Sunday, March 4, 2012

வைரமுத்துவும்..மேற்குத் தொடர்ச்சி மலையும்..
வைரமுத்து விகடனில் எழுதும் மூன்றாம் உலகப் போர் பற்றி..அவ்வப்போது நான் பதிவிட்டு வருகிறேன்.ஏனெனில்..என்னைக் கவர்ந்த தொடர் அது.இந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி வைரமுத்துவே கூறுவது போல வந்த செய்தியில் ஒரு பகுதி.(இந்நிலையில்..தமிழ்வாணன் ஒருவர்தான் தன் கதைகளில் தானே வருவது போல எழுதுவார்..மூன்றாம் உலகப் போரில் வைரமுத்துவும் அதைச் செய்துள்ளார்.வைரமுத்து வைரமுத்தாகவே வருகிறார்)

இனி மேற்குத் தொடர்ச்சி மலைப் பற்றி...வைரமுத்து...

"இது வெறும் மலையல்ல.இந்தியாவின் மேற்கு எல்லையில் அரபிக் கடலுக்கு இணையாக 1600 கிலோமீட்டர் நீண்டிருக்கும் ஒரு தேசம் இது. நர்மதா, தபதி மலைகளை குஜராத்தில் இறக்கிவிட்டது இந்த மலைதான்.கிருஷ்ணா, கோதாவரியை ஆந்திராவில் அனுப்புவதும் இந்த மலைதான்.தமிழ்நாட்டிற்குள் காவிரியாய் பெருக்கெடுக்கும் கபினியைக் கர்நாடகத்திற்கு ஈன்று புறம் தருவதும் இந்த மலைதான்.தமிழ் நாட்டிற்குள் அமராவதியாய் விழியும் நொய்யாற்றையும் கேரளத்தில் உற்பத்தி செய்வதும் இந்த மலைதான்.தமிழ்நாட்டிற்குள் பிறந்து, தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பரவிப் பாயும் தாமிரபரணியைத் தருவதும் இம்மலைத்தொடர்தான். ஆனால் கங்கா,யமுனா நதிகளைப்போல இவை கவனிக்கப்படவில்லை.அசோகச் சக்கரவர்த்திக்குள்ளும்,அக்பருக்குள்ளும்..எங்கள் சேர, சோழ, பாண்டியர் மறைக்கப்படுவது போல இமயமலையின் இடுக்குகளில் எங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை புதைக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் காற்றைத் தடுத்து, மேகத்தின் மடியில் செலுத்தி மழை கறப்பது இந்த மலைதான்.மரங்களின் உயரம் குறைந்தால்..மலையின் உயரம் குறையும்.மலையின் உயரம் குறைந்தால் மழையின் அளவும் குறையும்.இந்த மலை, நதிகளையே நம்பி இருக்கும் எங்கள் தாகப்பட்ட சமூகம்.அதனால் மேற்குத் தொடர்ச்சி மலை காக்கப்பட வேண்டும்.

இம்மலைத்தொடரில் 5000 வகைத் தாவரங்கள், 520 வகைப் பறவைகள், 130 வகைப் பாலூட்டிகள், 65 வகைப் பாம்புகள், 160வகை ஈருயிரிகள் உயிர் தொடர்ச்சியாய் வாழ்ந்து வருகின்றன..

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு புல் தான் ஆயுதம்.1200 புல் வகைகள் மண்டிக் கிடக்கின்றன.மலைத் தரையில் அவைதாம் மழை நீரை மடியில் வாங்கி வைக்கும் வங்கிகள்.விழுந்த மழையை ஆவியாக விடாத காப்புக் கவசங்கள்.அந்தப் புல்லின் அடி மண்ணில் சேமித்து வைக்கும் அமிர்த மழையத்தான், சுனையாய்,ஓடையாய்,அருவியாய்,நதியாய் வடிகட்டி வழிய விடுகிறாள் மலை மாதா..."

வைரமுத்து..மேற்கு மலைத் தொடரைப் பற்றி எழுதியுள்ளது..ஏராளம்...ஒரு சிறு குறிப்பையே நான் தந்துள்ளேன்.முழுதும் புத்தகம் வாங்கி படியுங்கள்..இது நாள் வரை படிக்கவில்லையெனில்.  

டிஸ்கி - கள்ளிக்காட்டு கருவாச்சி வரிசையில் மூன்றாம் உலகப் போரும் இடம் பெறும் என்பது உறுதி,


4 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>கள்ளிக்காட்டு கருவாச்சி வரிசையில் மூன்றாம் உலகப் போரும் இடம் பெறும் என்பது உறுதி,

100% சரி

ஹேமா said...

நானும் தொடர் வாசிக்கிறேன்.அருமையாய் எழுதுகிறார் !

தமிழ்மகன் said...

பதிவர்களுக்கு பணம் தரும் தளம் !

Visit Here For More Details : http://mytamilpeople.blogspot.in/2012/03/profit-sharing-phenomenon.html

தறுதலை said...

ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)