Friday, October 23, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 4


நான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..

தாமரை புரையுங் காமர் சேவடிப்
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே

இதற்கு அர்த்தம்..

தாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.

அடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..

6 comments:

goma said...

ஆன்மீகமா சும்மா கலக்க்றீங்க....
நல்லா கலக்குங்க...நாங்கெல்லாம் காத்திருக்கிறோம்

October 24, 2009 1:07:00 AM PDT

க.பாலாசி said...

குறுந்தொகையின் பாடலும் அதற்கான தங்களின் விளக்கங்களும் நன்றாயிருக்கிறது. தொடருங்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
ஆன்மீகமா சும்மா கலக்க்றீங்க....
நல்லா கலக்குங்க...நாங்கெல்லாம் காத்திருக்கிறோம்//

அவ்வப்போது நல்ல பாடல்கள் பற்றி எழுதலாம் என்றுதான்..மற்றபடி ஆன்மீகத்திற்கும் நமக்கும் ரொம்ப தூரம் கோமா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
குறுந்தொகையின் பாடலும் அதற்கான தங்களின் விளக்கங்களும் நன்றாயிருக்கிறது. தொடருங்கள்...//

நல்லத் தமிழை..இலக்கிய நயத்தை அவ்வப்போது எழுதலாம் என்று எண்ணம்

மங்களூர் சிவா said...

wow
super
thanks

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்களூர் சிவா said...
wow
super
thanks//

thanks siva