Tuesday, September 30, 2008

கலைஞர் ஆட்சியில் மணல் கொள்ளையாம்...மண்குதிரை சொல்கிறது

இப்படி சொல்பவர் யார்? காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக்கொண்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக..யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்யுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு குட்டித் தலைவரில் ஒருவர்.
நேருக்கு நேர் ..பழி சொல்லிடும்.. எதிரியைக் கூட நம்பிடலாம்..ஆனால்..உடன் இருந்து கழுத்தறுக்கும் நண்பனை நம்பக்கூடாது என்னும் கூற்றுக்கு சரியான உதாரணம் இவர்.
ஒரு குட்டித் தலைவர்..ஆட்சியில் பங்கு வேண்டும் என்றார் சமீபத்தில்..
இப்போது இவர் .....ஆட்சியில் மணல் கொள்ளை என்கிறார்...
ஐயா..காங்கிரஸ் குட்டித் தலைவர்களே..முதலில் நீங்கள் ஒன்று சேருங்கள்..தேர்தலில் தனித்து போட்டி யிட்டு...மக்களிடம் உங்களுக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.பின்னர் பேசுங்கள்.
எங்கள் ஆதரவு இல்லையென்றால்..திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்கிறீர்கள்.
ஆம்...உண்மைதான்..
ஆனால்..நீங்கள் சொல்லும் அந்த திராவிட கட்சிகள் ஆதரவு இல்லை என்றால் உங்களால் ஒரு சில எம்.பி.க்கள் கூட டெல்லி செல்ல முடியாது..தமிழகத்திலிருந்து.
யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள்.
ஆனால் உங்களைப்பார்த்தால்..பூனை தனக்கு யானை பலம் இருப்பதாக கனவு காண்பதைப்போல் இருக்கிறது.
உங்கள் வாய்க்கு..பூட்டு பூட்டிக் கொள்ளுங்கள்..இல்லையேல்..பாராளுமன்ற தேர்தலில் கலைஞரின் சத்துணவு திட்டத்தில் முட்டை போடுகிறார்களாம்...அதற்கு உதவி செய்தவர் ஆவீர்கள்.

4 comments:

மணிகண்டன் said...

******காங்கிரஸ் குட்டித் தலைவர்களே******

வன்மையாக எதிர்க்கறேன். குட்டி தலைவர்கள் என்று யாரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் கிடையாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
******காங்கிரஸ் குட்டித் தலைவர்களே******

வன்மையாக எதிர்க்கறேன். குட்டி தலைவர்கள் என்று யாரும் காங்கிரஸ் பேரியக்கத்தில் கிடையாது.//


..குட்டித்தலைவர்கள் என்றா சொல்லியிருக்கிறேன்...
வருந்துகிறேன்...
தாங்கள்தான் பெரும் தலைவர்கள் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்கள் என்று எழுதியிருக்க வேண்டும்.
தவறை சுட்டிக்காய்யம்மைக்கு நன்றி

குடுகுடுப்பை said...

காங்கிரஸ்னா தமிழ்ல என்னங்க- கூட்டமா எனக்கு ஒன்னுமே புரியல

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
காங்கிரஸ்னா தமிழ்ல என்னங்க- கூட்டமா எனக்கு ஒன்னுமே புரியல.//

:-)))))