Thursday, March 4, 2010

மீண்டும் ஒரு சாமியாரை நம்பி மக்கள் பலி..தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தை அழித்திடுவோம் என்றான் மீசைக்கவிஞன்.

ஆனால் அவன் இதைக் கூறி பல ஆண்டுகள் கடந்தும்..தனி மனிதர்கள் உணவின்றி வாடும் நிலை மாறவேயில்லை என்பதை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று மீண்டும் நிருபித்துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது..பணவீக்கம் குறைந்து வருகிறது..உணவுப் பொருள்கள் அமோகமாக விளைந்துள்ளன..தனி மனிதன் வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது..இப்படியெல்லாம்..புள்ளிவிவரங்கள் எடுத்து விடப்பட்டு பாராளுமன்றத்தில் பிரதமரும்..நிதிமந்திரியும்..கூறினாலும்..ஊடகங்களில் ஆளும் கட்சிகள் விளம்பரப் படுத்தினாலும்..ஏழைகள் வாழ்வில் மலர்ச்சி இல்லை.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் என்னுமிடம் அருகே கிரிபலு மஹராஜ் என்ற சாமியாரின் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் ராம்-ஜானகி கோவிலும் உள்ளது(!!!)இந்த சாமியாரின் மனைவியின்...(நம்புங்கள் மனைவிதான்.)நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற இருந்தது..நிகழ்ச்சியில் அன்னதானம் உண்டு.நல்ல உணவு உண்ணலாம் என ஏழை மக்கள் அங்கே..தங்களது குழந்தைகளுடன் திரண்டனர்..

ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கலை என்று ஒரு சொலவடை உண்டு..

அதுபோல கூட்டத்தைக் கண்டதும்..உணவு தனக்குக் கிடைக்குமோ..கிடைக்காதோ என ஒவ்வொருவர் மனதிலும் எண்ணம் எற்பட்டது போலும்..உணவுபொட்டலங்கள் கொடுக்க கதவு திறந்தபோது...மக்கள் நெருக்கியடித்துச் செல்ல..கதவு உடைந்து விழுந்தது.இதனால் பீதியுற்ற கூட்டம்..ஓடத் தொடங்க..நெரிசலில் சிக்கி 26 குழந்தைகள்..39 பெண்கள் உட்பட 65 பேர் பலியாயினர்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.வயிற்று பசிக்காக ஏற்பட்ட சாவுதான் இது.பசிக்கொடுமைதான் இதற்குக் காரணம்.

மீண்டும் இடுகையின் முதல் வரியைப் படிக்கவும்..

ஆனால்..ஜகம் அழியவில்லை..அழிந்தது அரசியல் தலைவர்களோ..ஊரை ஏமாற்றி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் பிடுங்கிய சாமியார்களோ அல்ல..அழிந்தது அப்பாவி ஏழை மக்கள்..

ஆனால்..இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்..இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டைஎண்ணை நோக்கிச் செல்கிறது..என புள்ளி விவரத்தை அள்ளிவிட்டால் போகிறது தலைவர்களுக்கு.

10 comments:

vasu balaji said...

இவனுங்க நெத்தில மூணு எண் போட்டாதான் சரியாவங்க:))

உண்மைத்தமிழன் said...

கொடுமையோ கொடுமை..!

Chitra said...

இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல்..இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டைஎண்ணை நோக்கிச் செல்கிறது..என புள்ளி விவரத்தை அள்ளிவிட்டால் போகிறது

............இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டைஎண்ணை நோக்கிச் செல்கிறது.
நல்ல விஷயம். நீங்க வேற எதுவும் நாங்க எல்லாம் கவலைப்படுற மாதிரி சொன்னீங்க??? :-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கொடுமையோ கொடுமை..!//

மனம் வேதனை அடையத்தான் செய்கிறது உ.த.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இரட்டைஎண்ணை நோக்கிச் செல்கிறது.
நல்ல விஷயம். நீங்க வேற எதுவும் நாங்க எல்லாம் கவலைப்படுற மாதிரி சொன்னீங்க??? :-(//


வருகைக்கு நன்றி chitra

"உழவன்" "Uzhavan" said...

கவலைப்படுற விஷயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உழவன்

Thenammai Lakshmanan said...

ரொம்பக் கொடுமைதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி thenammailakshmanan