Sunday, March 24, 2013

மௌனராகமும்...மணிரத்தினமும்..




1970 களில் வந்த தமிழ்ப்படங்களின் தரத்தைப் பார்த்து..அதை மாற்றும் எண்ணத்துடனே திரையுலகில் பிரவேசித்ததாக பொருள்படும்படி மணிரத்தினம் கூறியிருந்ததைப் பார்த்த போது..இவர் மீது பெரு மதிப்பு வைத்திருந்த நான், "சீ..இவரும் இப்படித்தானா?" என்று எண்ணினேன்.

'கடல்' படம் தோல்வியடைந்த போதும்...'பெருக்கத்து வேண்டும் பணிவு' எனபதை மறந்ததால், கிடைத்த தண்டனை என எண்ணினேன்.

ஆனால்...நேற்று ஆதித்யா சேனலில்..மாலை..இவரது 'மௌனராகம்' படம் ஒளிபரப்பானது..

மனிதன் என்னமாய் எடுத்துள்ளார்..

இளமையும்..குறும்பும், ததும்பும் ரேவதியின் பாத்திரம்...பின்னர் சோகமாய் மாறியும் பிரகாசிக்கிறது.

சுறு சுறு என சுற்றித் திரியும், எதற்கும் பயப்படாத .. கார்த்திக்(மிஸ்டர் சந்திரமௌலி..காமெடி..இவரின் பாத்திரத்திற்கு..ஒரு சோறு பதம்) .என்னமாய் வந்திருக்க வேண்டிய நடிகர்...!  ம்..

எதிலும் நிதானம்..கண்ணியமான மோகன் பாத்திரம்..

தமிழ் கற்று கொள்ளும் சர்தார்ஜி நகைச்சுவை.

என்னைத் தொடும் போது.."கம்பிளி பூச்சி ஊறுவதைப் போல இருக்கு" போன்ற கூர்மையான வசனங்கள்...

பத்து நிமிடம் படம் பார்க்கலாம் என உட்கார்ந்த என்னை..படம் முழுக்க பார்க்க வைத்து..ஆனால் அதே சமயம் பத்து நிமிடங்களே பார்த்த உணர்வை ஏற்படுத்தி.....

"மணி உண்மையிலேயே,,யூ ஆர் கிரேட்"

இப்போதெல்லாம் என்னவாயிற்று உங்களுக்கு..

நான்  பழைய மணிரத்தினம்தான் என்பதை எங்களுக்கு மீண்டும் தரமான படைப்புகள் மூலம் நிரூபியுங்கள்.

நான் அறிவுஜீவி..நான் எடுப்பதையெல்லாம் மக்கள் பார்ப்பார்கள்..என்று நினைக்கும் இயக்குநர்களில் ஒருவராக ஆவதை தவிர்ப்பீர்களாக...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படம்... பாடல்களைப் பற்றி சொல்லவா வேண்டும்...?

நீங்கள் முடிவில் நினைப்பது போல்... சிறிது உயரத்திற்கு சென்றால் மனிதனுக்கு ஏற்படும் ஒரு சிறு தடங்கலே... எப்போதும் தவிர்த்தால் எதிலும் சிறக்கலாம்...

raj-k-sabhapathy said...

you don't seem to know that this film is a copy of mahendran's nenchathai killathe,so all your praises should go to mahendran only-rajasekaran