Saturday, November 17, 2012

சாதியால் வந்தது ஐயா...தொல்லை..




சாதி இரண்டொழிய வேறில்லை...பாலர் பாடத்திலேயே நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.

அதன் பின் பாரதி..'சாதிகள் இல்லையடி பாப்பா..குலம் தாழ்ச்சி..உயர்ச்சி சொல்லல் பாவம்..' என்றார்.

ஆனாலும்..சாதி என்பது...தமிழர்களிடையே..மட்டுமல்ல..இந்தியர் அனைவரிடமுமே அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது.வடக்கே நடக்கும் கௌரவக் கொலைகளே இதற்கு ஆதாரம்.

வாக்குகளுக்காக...சாதிகள் இல்லையென..குடிசை வீட்டில் அமர்ந்து..அவர்களுடன் உணவு உண்டவரும்...ஒரு கட்டத்தில் நானும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவன் என்று பேசினார்.

தன் குடும்பத்தினர் பற்றி எழுதியதற்கு..இவ்வளவு வருடங்களாக தன் ஆதரவு பத்திரிகையாய் இருந்தாலும்..அதிக் கூட கணக்கில் எடுக்காது..'நான் பார்ப்பன ஜாதியில் பிறந்திருந்தால்..அப்பத்திரிகை பல வழக்குகளை சந்திக்கும் என்பதால்..இப்படி எழுதியிருக்குமா?நான் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்ததால்தானே அப்பத்திரிகை இப்படி எழுதுகிறது' என்கிறார் ஒரு தலைவர்.

தமிழகத்தில் ஜாதிக்கட்சியாய் ஆரம்பித்து..பின் அரசியலுக்காக பெயரை மாற்றிய கட்சியும்...இதுவரை எங்கள் சாதியைச் சார்ந்தவர் யாரும்..பதவிக்கு வரவில்லை என்று கூறுவதுடன்..'இனி சாதிக் கட்சிகளுடன் தான் கூட்டணி' என்கிறது..

தமிழகத்தில்..தங்கள் சாதி பெயரில் கட்சிகளோ..சங்கங்களோ அமைக்காதார் யார்..

யாதும் ஊரே..யாவரும் கேளிர்..

இது படிப்பதற்கும்...வாய்ப்பந்தல் போடவுமே பயன்படுகிறது.

தன் வீட்டுக் கல்யாணம் என்றால் முதலில்...நாம் பார்ப்பது அதே சாதியைச் சார்ந்த மணமகனையோ/ மணமகளையோத் தானே!

இப்படி எங்கும்..எதிலும் சாதிதான் என்ற நிலையில்..'பிறாமணாள்' என்ற பெயரை உபயோகிப்பது தவறா..?

பொதுவாக சாப்பாடு ஓட்டல்களில்..'சைவ ஓட்டல்...அசைவ ஓட்டல்' என்றாலே போதுமானது.

அது முடியாது எனில்...மாமி மெஸ், ஆச்சி மசாலா, நாயுடு ஹால். ஐயங்கார் பேக்கரி' என்பது போல..

'ஐயர் ஓட்டல்' என பெயர் வைத்துக் கொள்ளலாம்..அதைவிடுத்து

'பிறாமணாள்' என பெயர் வைத்தது..   அது தப்பா//சரியா..என்பதைவிட.. தேவையா என்பதே கேள்வி..

 சமைக்கப்படும் உணவுவகை தரமாக, சுவையாக இருந்தால்..

அது பிறாமணாளாய் இருந்தால் என்ன..இல்லாவிட்டால் என்ன..மக்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.அந்த உணவகங்களுக்கு.

சரவணபவன் என்ன பிறாமணாளா...தரமான ஓட்டல் என்றால்..இன்று அந்தப் பெயரும் மனதில் தோன்றும் விதமாக ஆகவில்லையா?

அதைவிடுத்து..தேவையில்லாமல்...அசட்டுப் பிடிவாதத்துடன் அப்பெயரை வைத்ததால்...அவருக்கு செலவில்லா விளம்பரம் கிடைத்தாலும்....வாடகைக்கு இருந்த இடத்தை காலி பண்ணச் சொல்லவில்லையா..?

அதனால்..அந்த ஓட்டல் அதிபருக்கு, தேவையில்லாமல்..வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதல்லவா?

இனிமேலும்..தன் பலத்தை உணர்ந்து சாமானியன் முடிவெடுக்க வேண்டும்..

No comments: