Saturday, October 10, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 3

1954ல் வந்த படங்கள்

மனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.

அதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் மலைக்கள்ளன்.கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.


அம்மையப்பன்..எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்

1956ல் வந்த படங்கள்

ராஜாராணி..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.

ரங்கோன் ராதா...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகல்

திண்ணை தூங்கி பண்டாரம்
திருவோடு ஏந்தும் பரதேசி
தெருவில உருளும்
திருப்பதி கோவிந்தா..கோவிந்தா
இந்த சோம்பேறி நடைப்பிணங்களுக்கு
உயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்
என்றும் எதிலும் பொதுநலம்


1957ல்
புதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம்


புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//புதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா//

இந்தப் படத்திற்கும், நானும் ஒரு தொழிலாளிக்கும் முடிச்சுப் போட்டு பார்த்திருக்கிறீர்களா..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்//

அதே நேரத்தில் அந்தக்கால ஐஸ்வர்யாவின் சிரிப்பு பட்டையக் கிளப்பும். அந்த வில்லத்தனம் அங்கே மிக பயங்கரமாக காட்சியளிக்கும்

ttpian said...

மேக்கப்-போடாமல் நடிக்கும் சிறந்த(?) நடிகன்

vasu balaji said...

அப்புடியே இருந்திருக்கலாமோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்தப் படத்திற்கும், நானும் ஒரு தொழிலாளிக்கும் முடிச்சுப் போட்டு பார்த்திருக்கிறீர்களா..,//

பதிவு படித்தேன்..உங்களின் இந்த ஆராய்ச்சி தொடர்ந்தால் பல படங்கள் நிலை இப்படி இருக்கக்கூடும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
அதே நேரத்தில் அந்தக்கால ஐஸ்வர்யாவின் சிரிப்பு பட்டையக் கிளப்பும். அந்த வில்லத்தனம் அங்கே மிக பயங்கரமாக காட்சியளிக்கும்//

ராஜகுமாரிபோல ஒரு வில்லி தமிழில் பின் யாரும் உருவாகவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ttpian
வானம்பாடிகள்

அஹோரி said...

ரொம்ப முக்கியமான பதிவு. மக்களுக்கு தேவையானதும் கூட.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எப்படி சொல்லியிருந்தாலும்(!!!!)..வருகைக்கு நன்றி அகோரி

பீர் | Peer said...

'தமிழா...தமிழா..' ஒரு கால இயந்திரம்!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பீர் | Peer said...
'தமிழா...தமிழா..' ஒரு கால இயந்திரம்!!!//

நன்றி Peer