Friday, October 21, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (21-10-11)




புற்றீசல்கள் போல் பரவி வரும் சேனல்கள் வரிசையில் புதிய வரவு கிருஷ்ணா டீவி.சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணசாமி அஸ்ஸோசியேட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணசாமியே இதன் பிரோமோட்டர்.'ஆன்மீகம் மற்ரும் இந்தியாவின் புராதனக் கலைகளுக்கு கிருஷ்ணா டீவி முக்கியத்துவம் அளிக்கும்'என்கிறார் அவர்.சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற இடங்களில் இந்த தீவி தெரிகிறது.
இவ்வளவு சொல்லிவிட்டு முக்கியமான ஒரு செய்தியை சொல்லாவிட்டால் எப்படி..
இந்த டீவியின் பங்குதாரர் சுப்பிரமணிய சுவாமி ஆகும்

2)உள்ளாட்சித் தேர்தல்களில்..மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளது. 'பெருக்கத்து வேண்டும் பணிவு'  என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் நல்லது.

3)திருக்குறளில் பயன்படுத்தப் படாத ஒரே உயிர் எழுத்து 'ஔ' ஆகும்.இடம் பெற்றுள்ள இரு மலர்கள்..அனிச்ச மலரும், குவளை மலரும் ஆகும்.

4)எழுத்தாளர் ராஜேஷ் குமார் இதுவரை 1440 நாவல்கள் எழுதியுள்ளார்.அவற்றில் 1250 க்கு மட்டும் அவரிடம் பிரதிகள் உள்ளனவாம்.190 நாவல்களுக்கு கைவசம் பிரதிகள் இல்லையாம்.

5)இதுவரை கமல்ஹாசன் நடித்துள்ள 7 படங்கள் சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக கலந்துக் கொண்டிருக்கின்றன.இந்தியாவில் வேறெந்த நடிகரின் படமும் இத்தனை முறை கலந்துல் கொண்டதில்லை.

6) பலஹீனமானவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம்.



சைனாவில் மனிதநேயம் செத்ததைக் காட்டுகிறது இந்த விடீயோ.இரண்டு வயது குழந்தை மீது கார் ஏறுகிறது..இரண்டு கார்கள்.ஆனால் அவர்களும் சரி..பாதசாரிகளும் சரி (கடந்து சென்றவர்கள் 18  பேர்)காப்பாற்ற முயலவில்லை.கடைசியில் குப்பைப் பொறுக்கும் ஒருவர் அக்குழந்தையை ஒரத்தில் கொண்டுவந்து போட்டு உதவிக்கு குரல் கொடுத்தார்.குழந்தை ஆஸ்பத்திரிக்கு வருகையிலேயேமூளைச்சாவு அடைந்துவிட்டது.வெள்ளியன்று இறந்துவிட்டது. அக்டோபர் 13 ..சைனாவிற்கு வெட்கப்பட வேண்டிய நாள்.

4 comments:

SURYAJEEVA said...

//திருக்குறளில் பயன்படுத்தப் படாத ஒரே உயிர் எழுத்து 'ஔ' ஆகும்.இடம் பெற்றுள்ள இரு மலர்கள்..அனிச்ச மலரும், குவளை மலரும் ஆகும்.//

புதிய தகவல்... பிற இலக்கியங்களில் பயன் படுத்தியதாக தகவல் இருக்கிறதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva

ஹேமா said...

திருக்குறள் பற்றிய தகவல் புதிது.அந்தக் குழந்தை பற்றிய செய்தியைக் கேட்டிருந்தேன்.
கடந்துசென்ற 18 பேரின்மேலும் வழக்குத் தொடர்வதாகச் சொல்லியிருந்தார்கள் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா