர் வசதிக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சரி.//


வருகைக்கு நன்றி வருகைக்கு நன்றி Visa

வருண் said...

உங்க கதையைப் படித்ததும் இந்த சுசீலா பாடல்தான் ஞாபகம்வந்தது எனக்கு :)

********************
படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்

என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

நன்றி: சந்த்ரு
*********************

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கிட்டீங்க வருண்..(நன்றி-சந்த்ரு)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்..எனது இந்தக் கதையைப் படித்தீர்களா?
http://tvrk.blogspot.com/2009/10/500-2009.html

T.V.ராதாகிருஷ்ணன் said...

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி