Tuesday, March 16, 2010

மரங்களைக் காப்போம்...




ஒரு செல்லுலர் கம்பெனியின் விளம்பரத்தை டி.வி.யில். பார்த்தேன்..எல்லாமே ஆன் லைனில் போனால்..மரங்கள் பிழைக்கும் என்பது போன்ற கருத்தை கொண்ட விளம்பரம் அது..

இது எந்த அளவு சாத்தியம் ..என்னும் சந்தேகம் என்னுள் இருந்து வந்தது..ஆனால் அது உண்மையே என்று உணர வைத்தது ஒரு செய்தி..

ஒரு டன் காகிதம் உற்பத்தி செய்ய 20 முதல் 24 மரங்கள் வரை வெட்டப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.

CAT எனப்படும் காமன் அட்மிசன் டெஸ்ட் இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப் பட்டது.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இதர முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) படிப்பதற்கான தேர்வு இது.இதற்கான தேர்வு சமீபத்தில் ஆன்லைனில் நடத்தப் பட்டது.2.2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்..இதற்கான விண்ணப்பங்கள்,வினாத்தாள்,விடைத்தாள் ஆகியவற்றுக்காக 50 டன் காகிதங்கள் தேவை.

இந்த ஆண்டு ஆன்லைனில் தேர்வு நடந்ததால் கிட்டத்தட்ட ஆயிரம் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஐஐஎம் - ஐ சேர்ந்த தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு.

இம்முறையையே மற்ற தேர்வுகளிலும் நடைமுறைப் படுத்தினால் ஏராளமான மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க முடியும்.ஒரு மரம் வெட்டினால் ஐந்து மரங்கள் நடுங்கள் என்ற வறட்டு அறிக்கைகளும் குறையும்.

ஆனால்..ஆன்லைன் தேர்வு நடக்கையில் கணினி குளறுபடிகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.

26 comments:

goma said...

அருமை

Chitra said...

உண்மை. அருமையான பதிவு.

Paleo God said...

"மரங்களைக் காப்போம்..."//

பாதுகாப்போம்
புதிதாய் வளர்ப்போம்..:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said...
உண்மை. அருமையான பதிவு//

நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷங்கர்

vasu balaji said...

சென்னை மாதிரி இடத்துல கார்ப்பரேஷன் வரி கூட மரத்துகும் ஒரு கொஞ்சம் வசூல் பண்ணி சீரியசா தெருவோரம் மரம் வளர்த்தே ஆகணும்.

மங்குனி அமைச்சர் said...

எஸ் சார், இப்போ எல்லா கார்பரேட் கம்பனிளையும் ஒன்லி ரீ-சைக்கிள் பேப்பர் தான் யூஸ் பண்றாங்கோ

இராகவன் நைஜிரியா said...

எலெக்ட்ரானிக் ஓட்டு போடும் முறையை மாற்றி பாலட் பேப்பர் முறையில் ஓட்டு போடுவதால் எவ்வளவு நஷ்டம்...

சில அரசியல் கட்சிகள் பாலட் முறை திரும்ப வரவேண்டும் என்று சொல்லுகின்றார்களே... அவர்கள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்... சிந்திப்பார்களா?

தகரடப்பா.. said...

நல்ல யோசனை தான்...
கலைஞர் தான் இதை கண்டுபிடித்தார் என்று கூடிய விரைவில் ஒரு
விழா எடுக்க வேண்டியது தான்

பின்னோக்கி said...

மரங்களைக் காப்பது தேவை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

Unknown said...

தேவையான பகிர்வு

Engineering said...

1. நேரத்தை சேமிப்போம்
2. பேப்பர் பாதுகாப்பது மிச்சம்
3. மழை பெறுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சென்னை மாதிரி இடத்துல கார்ப்பரேஷன் வரி கூட மரத்துகும் ஒரு கொஞ்சம் வசூல் பண்ணி சீரியசா தெருவோரம் மரம் வளர்த்தே ஆகணும்.//

மண்ணும்..விண்ணும் சூரிய ஒளியும் பாராது ஒண்டிக் குடித்தனங்களில் வாழும் மக்கள் நிறைந்த நாடு நமது..:((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
எஸ் சார், இப்போ எல்லா கார்பரேட் கம்பனிளையும் ஒன்லி ரீ-சைக்கிள் பேப்பர் தான் யூஸ் பண்றாங்கோ//

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
எலெக்ட்ரானிக் ஓட்டு போடும் முறையை மாற்றி பாலட் பேப்பர் முறையில் ஓட்டு போடுவதால் எவ்வளவு நஷ்டம்...

சில அரசியல் கட்சிகள் பாலட் முறை திரும்ப வரவேண்டும் என்று சொல்லுகின்றார்களே... அவர்கள் இதைப் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்... சிந்திப்பார்களா?//

சிந்திப்பார்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Kaalai said...
நல்ல யோசனை தான்...
கலைஞர் தான் இதை கண்டுபிடித்தார் என்று கூடிய விரைவில் ஒரு
விழா எடுக்க வேண்டியது தான்//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
மரங்களைக் காப்பது தேவை என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//A.சிவசங்கர் said...
தேவையான பகிர்வு//


நன்றி சிவசங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Engineering said...
1. நேரத்தை சேமிப்போம்
2. பேப்பர் பாதுகாப்பது மிச்சம்
3. மழை பெறுவோம்//

அருமை
வருகைக்கு நன்றி Engineering

"உழவன்" "Uzhavan" said...

இது நல்ல முயற்சிதான்.. கட்சித் தலைவர்களுக்கு அவர்களாகவே அடித்துக்கொள்ளும் வாழ்த்துச் சுவரொட்டிகளையும் குறைக்கச் சொல்லனும் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன்" "Uzhavan" said...
இது நல்ல முயற்சிதான்.. கட்சித் தலைவர்களுக்கு அவர்களாகவே அடித்துக்கொள்ளும் வாழ்த்துச் சுவரொட்டிகளையும் குறைக்கச் சொல்லனும் :-)//

உண்மை
வருகைக்கு நன்றி உழவன்

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அன்புடன் மலிக்கா

Karthick Chidambaram said...

இந்த விளம்பரத்தை பற்றி நான் படிக்கும் இரண்டாவது பதிவு இது. நல்ல பதிவு. விளம்பரம் பார்கையில் நான் வியந்த விஷயங்கள் உண்டு.

ஞானி அவர்கள் ஒரு கட்டுரையில் சொன்ன செய்தி என்று நினைக்கிறேன். காந்தி தனக்கு வந்த அஞ்சல்களின் எழுத்தப்படாத காகித பகுதிகளை கூட வீணடிக்காமல் தன் பயன்பாடிற்குவைத்துகொள்வாராம்.

சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.

Karthick
http://eluthuvathukarthick.wordpress.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Imayavaramban