Wednesday, October 7, 2009

என்றும் நீ என்னோடுதான்


மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்

சற்றேனும் அறிவாயோ?

பாலும், பழமும், தேனுமென

குழந்தை பருவத்தில்

கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை

மகிழ்ச்சிக் கொண்டேன்!

வாலிப வயதிலோ..விரைவு உணவென

கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி

குப்பைக்கூடையாகினாய்..

உயிர் குடிக்கும் மதுவை

உள்ளே செலுத்தியவாறு

கல்லைத் தின்னாலும்

செரிக்கும் வயதென

செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..

எனக்கும் மூப்புண்டு அறிவாயா?

அத்தனையும் தாங்கும்

அடித்தளம் முற்றும் அழிந்தது

மரண அழைப்பு வந்தது

புற்றென பெயரில்..

சென்றிடுவோம் ..வந்திடு

8 comments:

கலையரசன் said...

ஜங்க் புட் சாப்பிடுறவர்களுக்கு சரியான நெத்தியடி கவிதை!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஹலோ டி வி ஆர் சார் ,

என்ன இது ....

க்லக்கிட்டீங்க போங்க ...

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கலையரசன் said...
ஜங்க் புட் சாப்பிடுறவர்களுக்கு சரியான நெத்தியடி கவிதை!!//


நன்றி
கலையரசன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஹலோ டி வி ஆர் சார் ,

என்ன இது ....

க்லக்கிட்டீங்க போங்க ...//

நன்றி Starjan

க.பாலாசி said...

//வாலிப வயதிலோ..விரைவு உணவென
கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி
குப்பைக்கூடையாகினாய்..//

ஆகா.....நல்ல கவிதை அன்பரே...சிந்தனையுடன்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாஜி said...
ஆகா.....நல்ல கவிதை அன்பரே...சிந்தனையுடன்....//

நன்றி பாலாஜி

Anonymous said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ammu