Thursday, May 13, 2010

கலைஞருக்கு ஒரு மனம் திறந்த மடல்..

பெருமதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

நீங்கள் 18 ஆண்டுகள் முதல்வர் பணி புரிந்து 19ஆம் ஆண்டில் நுழைந்திருப்பது குறித்து பாராட்டுகள்..வாழ்த்துகள்.

நான் தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் அல்ல..ஆனாலும்..முதன் முதலாய் வாக்குரிமை எனக்கு வந்தது முதல் தி.மு.க.,விற்கே வாக்களித்து வருபவன் (என் முதல் வாக்கு A.V.P.ஆசைத்தம்பி அவர்களுக்கு)என்ற முறையில் இக்கடிதம் எழுதுகிறேன்..சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க., விற்கே என் வாக்கு என்ற என் இடுகைக்கு இங்கே செல்லவும்.இங்கேசெல்லவும்

மூதறிஞர் ராஜாஜிக்குப் பின் அரசியல் சாணக்கியர் நீங்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

விஷயத்திற்கு வருவோம்..நீங்கள் சமீபத்தில் சட்ட மன்றத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியைக் கீழே கொடுத்துள்ளேன்.


"அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார்.

என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்."

இப்போது எனது கேள்வி..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்த M.G.R.,கழகத்தின் பொருளாளராய் இருந்தக் காரணத்தால்..அவரது கடமையைச் செய்தார்..கணக்குக் கேட்டார்..அதனால் அவரை கழகத்திலிருந்து வெளியேற்றினீர்களே..அது சரியா..

அவர் பிறப்பால் மலையாளி என்று ஆரம்பித்து..மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டினீர்களே...அது முறையா..

நீங்கள் முதல்வராகக் காரணமாயிருந்தவரை பதவி இறக்க என்னவெல்லாம் நடந்தது..அது நியாயமா..

அறிஞரான நீங்கள் இவ் விஷயத்தில் நன்றி மறந்தே செயல் பட்டுள்ளதாகவே எண்ணுகிறேன்..

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

என்ற குறளுக்கு ஏற்றவாறு நீங்கள் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது..

சமீபத்தில்..பிரிந்தவர்கள் மீண்டும் கழகத்திற்கே வர வேண்டும்..என்ற உங்கள் அழைப்பு உண்மையாய் இருக்கட்டும்

நன்றி

அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்

12 comments:

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப யோசிக்கிறீங்களோ...

Thenammai Lakshmanan said...

மடல் நல்லா இருக்கு..

Cable சங்கர் said...

அது அப்ப முதல்வராவற்த்துக்கு முன்னாடி.. இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//என் முதல் வாக்கு A.V.P.ஆசைத்தம்பி அவர்களுக்கு)//

அப்படியென்றால் நீங்கள் பலநிகழ்வுகளுக்கு சாட்சியாக நிற்கிறீர்கள் என்று சொல்லுங்கள்

Unknown said...

நல்ல வேலை எம்.ஜி.ஆர் இப்ப இல்லை .....

Unknown said...

He he he. எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் முத்து, ஸ்டாலின், அழகிரி போல் எம்.ஜி.ஆர் அவருக்கு ரத்த சம்பந்தம் இல்லாதவர். அதுதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் கலைஞர் நவீன யுக திருதராஷ்டிரன். இதைப் புரிந்துக் கொள்ள தங்களுக்கு இவ்வளவு காலம் ஆனது ஆச்சரியம்.

ராஜ நடராஜன் said...

//சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க., விற்கே என் வாக்கு //

இடுகை லாஜிக் இடிக்குதே!

கார்த்திகைப் பாண்டியன் said...

இப்போ அவர் என்ன வெணும்னாலும் சொல்லலாம் சார்.. பொய்யா சொல்றன்னு கேட்க யாரும் வரப் போறதில்லை..:-((

இப்படிக்கு,
உங்களை மாதிரியே ஒவ்வொரு முறையும் கலைஞருக்கு ஓட்டுப்போடும் இன்னொரு அப்பாவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
//சென்ற பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க., விற்கே என் வாக்கு //

இடுகை லாஜிக் இடிக்குதே!//

எந்த லாஜிக்கும் இடிக்கலே!..இலங்கை பிரச்னையில் சரியானபடி முடிவெடுக்காத நிலையில்..காங்கிரஸ் உடன் கூட்டு தொடர்ந்தது எனக்கு வருத்தமே! அப்படிப்பட்ட நிலையில் எங்க தொகுதியில் காங்கிரஸ் நின்றிருந்தால் அதற்கு ஓட்டு போட்டிருக்க மாட்டேன்..காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடியுங்கள் என்றே ஒரு இடுகை இட்டேன்

goma said...

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்....


என்ற குறள் கலைஞருக்குத்தானோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி goma