Saturday, January 24, 2009

நாத்திக கண்ணதாசன் எழுதிய பாடல்...

கண்ணதாசன் கடவுள் நம்பிக்கைப் பற்றி வருண் ஒரு பதிவு போட்டிருந்தார்.கடவுள் நம்பிக்கை..அவரால் பல பாடல்களை..எழுத உதவியது என்ற பொருள் வருமாறு எழுதி இருந்தார்.நாத்திகனாய் இருந்த போது அவர் எழுதிய ஒரு பாடல் பாருங்கள்..

நான் தெய்வமா..இல்ல
நீ தெய்வமா..நமக்குள்ள
யார் தெய்வம்..நீ
சொல்லம்மா. (நான் திவமா)

பணம் காசு கடன் தந்து
வீட்டை எடுத்தார்
பால்..பழம் கொடுத்து
உன் கண்னை மறைத்தார்

நடமாடும் நடைபாதை
என் வீடம்மா
நடமாட முடியாத
உனக்கேதம்மா (நான் தெய்வமா)

பசி எடுத்தாலும்
எனக்கேதும் தருவார் இல்லை
எது கொடுத்தாலும்
தாய் உனக்கு பசியே இல்லை

கதானாயகன் இறைவன் இல்லை என்பதுபோல பாடப்பட்ட பாடல்.கவிஞர் எழுதி..மகாலிங்கம் பாடிய இப்பாடல் இடம் பெற்ற படம் 'கவலை இல்லாத மனிதன்'.

கவிஞரின் சொந்த படம் இது.

4 comments:

மதன் said...

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ..
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ..

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்
அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான்..
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

தாயாரை தந்தை மறந்தாலும்
தந்தை தானென்று சொல்லாத போதும்
ஏனென்று கேட்காமல் வருவான்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்

கண்ணதாசனின் கலக்கல்களுள் இதுவும் ஒன்று.

ஆத்திகமோ, நாத்திகமோ கருத்தை செவ்வனே வெளிப்படுத்தியது, கவியரசு என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் சொல்வதும் அதைத்தான்...எழுத்துக்கு நாத்திகம்,ஆத்திகம் கிடையாது.

நா. கணேசன் said...

கவிஞர் கண்ணதாசன் பல ஆண்டுகள் நாத்திகராகவே இருந்தார். அவர் சேலம் மாவட்டத்தில் திராவிட இயக்கத் தலைவராக விளங்கிய ஒருவர் தாசனாக வைத்துக் கொண்ட பெயர் கண்ணதாசன். ஜலகண்டாபுரம் கண்ணன் அவருக்குப் பல வகையிலும் வாழ்க்கையில் உதவியவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தகவலுக்கு நன்றி கணேசன்