Sunday, July 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 19

1973ல் வந்த சிவாஜி படங்கள்

பாரதவிலாஸ்
ராஜ ராஜ சோழன்
பொன்னூஞ்சல்
எங்கள் தங்க ராஜா
கௌரவம்
மனிதரில் மாணிக்கம்
ராஜ பார்ட் ரங்கதுரை

இவற்றுள்..பாரதவிலாஸ்,ராஜ ராஜ சோழன்,எங்கள் தங்க ராஜா,கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ஆகிய ஐந்து படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவை.

பாரதவிலாஸ் படம் தேசிய ஒருமைப்பாட்டை சித்தரிக்கும் படம்.முதன் முதலாக இந்திய அரசே..ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய படம் இது.நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு.

ராஜ ராஜ சோழன்..அரு.ராமனாதன் எழுத்து.டி.கே.எஸ்., பிரதர்ஸ் மேடையேற்றிய நாடகம்.அதை ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி படமாக்க விரும்பினார்.முதன் முதல் சினிமாஸ்கோப் படம் இது.

கௌரவம்..கண்ணன் வந்தான் என்ற பெயரில்..வியட்நாம் வீடு சுந்தரம் எழுத நாடகமாக நடிக்கப்பட்டது ஒய்.ஜி.பி.,குழுவினரால்.பின் கௌரவம் என்ற பெயரில் திரைப்படமானது.

நாடகங்கள் திரைப்படமானால் வெற்றி பெரும் என நிரூபித்தவர் நடிகர்திலகம்.கட்டபொம்மன்,வியட்நாம் வீடு,ஞானஒளி,ராஜ ராஜ சோழன்,கௌரவம்..(தங்கப்பதக்கம்,பரீட்சைக்கு நேரமாச்சு,ஆனந்தக்கண்ணீர்..ஆகியவையும் நாடகங்களே)

கௌரவம் 56 நாட்கள் ஒரு திரை அரங்கில்..ஹவுஸ் ஃபுல் ஆகி சாதனைப் படைத்தது.குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்

எங்கள் தங்க ராஜா..சிவாஜி 3 வேடங்கள்.பி.மாதவன் இயக்கம்.'யாரை நம்பி நான் பிறந்தேன்" பாடல் ஹிட்.

ராஜ பார்ட் ரங்கதுரை..நாடக நடிகனின் கதை.இப்படத்தில் நடிகர் திலகம் 14 கெட்டப்பில் வருவார்.

இனி..அடுத்தபதிவில் 1974ல் வந்த படங்களைக் காணலாம்.

26 comments:

ஜோ/Joe said...

நல்ல தகவல்கள்.

குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோ..
நீங்கள் அளித்த தகவல் பதிவில் சேர்க்கப்பட்டது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தேசிய ஒருமைப்பாட்டை சித்தரிக்கும் படம்.முதன் முதலாக இந்திய அரசே..ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய படம் இது//

இந்திய அரசாங்கமே நெகடிவ் உரிமை வாங்கும் அளவிற்கு அதில் ஒருமைப் பாட்டினை எப்படி வளர்க்கும் வகையான கருத்துக்களை சொன்னார்கள் தல...

அதில் படத்தின் பேரும் அந்த குடியிருப்பில் பல மாநிலத்தவர் குடியிருப்பதும் மட்டுமே ஒருமைப் பாடாக தோன்றுகிறது.

பாரத் பட்டத்திற்கு சமமான மரியாதையாக இந்த நெகடிவ் விவகாரம் தோன்றுகிறது தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராஜ ராஜ சோழன்,//

இதில் படத்தில் காட்டப் பகுதியையா நாடகமாகக் காட்டினார்கள் தல..,

எனக்கு நிலவரம் தெரியாது! நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கௌரவம்//

கண்ணனை ஏன் சொந்த மகனாக காட்டவில்லை தல...

தம்பி மகனாக காட்டுவதால் பரிதாபம் தோன்றும் என்று நினைத்தார்களா என்ன?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கௌரவம்//

இரண்டு கதாபாத்திரங்களும் வெவ்வேறு ஆட்கள் செய்தது போல நடித்திருப்பார். எந்த காட்சியிலும் இரட்டைவேடம் என்ற எண்ணமே தோன்றாதவகையில் நடித்திருப்பார்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராஜ பார்ட் ரங்கதுரை..//

சின்னவயது சிவாஜி என்ன ஆனார் தல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எங்கள் தங்க ராஜா..சிவாஜி 3 வேடங்கள்.பி.மாதவன் இயக்கம்.//

இந்தி பட பாணியில் சிவாஜி நடித்த படம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பொன்னூஞ்சல்//

பாரதி ராஜா வருவதற்கு முன்பேவந்த கிராமத்துக் கதை..

சாமானியர்களின் கதை; ஆனாலும் கொஞ்சம் வசதியானவர்களின் கதை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ராஜ ராஜ சோழன்..//

சிவாஜி டி,ஆர்,மகாலிங்கத்தோடு இணைப்பாட்டு பாடியிருப்பாரே...

அற்புதமாக இருக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ராஜ ராஜ சோழன் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான் தல...

பொன்னியின் செல்வன் படிக்காதவர்களுக்கு அது ஒரு சூப்பர் படம். ஆனால் அன்றைய ஏ கிளாஸ் ரசிகர்கள் பெரும்பாலானோர், பி கிளாஸ் படித்தவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வனைப் படித்திருந்ததால் அது பலத்த அடி வாங்கியிருக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ராஜ ராஜ சோழனில் ஒரு நெருடல் தல....

சிலைவடிக்கும் சிற்பிக்கு எச்சில் துப்ப ஒரு பாத்திரம் கொடுத்து ஒரு சிறுவனை நிறுத்தி இருப்பார்கள். மன்னரே ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரத்தை பிடிப்பதாக கதையில் சொன்னால் கூட அந்த சிறுவனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? இதற்கு சரித்திர ஆதாரம் எதுவும் இருக்கிறதா? தல

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுரேஷ்..எல்லாவற்றிர்கும் பதில் சொல்கிறேன்..அதற்குமுன் கணேஷ் என்னும் பெயரை எப்போ மாற்றிக்கொண்டீர்கள் என தெரிவிக்கவும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து)
பாரத் பட்டத்திற்கு சமமான மரியாதையாக இந்த நெகடிவ் விவகாரம் தோன்றுகிறது தல//

உண்மை சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ராஜ ராஜ சோழன்,//

இதில் படத்தில் காட்டப் பகுதியையா நாடகமாகக் காட்டினார்கள் தல..,

எனக்கு நிலவரம் தெரியாது! நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்வேன்//

ஆம்...அரு.ராமனாதன் எழுதிய இந்தநாடகம்..ப்ரேமா பிரசுரத்தால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டிருக்கிறது.(அரு.ராமநாதன் காதல் பத்திரிகை ஆசிரியராய் இருந்தவர்,மேலும் பிரேமா பிரசுர உரிமையாளர்)
டி.கே.எஸ். நாடகம்..பிரமாத வெற்றி..ஆனால் படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை என்பது உண்மையே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ராஜ ராஜ சோழன்,////

இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியடையாததற்கு காரணம்...நாடகம் ..ஒரு நிகழ்ச்சியை..அதாவது சோழனின் மகள் குந்தவையையின் காதல் நிகழ்ச்சியை மட்டுமே மையமாகக் கோண்டது.ஆனால் திரைப்படத்திற்கான கரு இது மட்டுமே என்பதை ரசிகர்கள் ஏற்கவில்லை.சோழனின் மற்ற பெருமைகளை சொல்லாததும் காரணம்.ஏபிஎன்..எப்படி இப்படி திரைக்கதையை அமைத்தார் என தெரியவில்லை

சகாதேவன் said...

பாடல்கள் பற்றி நீங்கள் சொல்லலையே.
"ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.."
டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//கௌரவம்//

கண்ணனை ஏன் சொந்த மகனாக காட்டவில்லை தல...

தம்பி மகனாக காட்டுவதால் பரிதாபம் தோன்றும் என்று நினைத்தார்களா என்ன?//

வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்றதுபோல...ஒரு சமயம் பாரிஸ்டர் மகனும் மக்குன்னு சொலவடை உண்டோ..என்னவோ..அதனால் வளர்ப்பு மகனாய் காட்டியிருப்பார்களோ..
சுரேஷ்..சும்மா ஜோக்கிற்கு சொன்னேன்...
இப்படிப்பட்ட சந்தேகம் எனக்கு இதுநாள்வரை எழவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ராஜ பார்ட் ரங்கதுரை..//

சின்னவயது சிவாஜி என்ன ஆனார் தல...,//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ராஜ ராஜ சோழனில் ஒரு நெருடல் தல....

சிலைவடிக்கும் சிற்பிக்கு எச்சில் துப்ப ஒரு பாத்திரம் கொடுத்து ஒரு சிறுவனை நிறுத்தி இருப்பார்கள். மன்னரே ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரத்தை பிடிப்பதாக கதையில் சொன்னால் கூட அந்த சிறுவனின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்? இதற்கு சரித்திர ஆதாரம் எதுவும் இருக்கிறதா? தல//


து சினிமாவிற்காக மிகைப்படுத்தப் பட்ட காட்சி என்றே எண்ணுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சகாதேவன் said...
பாடல்கள் பற்றி நீங்கள் சொல்லலையே.
"ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா.."
டி.எம்.எஸ், பி.சுசீலா பாடிய
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.//

எனக்கும் பிடித்த பாடல்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

வர்மா said...

1973ஆம் ஆண்டு ஏழு படங்களீலா நடிகர்திலகம் நடித்தார்
அன்புடன்
வர்மா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வர்மா said...
1973ஆம் ஆண்டு ஏழு படங்களீலா நடிகர்திலகம் நடித்தார்
அன்புடன்
வர்மா//

என் முந்தைய பதிவு பாருங்கள்..இன்னும் ஆச்சர்யப்படுவீர்கள்.
வருகைக்கு நன்றி வர்மா

SANKAR said...

யாரை நம்பி நான் பொறந்தேன் இது எங்க ஊர் ராஜா பட பாடல்.

SANKAR said...

எங்கள் தங்க ராஜா படத்தில் பட்டாகத்தி
பைரவன் என்ற பெயரில் சிவாஜி இடைவேளைக்கு பின் வருவார்.
1979 ல் இதே பெயரில் ஒரு படமும்
வந்தது."எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்"என்ற பாடல் இந்த படத்தில் தான்.ஆனால் இது வரை
எந்த டிவியிலும் இந்த பாடல் போட்டதே
இல்லை.இந்த படத்தின் சிடி எங்காவது
இருந்தால் தெரிவிக்கவும்.