Friday, March 23, 2012

கொலைகாரனும்..நீதிபதியும்..இந்திய அரசும்..


கொலைகாரனும்..நீதிபதியும்..இந்திய அரசும்..

ஒரு ஊரில் ஒரு கொலைகாரன் இருந்தான்.அவன் சகட்டுமேனிக்கு அப்பாவி மக்களைக் குன்று குவித்தான்.அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு வந்தது.அவனுக்கு வாதாட மாட்டேன் என்றார் ஒரு பிரபல வழக்கறிஞர்.

பின் அவர் நீதிபதியைப் பார்த்து..'யுவர் ஹானர்...இந்த வழக்கில் பல கொலைகளை குற்றவாளி செய்திருக்கிறான்.ஆனாலும் அவனை விசாரிக்கலாமா? என அவனையே கேட்க வேண்டும்.கொலை நடந்த இடங்களை ஆராய நீதிமன்றம் அமைக்கும் கமிட்டியையும் அவன் ஒப்புதல் பெற்றே அமைக்க வேண்டும்' என்றார்.

அவனை ஏன் கைது செய்ய வேண்டும்..பின் அரசு வழக்கறிஞர் உள்பட அனைவரும் ஏன் இப்படி பேச வேண்டும்? இதற்கு பதில் அவன் மீது எந்த விசாரணையும் தேவையில்லை என்றே அறிவித்திருக்கலாமே..என நீதிமான்கள் தலையைப் பிய்த்துக் கொண்டனர்.

மேலே சொன்ன கதைக்கும்..ஐ.நா., வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதாகச் சொல்லிவிட்டு..திருத்தங்களைக் கொணர்ந்த இந்திய அரசிற்கும் சம்மந்தமில்லை.  

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலையை ஆதாரத்துடன் மெய்ப்பிக்க வாய்ப்பளிக்கும் ஒரு நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான இரண்டு திருத்தங்களைச் செய்துள்ள இந்திய அரசு, அதன் மூலம் நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டையை உருவாக்கி உள்ளது.

தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதா பிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட்ட ரீதியான தொழில் நுட்ப உதவிகளையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தது.

இதனை, இலங்கை அரசுடன் ஆலோசனை நடத்தி அதன் ஒப்புதலைப் பெற்று நிறை வேற்றவேண்டும் என்று இந்தியா திருத்தம் செய்துள்ளது. இது கொலைக்காரனின் ஆலோசனையுடன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும்.

இது மட்டுமின்றி, விசாரணைத் தொடர்பாகவும், அங்கு போரினால் அனைத்தையும் இழந்த தமிழ் மக்களுக்கு செய்யப்படும் மனிதா பிமான நடவடிக்கைகளையும் ஆராய வரும் ஐ.நா. குழுவினர் இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அந்நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தி, ஏற்றுக் கொள்ளச் செய்துள்ளது.

No comments: