Tuesday, November 6, 2012

நமது கருத்தும்..சுதந்திரமும்...




கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் அடிபடும் வார்த்தைகள்...நமது கருத்துகளும்..அதை நாம் இணையத்தில் வெளியிடும் சுதந்திரமும்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கருத்து..கொள்கைகள் பற்றி நம் கருத்துகளை சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு..ஆனால் அதற்கான எல்லை என்ன..? அதை யார் நிர்ணயிக்கிறார்கள்..?

அந்த சம்பந்தப்பட்ட நபர் தான்..

கலைஞரை திட்டி வந்த பின்னூட்டங்கள் அவரது ஃபேஸ்புக்கில் எத்தனை?  எவ்வளவு ஆபாச பின்னூட்டங்கள்...சைபர் கிரைமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் நினைத்திருந்தால்...அவரது புகார்கள் கின்னஸ் சாதனையை அடைந்திருக்கும்...ஆனால் அவர் அதை செய்யவில்லை.இன்னும் சொல்ல போனால்..நம்மால் அதிகம் சுதந்திரத்தோடு திட்ட முடிந்த தலைவர் அவர் ஒருவர்தான்.

சரி ..அது போகட்டும்..விஷயத்திற்கு வருகிறேன்...

ஃபேஸ்புக்கிலும்..டிவிட்டரிலும்..ஒரு பிரபலம் இருந்தால்..உடனே..அவரைத் தொடர்கிறோம்...உங்கள் எண்ணத்தை ஒட்டி அவர் எழுதிவிட்டால்..ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே எண்ணுகிறோம்.ஆனால்..அந்த பிரபலத்தைப் பொறுத்தவரை அவருக்கும் தன்னை ஃபாலோ பண்ணுபவர் எண்ணிக்கை அதிகம் வேண்டும் அவ்வளவுதான்.

ஆர்வக் கோளாறு காரணமாக..நாம் ஏதேனும் சொல்ல...சாரி...எழுதப்போக..அந்த பிரபலத்தின் மூடைப் பொறுத்து..மாட்டிக் கொள்கிறோம்.

இது நமக்குத் தேவையா சொல்லுங்கள்..

மாதா மாதம் சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தறதுக்கே..நாக்கு..வெளியே தள்ளிடும் நிலையில்..பொழுது போக்குக்காக .எழுதப்போக ..போலீஸ்..கோர்ட்..வக்கீல் செலவு ..எல்லாவற்றையும் விட பொழுதே இல்லாமை...மனக்கவலை...தேவையா..

கொஞ்சம் சிந்தியுங்கள்..

முதலில் நாம செய்ய வேண்டியது...

பிரபலங்களைத் தொடர்வதை நிறுத்த வேண்டும்.
நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே தொடர வேண்டும்.
நாம் தொடர்வது யாராயிருந்தாலும்...வரம்பு மீறாது..ஆபாசம் இல்லாமல் கமெண்டை எழுத வேண்டும்..

இதெல்லாம்..முடியாது என்றால்..இணையத்திலிருந்தே ஓய்வு பெறுங்கள்.

இவை என்னுடைய எண்ணங்கள்..அவ்வளவுதான்..

இதை நீ யார் சொல்ல என சண்டைக்கு வந்துவிடாதீர்கள்...பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள்..

இல்லையேல்...பிரபலங்களைத் தொடருங்கள்...அவ்வளவுதான்.

(இந்த பதிவு யாரையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதவில்லை..பொதுவான ஒன்றே)

7 comments:

வேகநரி said...

சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வேகநரி

Easy (EZ) Editorial Calendar said...

கண்டிப்பா உங்கள் கருத்தை எடுத்து கொள்கிறேன்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

கவிதை வானம் said...

நண்பரே ..தங்களின் இப்பதிவு எனது வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளது நன்றியுடன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Easy

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி parithi muthurasan

பொன் மாலை பொழுது said...


/// பிரபலங்களைத் தொடர்வதை நிறுத்த வேண்டும்.
நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே தொடர வேண்டும்.
நாம் தொடர்வது யாராயிருந்தாலும்...வரம்பு மீறாது..ஆபாசம் இல்லாமல் கமெண்டை எழுத வேண்டும்..///


இதுதான் பொருத்தமான வழி. நானும் ஆரம்பத்திலிருந்தே பிரபலங்கள் என்றால் அவர்கள் பக்கமே போவதில்லை.
என்னை பொறுத்தவரை பிரபலங்கள் எல்லோரும் ஒன்றும் அதி புத்திசாலிகள் அல்ல அவர்களை நாம் பின் தொடர !
சரிதானே!?