Tuesday, November 13, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 2 (குறள் விளக்கம்)




அவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.
நண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.
நண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.
அவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.
காலம் ஓடியது..
அவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.
அவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான விளக்கம்...

நன்றி...
tm2

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி