Saturday, January 3, 2009

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... (3-1-09)

1.பெண்கள் தலையில் பின்னல் போடுவதன் தத்துவம் என்ன தெரியுமா?
பின்னலை மூன்று கால்கள் எடுத்துப் போடுவார்கள்.பக்கங்களில் இருக்கும் இரு இழைகளும் அந்தப் பெண்ணின் பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் குறிக்கின்றன.நடு இழையை வைத்து மற்ற இரு இழைகளும் மாறி மாறிப் பின்னப்படுவது அந்தப் பெண் நடுனாயகமாக இருந்து,பிறந்த வீட்டையும்,புகுந்த வீட்டையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு சிறப்பைத் தேடித் தரவேண்டும் என்பதுதானாம்.

2.இட்டுக் கெட்டது காது
இடாமல் கெட்டது கண்
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
கேட்டுக் கெட்டது குடி
கேளாமல் கெட்டது கடன்
உண்டு கெட்டது வயிறு
உண்ணாமல் கெட்டது உறவு.

(இதன் பொருள்;- குச்சி,பின் போன்றவற்றை இட்டுக் குடைவதால் கெட்டது காது.மை.நெய் முதலியவைகளை இட்டுப் பராமரிக்காததால் கெட்டது கண்.செல்லம் கொடுத்து வளர்த்ததால் கெட்டது பிள்ளை.அக்கறையின்றி கவனிக்காமல் விட்டதால் கெட்டது நிலத்திலிட்ட பயிர்.வதந்திகள்,கோள் பேசுவதைக் கேட்டதனால் கெட்டாது குடும்பம்.கொடுத்ததை நினைவுபடுத்தாமல் கேளாமல் விட்டதால் கெட்டது கடன்.கண்டபடி உண்டதால் கெட்டது வயிறு..உறவினர் வீடுகளில் நல்லது,கெட்டதுகளில் கலந்து கொண்டு..ஒரு வேளையாவது உண்ணாமல் செல்வதால் கெட்டது அந்த உறவு)

3.பெரிசுகள் இளம் தம்பதிகளை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என ஆசிர்வதிப்பர்.அந்த பதினாறு என்ன என்ன தெரியுமா?
1.புகழ்,2.கல்வி,3.வலிமை,4.வெற்றி5.நன்மக்கள்6.பொன்7.நெல்8.நல்லூழ்9.நுகர்ச்சி10.அறிவு11.அழகு12.நோயின்மை13.வாழ்நாள்14.பெருமை15.இளமை16.துணிவு

6 comments:

நசரேயன் said...

ஹும்.. இந்த காலத்திலே யாரு பின்னல் போடுறாங்க, பின்னி படல் தான் எடுக்காங்க

மங்களூர் சிவா said...

இந்த காலத்துல எல்லாம் தலைய விரிச்சி போட்டுகிட்டு இல்ல அலையுறாளுவ :((

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
ஹும்.. இந்த காலத்திலே யாரு பின்னல் போடுறாங்க///,

அதற்கு நாம என்ன செய்யமுடியும்? நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////மங்களூர் சிவா said...
இந்த காலத்துல எல்லாம் தலைய விரிச்சி போட்டுகிட்டு இல்ல அலையுறாளுவ :((////

;-(((((((

cheena (சீனா) said...

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் நல்லாவே இருக்கு ஆமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சீனா