Tuesday, July 2, 2013

தமிழுக்கு கொம்பு விளைவித்தவர்



தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

நல்ல தகவல்...

ராமலக்ஷ்மி said...

யானை தும்பிக்கையைத் தூக்கிப் பிளிறுவது போன்ற கொம்புகளுடன் கம்பீரமாக இருந்த லை, ளை, னை, ணை எனக்குப் பிடிக்கும்:)! னா,ணா ஆகியனவும் துணையெழுத்து சேர்க்காமல் கீழே வளைத்து எழுதுவோம் அப்போது.

திண்டுக்கல் தனபாலன் said...

எழுத்துக்கும் கூட கொம்பு வேண்டாம் என்று நினைத்து விட்டார்...!

கோவி.கண்ணன் said...

எழுத்தாணியில் எழுதுவது, அச்சுக்கோர்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட இடற்பாடுகளுக்காக தமிழில் எழுத்துகளின் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டன, தற்காலத்தில் கணிணியில் தட்டச்ச அந்த இடற்கள் எதுவும் இல்லை, இப்பவும் நாம் பழைய 'லை' உள்ளிட்டவற்றை மீள் கொண்டு வரலாம்.

கவியாழி said...

தெரிந்து கொள்ளவேண்டிய தகவலைச் தெரிவித்தமைக்கு நன்றி