Friday, November 9, 2012

இலவசம்..இலவசம்..தேவையா?

பக்கத்து வீட்டிற்கு வந்த செய்தித்தாளை இரவல் வாங்கி படிக்கும் போதுதான்..அந்த போட்டி பற்றிய அறிவிப்பை படித்தேன்.இலவசங்கள் தேவையா? என்ற தலைப்பிற்கு கட்டுரை எழுதச் சொல்லி இருந்தார்கள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை யாக வேறு இருந்ததால்..என்னை நண்பன் ஒருவன் சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்..அவனுடன் சாப்பிட்டவாறே இப்போட்டியைப் பற்றிக் கூறினேன்.அவன் கண்டிப்பாகக் கலந்துக் கொள் என்றான்..அப்போதுதான் மேசையில் கிடந்த பேனாவைப் பார்த்தேன்.அதைக் கையில் எடுத்து அதையும், நண்பனையும் மாறி மாறி பார்த்தேன்.வேணுமானால் வைத்துக் கொள் என்றான்.பதிலுக்கு 'நன்றி' என்றவாறே என் சட்டையில் அப்பேனாவைக் குத்திக்கொண்டேன்.

அடுத்த நாள்..அலுவலகம் வந்ததும்..மேசையைத் திறந்து இரண்டு வெள்ளைத்தாள்களை எடுத்தேன்.

'இலவசம்' பற்றி என்ன எழுதுவது..என்று யோசித்த படியே..பக்கத்து மேசை ரகுவைப் பார்த்தேன். தன் வெற்றிலைப் பெட்டியைத் திறந்து ஆடாக மாறி இருந்தான்.அவனிடம் சென்று..இரண்டு வெற்றிலையையும்,சீவலையும் எடுத்து வாயில் போட்டு மென்றவாறே என் இருப்பிடம் வந்து கற்பனை ஆமையை (எவ்வளவுநாள் குதிரை என்று சொல்வது..மேலும்..எனது கற்பனை மெதுவாகவே வருவதால்..ஆமை என்பதே சரி) தட்டிவிட்டேன்.

பொங்கலுக்கு அரசு இலவசமாகத் தரும் வேஷ்டி..சட்டைப் பற்றி எழுதலாமா? இல்லை நண்பகல் இலவச உணவு பற்றி..வேண்டாம் ..வேண்டாம் ..அது குழந்தைகளுக்கு..அதில் கை வைக்க வேண்டாம்.இலவச சைக்கிள் ,இலவச டி.வி., இலவச நிலம் ..எதைப் பற்றி எழுதுவது?

ஆமை ஓட மறுத்தது..

அந்த சமயம் அலுவலகம் கொடுக்கும் இலவச தேநீர் வந்தது.அதைக் குடித்துவிட்டு..வெளியே வந்தேன்..வெளியே நண்பன் ஒருவன் புகைத்துக் கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிகரெட் ஓசி வாங்கினேன்..அவனே பற்றவும் வைத்தான்.சிறிது நேரம் அரட்டை அடித்தேன் அவனிடம்.திரும்ப மேசைக்கு வந்தேன்.

எண்ணம் இலவசம் பற்றியே இருந்ததால்..அலுவலக வேலை ஓட மறுத்தது..மதியம் ஒரு மணி..

பக்கத்து மேசை ரகு..சாப்பிடப் போகலாமா? என்றான்.உடன் தலையாட்டினேன்.ஏனெனில்..அவன் யாரிடமும் எதையும் இலவசமாக பெறமாட்டான்..நான் ஹி..ஹி..ஹி..

அதைத் தவிர ரகு..அவனோடு யார் வந்தாலும்..அவர்களுக்கு செலவு செய்வான்..(பிழைக்கத் தெரியாதவன்)

சாப்பிட்டுவிட்டு..வந்ததும் மேலதிகாரி கூப்பிட்டு வங்கிக்குச் சென்று..கவனிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றைச் சொன்னார்.'மிகவும் அவசரம்..வண்டியில் சென்று விடுங்கள்'என்றார்.

'சார்..நான் இன்று வண்டி கொண்டுவரவில்லை' என ஒரு சின்ன பொய்யைச் சொன்னேன்.'சரி..சரி..ஆட்டோவில் சென்று விடுங்கள்' என்றார்.அப்பாடா..நூறு ரூபாய் கிளைம் பண்ணலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.வங்கி வேலைகளை முடித்துவிட்டு..திரும்ப மணி நாலாகிவிட்டது.இனி எழுதினாற்போலத்தான்..என எண்ணிய போது..நண்பன் ஒருவன் தொலைபேசினான்.அன்று மாலை திரைப்படம் ஒன்றிற்கு இரண்டு டிக்கட் இருப்பதாகவும்..வருகிறாயா? என்றான்..

கரும்பு தின்னக் கூலியா? 'சரி' என்றேன்.அலுவலகம் விட்டு கிளம்பும் போது ஞாபகமாக வெள்ளைத்தாள்களை எடுத்துக் கொண்டேன்.

சினிமா..இரவு டின்னர் எல்லாம் நண்பன் செலவில் முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்ததும்..எழுதத் தொடங்கினேன்...

"ஏழைகளுக்கு..இலவசம்..இலவசம் என்று கொடுத்து அரசு அவர்களை சோம்பேறி ஆக்கிவிட்டது..' என ஆரம்பித்தேன்....

Thursday, November 8, 2012

வள்ளுவனும்..கண்ணழகும்..

கயல்விழி,மான்விழி,குவளைக் கண் என கண்களைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம்.
காதல் ஏற்பட கண் பிரதான உறுப்பாய் அமைந்து விடுகிறது.காதலுக்கு கண்ணில்லை,கண்டதும் காதல் என்றெல்லாம் சொல்லப் படுகிறது.

கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே..கண்கள் இரண்டும் உன்னைத் தேடுதே..கண்ணுக்குள் சிக்கிக் கொண்ட..கண்களும் கவி பாடுதே..கண்கள் இரண்டால்.. என்றெல்லாம் கவிஞர்கள் காதலுக்கும்..கண்ணிற்கும் முடிச்சுப் போட்டுள்ளார்கள். அவ்வளவு ஏன்..காதலியின் இதயத்தில் காதலன் நுழையும் வாசல் அவளின் கண்களே..என்பதை கவியரசு..'இதயத்தின் வாசல் விழியல்லவா?' என்கிறார் ஒரு பாடலில்..

இவர்களுக்கெல்லாம் முன்னோடி யார்..என்றால்..வழக்கம் போல வள்ளுவனே முன் நிற்கிறான்..கண்ணழகு பற்றி அவர் இன்பத்து பாலில் பல குறள்களில் சொல்கிறார்.முதலில் தலைவனைக் கவர்வதும்..கடைசிவரை நிற்பதும் தலைவியின் கண்ணழகே என்கிறார்.

காதலில் அடையும் ஐம்புலவின்பத்திலும் ..கண்டு, கேட்டு எனக் கண்,காது ஆகியவற்றலாகும் இன்பத்தை முதலில் குறிக்கிறார்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

தலைவி வீசும் விழிவேலுக்கு எதிராக தலைவன் அவளை நோக்க..அக்கணமே அவள் பார்வை..அவள் மட்டுமே தாக்குவது போதாது என்று தானையுடன் தாக்குவது போல இருந்ததாம்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

எமனைப் பற்றி தலைவன் ஏதும் அறிந்ததில்லை..ஆனால் எமன் எனப்படுபவன் பெண்ணுருவில் வந்து போர்த்தொடுக்கக் கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை தலைவியின் பார்வையால் அறிகிறானாம்.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்

பெண்மையின் வார்ப்படமாக திகழும் தலைவியின் கண்பார்வை மட்டும் மாறுபட்டு உயிரைப் பறிப்பது போலத் தோன்றுகிறதாம்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்

தலைவியின் புருவம் மட்டும் கோணாமல் நேராக இருக்குமே யாயின்..அவள் கண்கள் அவனுக்கு நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யாதாம்.

இன்னுமொரு இடத்தில்..

பிணயேர் மடநோக்கும்.. என்கிறார்..பெண் மானைப் போன்று இளமைத் துள்ளும் பார்வையாம்...

(கண்ணழகு தொடரும்)

மீள் பதிவு

Wednesday, November 7, 2012

வாய் விட்டு சிரியுங்க..

1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு

2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை

3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்

4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே

5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!

6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க

7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்

Tuesday, November 6, 2012

நமது கருத்தும்..சுதந்திரமும்...




கடந்த சில நாட்களாக இணையத்தில் அதிகம் அடிபடும் வார்த்தைகள்...நமது கருத்துகளும்..அதை நாம் இணையத்தில் வெளியிடும் சுதந்திரமும்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கருத்து..கொள்கைகள் பற்றி நம் கருத்துகளை சொல்லும் சுதந்திரம் அனைவருக்கும் உண்டு..ஆனால் அதற்கான எல்லை என்ன..? அதை யார் நிர்ணயிக்கிறார்கள்..?

அந்த சம்பந்தப்பட்ட நபர் தான்..

கலைஞரை திட்டி வந்த பின்னூட்டங்கள் அவரது ஃபேஸ்புக்கில் எத்தனை?  எவ்வளவு ஆபாச பின்னூட்டங்கள்...சைபர் கிரைமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் நினைத்திருந்தால்...அவரது புகார்கள் கின்னஸ் சாதனையை அடைந்திருக்கும்...ஆனால் அவர் அதை செய்யவில்லை.இன்னும் சொல்ல போனால்..நம்மால் அதிகம் சுதந்திரத்தோடு திட்ட முடிந்த தலைவர் அவர் ஒருவர்தான்.

சரி ..அது போகட்டும்..விஷயத்திற்கு வருகிறேன்...

ஃபேஸ்புக்கிலும்..டிவிட்டரிலும்..ஒரு பிரபலம் இருந்தால்..உடனே..அவரைத் தொடர்கிறோம்...உங்கள் எண்ணத்தை ஒட்டி அவர் எழுதிவிட்டால்..ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே எண்ணுகிறோம்.ஆனால்..அந்த பிரபலத்தைப் பொறுத்தவரை அவருக்கும் தன்னை ஃபாலோ பண்ணுபவர் எண்ணிக்கை அதிகம் வேண்டும் அவ்வளவுதான்.

ஆர்வக் கோளாறு காரணமாக..நாம் ஏதேனும் சொல்ல...சாரி...எழுதப்போக..அந்த பிரபலத்தின் மூடைப் பொறுத்து..மாட்டிக் கொள்கிறோம்.

இது நமக்குத் தேவையா சொல்லுங்கள்..

மாதா மாதம் சம்பளம் வாங்கி குடும்பத்தை நடத்தறதுக்கே..நாக்கு..வெளியே தள்ளிடும் நிலையில்..பொழுது போக்குக்காக .எழுதப்போக ..போலீஸ்..கோர்ட்..வக்கீல் செலவு ..எல்லாவற்றையும் விட பொழுதே இல்லாமை...மனக்கவலை...தேவையா..

கொஞ்சம் சிந்தியுங்கள்..

முதலில் நாம செய்ய வேண்டியது...

பிரபலங்களைத் தொடர்வதை நிறுத்த வேண்டும்.
நமக்கு வேண்டிய நண்பர்களை மட்டுமே தொடர வேண்டும்.
நாம் தொடர்வது யாராயிருந்தாலும்...வரம்பு மீறாது..ஆபாசம் இல்லாமல் கமெண்டை எழுத வேண்டும்..

இதெல்லாம்..முடியாது என்றால்..இணையத்திலிருந்தே ஓய்வு பெறுங்கள்.

இவை என்னுடைய எண்ணங்கள்..அவ்வளவுதான்..

இதை நீ யார் சொல்ல என சண்டைக்கு வந்துவிடாதீர்கள்...பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள்..

இல்லையேல்...பிரபலங்களைத் தொடருங்கள்...அவ்வளவுதான்.

(இந்த பதிவு யாரையும் மனதில் வைத்துக் கொண்டு எழுதவில்லை..பொதுவான ஒன்றே)

Sunday, November 4, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர்

கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.

இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..

எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.

உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து

Thursday, November 1, 2012

ஃபோஃபர்ஸ் ஊழலும்..மகாத்மா காந்தியும்...




ராணுவத்திற்கு ஃபோஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததை நம் பத்திரிகைகள் வெளிக் கொணர்ந்தது நாம் அறிந்ததே.இதில் மகாத்மா காந்தி அவர்கள் பெயரும் இடம் பெற்று அவர் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததும் நமக்குத் தெரியும்...

என்ன தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றுகிறதா..?

தமிழக காங்கிரஸின் கீழே கண்ட அறிக்கை ஒன்று பார்த்ததால் வந்த வினை...



இந்திரா காந்தியை சோனியா காந்தியாக ஆக்கியவர்கள்..இனி வரும் காலங்களில் ராஜீவ் காந்தியை..மகாத்மா காந்தியாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்!!!!

ஆமாம்...இவர்கள் டைம் பத்திரிகையை டயம்ஸ் ஆஃப் இந்தியா என எண்ணியவர்கள் தானே!!



Tuesday, October 30, 2012

தினமணி தலையங்கம்..(கண்டிப்பாக படிக்கவும்) அதுவரை... இது தொடரும்!



உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலஉதவிகள் வழங்கியதில் முறைகேடு குறித்து நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று அறிவித்தார் அப்போது சட்டத் துறை அமைச்சராக இருந்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித். அமைச்சரவையில் மாற்றம் என்று பேசப்பட்டபோது, குர்ஷித் பதவி விலகுவார் என்று எதிர்பார்த்தால், அவரை வெளியுறவு அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர்.

ஐபிஎல் அணி உரிமம் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக புகார்கள் எழுந்து, பெரிய விவகாரமாகி, அதனால் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்த சசி தரூர், தற்போது மீண்டும் மனித வள ஆற்றல் துறைக்கு அமைச்சராக்கப்பட்டுள்ளார். மிகவும் பொருத்தமான பதவிதான் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது!

ஊழல் புகாரில் சிக்கியவர்கள், அந்த ஊழல் குற்றச்சாட்டில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் பொய்யானவை என்று நிரூபிக்கப்படும்வரை தாங்களாகவே பதவி விலகுவதுதான் அரசியல் நாகரிகம். சல்மான் குர்ஷித் மீதும், சசிதரூர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று காரணம் கூறுகிறார்கள். நிரூபிக்கப்படாதவரை தவறு இல்லை என்றால், ஆ. ராசாவையும் தயாநிதி மாறனையும் மீண்டும் அமைச்சர்களாக்கி அழகு பார்த்திருக்கலாமே...

ஆ. ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கும் வக்காலத்து வாங்குவதற்காக இதைக் கூறவில்லை. தமிழகம் காரணமே இல்லாமல் வஞ்சிக்கப்படுகிறதே என்கிற ஆதங்கம்தான். மத்திய அமைச்சரவை மாற்றம் எத்தகைய அளவில் எப்படி நடந்திருந்தாலும், இந்த மாற்றத்தால் தமிழகத்துக்குக் கிடைத்தது என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் யாருக்குமே உளப்பூர்வமான அக்கறை இல்லை என்பதற்கு அமைச்சரவை மாற்றத்தில் தமிழகம் தவிர்க்கப்பட்டிருப்பது ஓர் உதாரணம்.

புதிய அமைச்சரவை மாற்றம் குறித்து திமுக தலைவர் கருணாநிதியை அண்மையில் அமைச்சர் நாராயணசாமி சந்தித்துப் பேசியபோது, அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு நல்ல இலாகா அளிக்கும்படி கருணாநிதி கூறியதாகப் பேச்சு எழுந்தது. நல்ல இலாகாவாகக் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியானபோது, அமைச்சர் பதவிகளை தமிழ்நாட்டின் நலனுக்காகப் பயன்படுத்தக் கேட்கிறாரோ என்று நினைக்கத் தோன்றியது. அப்படி ஏதாவது செய்து, தமிழகத்தின் நலனுக்காகத் திட்டங்களைச் செயல்படுத்தி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நல்ல பெயருடன் மக்கள் செல்வாக்கைத் திமுக பெற்றுவிடுமோ என்கிற அச்சம் அதிமுக தலைமைக்கேகூட ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

இன்றைய தமிழகத்தின் உயிர்த்தேவை மின்சாரம். உடனடியாக மின் உற்பத்தி செய்ய இயலாத நிலையில், வெளியில் இருந்துதான் விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாக வேண்டும். ஆனால், மத்திய மின்வழித்தடத்தில் இடமில்லை என்று மறுக்கப்பட்டதால்தான் தமிழகத்தால் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தாலும் மின்சாரத்தைக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை.

"வடமாநிலங்கள் தன் மின்வழித்தடப் பாதையை நவீனமயமாக்கி, கூடுதல் பாதைகள் அமைத்துத் தடையின்றி மின்சாரம் கிடைக்க வகை செய்துகொண்டுவிட்டன. கடைக்கோடியில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கரிசனம் காட்டவில்லை. கடந்த பல ஆண்டுகளாக, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று வரும் தமிழகத்தின் காங்கிரஸ், திமுக அமைச்சர்கள் இத்தகைய மின்வழித் தடத்தை தமிழகத்துக்காக அமைக்கத் தவறிவிட்டனர்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில் - பிரச்னையை ஜெயலலிதா திசை திருப்புகிறார் என்பது மட்டுமே.

முதல்வர் ஜெயலலிதா இத்தகைய புகார் எழுப்பிய அடுத்த கணமே அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, உண்மையிலேயே தமிழர்களின் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு தன்னால் உதவ முடியும் என்று நினைத்திருந்தால், தற்போது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மின்துறையைத் தனது திமுக அமைச்சர் ஒருவருக்குப் பெற்றுத்தந்து, தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்கச் செய்திருக்க முடியும். இதை அவர், தனது தனிப்பட்ட சாதனையாகச் சொல்லிக் கொள்ளவும், 2014-மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசவும் வாய்ப்பாக அமைந்திருக்கும். இந்த வாய்ப்பை திமுக தலைவர் கருணாநிதி தவறவிட்டுவிட்டார். தமிழர் நலனும் நழுவிப் போனது.

மத்தியில் தமிழகத்துக்கான ஒரு மின்துறை அமைச்சர் இருந்தால், நாம் நீதிமன்றத்தின் படியேறி உபரி மின்சாரத்தைக் கேட்டு நிற்க வேண்டியதில்லை. மின்வழித்தடங்களை சரியாக அமைத்துக்கொண்டு, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் சிக்கல் இருக்காது. இதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகவே தெரியவில்லையே...

ரயில்வே, மின்சாரம், விவசாயம் போன்ற துறைகளை நமது மாநிலக் கட்சிகள் கேட்டுப் பெற்று அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை செய்வதை விட்டுவிட்டு, தனிப்பட்ட முறையில் பயனளிக்கும் துறைகளைத்தான் கேட்டுப் பெறுகின்றன. இல்லையென்றால், அப்படி வாய்ப்பிருந்தும் அமைச்சர் பதவியே வேண்டாம் என்று வலிய வரும் அதிர்ஷ்டத்தையும் எட்டி உதைத்து விடுகிறார்கள்.

÷இன்றைய தமிழக ஆளும் கட்சி மத்திய அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கட்சி. அதனால் தமிழகத்திற்கு வர இருப்பது வரப்போவதில்லை. சரி, மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவாவது தமிழக நலன் கருதி செயல்படுகிறதா என்றால், மக்களுக்கு நன்மை ஏற்பட்டால் அதன் பயன் அதிமுகவுக்குப் போய்விடுமோ என்று பயந்து, வேண்டுமென்றே வாளாவிருக்கிறது.

தங்களது தலைமையில் கூட்டணி அமையப் போவது இல்லை என்பதாலும், தங்களை மாநிலக் கட்சிகள் வளரவிடப் போவதில்லை என்பதாலும் தேசியக் கட்சிகளுக்கும் தமிழகத்தின் மீது அக்கறை இல்லை. அப்படியானால், தமிழகத்தின் வருங்காலம்தான் என்ன? பகலில் இரவும், தெருவில் போதையுமாகத் தேர்தலுக்கு தேர்தல் நமது வாக்குகளுக்கு வழங்கப்படும் பிச்சைக் காசை எதிர்பார்த்து வாழ்வதுதான் நமது தலைவிதியா?

÷தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 39 மக்களவை உறுப்பினர்களும், கட்சி மனமாச்சரியங்களை மறந்து, தமிழகத்தின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எப்போது செயல்படுகிறார்களோ, ஓர் குரலில் தமிழகத்தின் கோரிக்கைகளைத் தில்லித் தலைமைக்கு வலியுறுத்திப் பெறப் போகிறார்களோ, அப்போதுதான் தமிழகத்தின் தலைவிதி திருத்தி எழுதப்படும். அதுவரை... இது தொடரும்...!

Monday, October 29, 2012

மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் வரை தண்டனை..




பள்ளிக்கூடங்களில் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான புகார்கள், கட்டாய டியூசன் விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டுவர பள்ளிக்கூடங்களில் நேர்மையற்ற நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.
இந்த புதிய சட்டம் சொல்வது என்ன?
- மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்கள் தகுதிவாய்ந்த தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கக்கூடாது.
- குறைவாக மதிப்பெண் பெற்றதற்காக மாணவர்களை பள்ளியிலிருந்து நீக்கவும்கூடாது. மாணவர்களை வேண்டுமென்றே பெயில் ஆக்கக்கூடாது.
- பள்ளிக்கூட பருவங்களின் இடையில் கட்டணம் வசூலித்தால் அதுவும் ஆராயப்படும்.
- விதிமுறை மீறி கேபிடேஷன் கட்டணம் வசூலிக்கக்கூடாது.
- 6-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றில் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தி சேர்க்கலாம்.
- மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இரண்டும் விதிக்கப்படும்.
டெல்லியில் வரும் நவம்பர் 1- ந் தேதி நடைபெற உள்ள மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தில் இப்புதிய சட்டத்துக்கான மசோதா முன்வைக்கப்பட இருக்கிறது. இக்கூட்டத்துக்குப் பிறகு சட்டமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.


டிஸ்கி- அது சரி...மாணவர்கள் ஆசிரியர் மீது பொய்ப்புகார் கொடுத்தால்....
        ஆசிரியர் பிழைப்பே..கம்பங்கூத்தாடி கம்பின் மீது நடப்பது போல...கரணம் தப்பினால் மரணம்  ????


Saturday, October 27, 2012

ஆஜீத் வெற்றீ முன்னரே தீர்மானிக்கப்பட்டதா...??




சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 போட்டியில் ஆஜீத் வெற்றி பெற்றுள்ளார்.அவருக்கு வாழ்த்துகள்..

ஆனால்...இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி பரவலாய் இருக்கிறது.முந்தைய ஜூனியர் 2 போட்டியில் சந்தேகமின்றி அல்கா வெற்றி பெற்றது குறித்து எள்ளளவும் சந்தேகம் எழவில்லை.

ஆனால் இந்த போட்டி...

ரஹ்மான் வருவது ரகசியமாய் வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.ஆனால்..அஜீத்தை உனக்குப் பிடித்தவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டு அவனும் ரஹ்மான் சார்தான் தனக்குப் பிடித்தவர் என்றான்.

ரஹ்மான் பாடிய பாடல்களே அவன் பாடினான்.தவிர்த்து வந்தே மாதரம் பாடலை போட்டியில்..அதுவும் ஃஃபைனலில் யாரும் பாடமாட்டார்கள்.அப்பாடல் முதலில் கிளாஸிகள் பாடலோ..படப்பாடலோ இல்லை.

(போட்டிமுடிவு எப்படிருந்தாலும்..ஏதேனும் குறைகள் சொல்லக்கூடும்..சந்தேகங்களும் வரும் )

(முன்னதாக..கௌதம் ஒருமுறை 'பிச்சைப்பாத்திரம்:" பாடல் பாடிய போது..'இது இச் சுற்றுக்கு ஏற்றபாடல் இல்லை' என மறுக்கப்பட்டது..நினைவிருக்கலாம்)

எது எப்படியோ...இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியமைக்கு விஜய்டீவிக்கு பாராட்டுகள்.

லட்சக்கணக்கில் எஸ் எம் எஸ் அனுப்பி...எதிர்பாராத வருவாயை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கிய மக்களுக்கும் பாராட்டு (?!)

பிரகதி இரண்டாம் இடத்தில் இருந்தாலும்..கண்டிப்பாக முதலிடத்திற்கு தகுதியானவர்.

சுகன்யா தான் சற்றே ஏமாற்றிவிட்டார்.

(டிஸ்கி - தலைப்பு வெற்றீ என்று போடப்பட்டுள்ளதே எனக் கேட்கலாம்..வெற்றி...இழுக்கப்பட்டால்..? அதற்கு அர்த்தம் என்ன..உங்களுக்கேப் புரியும் )

நிருபர்களை நாய் எனத் திட்டிய விஜய்காந்த்...





செ‌ன்னை ‌விமான‌ ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு வ‌ந்த தே.மு.‌‌தி.க. தலைவ‌ர்க‌ள் ‌விஜயகா‌ந்‌த், நிருப‌ர்க‌ளை கெ‌ட்டவா‌ர்‌த்தைகளா‌ல் ‌‌தி‌ட்டிய ச‌ம்பவ‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

மதுரை மத்திய தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி தே.மு.தி.க எம்.எல்.ஏ. தமி‌ழ்அழக‌ன் ஆ‌கியோ‌ர் நே‌ற்று முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து, தொகு‌தி ‌பிர‌ச்சனை கு‌றி‌த்து கோ‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ராதாபுர‌ம் தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. மை‌க்கே‌ல் ராய‌ப்ப‌ன், பேராவூர‌ணி தே.மு.‌தி.க. எ‌ம்.எல்.ஏ. நடிக‌ர் அரு‌ண்பா‌ண்டிய‌ன் ஆ‌கியோ‌ர் கோ‌ட்ட‌ை‌யி‌ல் இ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை ச‌ந்‌தி‌த்து பே‌சின‌ர்.

ஜெயல‌லிதாவுட‌ன் ச‌ந்‌தி‌ப்பை தொட‌ர்‌ந்து தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் 4 பே‌ரு‌ம் அ.‌தி.மு.க.‌வி‌ல் இணைய போ‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று அர‌‌சிய‌ல் வ‌ட்டார‌த்‌தி‌ல் பரபர‌ப்பாக பேச‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் மதுரை செ‌ல்வ‌த‌ற்காக செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌‌த்‌தி‌ற்கு மனை‌வி ‌பிரேம லதாவுட‌ன் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் இ‌ன்று காலை வ‌ந்தா‌ர்.

அ‌ப்போது, ‌தினகர‌ன் ‌‌‌‌நிருப‌ர் ‌பாலு, விஜயகா‌ந்‌திட‌ம் ரெ‌க்கா‌ர்டு மை‌க்கை ‌நீ‌ட்டினா‌ர். இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அட‌ை‌ந்த ‌‌விஜயகா‌ந்‌த் அ‌ந்த ‌நிருபரை சரமா‌ரியாக கெ‌ட்ட வா‌ர்‌த்தைகளா‌ல் ‌தி‌ட்டினா‌ர்.

‌பி‌ன்ன‌ர், கூடி‌யிரு‌ந்த ‌நிருப‌ர்களை பா‌ர்‌த்து, சொ‌ல்லு‌ங்க சா‌ர் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியது‌ம், முத‌ல்வ‌ர் ஜெயல‌‌லிதாவை தே.மு.‌தி.க. எ‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் ச‌ந்‌தி‌த்து பே‌சியது கு‌றி‌த்து ‌நிருப‌ர்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர்.

இத‌ற்கு ப‌தி‌‌ல் அ‌ளி‌க்காத ‌விஜயகா‌ந்‌த், ‌மி‌ன்சார‌ம், டெ‌ங்கு ப‌த்‌தி பேசுவோ‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர். அ‌ப்போது, சூ‌ரிய ‌மி‌ன்ச‌க்‌தி மூல‌ம் 3000 ஆ‌யிர‌ம் ‌மெகாவா‌ட் ‌மி‌‌ன்சார‌ம் தயா‌ரி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று முத‌ல்வ‌ர் அ‌றி‌வி‌த்து‌ள்ளாரே எ‌ன்று ஒரு ‌நிருப‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

இதனா‌ல் மேலு‌ம் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌விஜயகா‌ந்‌த், அ‌ந்த அ‌ம்மா‌விட‌ம் போ‌ய் கேளுடா எ‌ன்று கோபமாக பே‌சி‌வி‌ட்டு மன‌ை‌வியுட‌ன் நட‌ந்து செ‌ன்றா‌ர்.

‌நிருப‌ர்க‌ள் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்று கே‌ள்‌வி கே‌ட்க முய‌ன்றா‌ல் ஆ‌த்‌திர‌‌த்‌தி‌ன் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ‌விஜயகா‌ந்‌த், நா‌ய்... நா‌ய்... எ‌ன்று ‌நிருப‌ர்களை ‌‌தி‌ட்டி‌வி‌ட்டு ‌விமான ‌நிலைய‌த்‌திற‌்கு‌ள் ‌விஜயகா‌ந்‌த் செ‌ன்று ‌வி‌ட்டா‌ர்.

(வெப் துனியா)

டிஸ்கி- தி மு க விற்கு பிரதான எதிர்க்கட்சி ஆகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது

Friday, October 26, 2012

தமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்...


மத்திய அமைச்சரவையில் இருந்து திராணமுல் காங்கிரஸ் விலகியுள்ள நிலையில் ஏற்கனவே தி.மு.க வினரின் பதவி விலகளாலும் அமைச்சரவையின் சில இலாகாக்கள் காலியாக உள்ளன. இதனால் சில அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளிலும் இருந்துவருகின்றனர்.


இதனை அடுத்து இரண்டு நாட்களில் அமைச்சரவை மாற்றம் பெற உள்ளது, அதில் ராகுல் காந்தி போன்ற புது முகங்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படும் என்ற கருத்தும் நிகழ்கிறது.


அமைச்சரவை மாற்றங்கள் நடக்கவிருக்கும் வேலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பிரதமர் மன் மோகன் சிங் உடனான லாவோஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.

இதனால் அமைச்சரவையில் இன்னும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் பெறுவது உறுதியாகியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி, வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் புதிய பட்டியலில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஸ்கி- கர்நாடகாவின் முதல்வராயிருந்த போதும் சரி,மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் சரி...தமிழனின் தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே..

Thursday, October 25, 2012

மகாத்மா காந்தியை 'தேசத் தந்தை' என்று அழைக்க சட்டத்தில் இடமில்லை



தேசதந்தை என்று மகாத்மா காந்தியை அழைக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை என தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.

லக்னோவை சேர்ந்த ஐஷ்வர்யா பராஷர் என்ற மாணவி மகாத்மா காந்தி பற்றி விவரங்கள் தேடி வந்துள்ளார். அப்போது அவருக்கு மகாத்மா காந்தியை தேச தந்தை என்று அழைக்கப்பட வேண்டிய காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது..

இதனை அறிய அவர் தேசத்தந்தை என்று காந்தியை குறிப்பிடும் காரணங்கள் தேட தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் படி இந்திய அரசியல் சட்டத்தில் கல்வித்துறை மற்றும் ராணுவம் தவிர மற்ற துறையினருக்கு எந்த வித சிறப்புப் பெயரும் வழங்கும் உரிமை இல்லை என்று தெரியவந்தது.

உடனடியாக ஐஸ்வர்யா பராஷர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு எழுதி மகாத்மா காந்தி தேசத் தந்தை என்று அறிவிக்கை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தனது கோரிக்கை என்னவானது என்று மீண்டும் அந்தச் சிறுமி தகவலறியும் உரிமைச் சட்டத்தை நாடினார். இவரது இந்த மனு உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கம் அளிக்க அனுப்பப்பட்டது.

அப்போதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் படி மகாத்மா காந்திய தேசத் தந்தை என்று அழைக்கும் சிறப்புப் பட்டத்தை அரசு தர முடியாது என்பது தெரியவந்துள்ளது.

(வெப் துனியா)



Wednesday, October 24, 2012

மானுடம் பொய்க்குதம்மா! - தலையங்கம் (கண்டிப்பாய் படிக்கவும்)

(தினமணி பத்திரிகைச் செய்திகள் குறித்து எனக்கு கருத்து வேறுபாடுண்டு.ஆனால் அவர்கள் எழுதும் தலையங்கம் பௌல சமயங்களில்

அருமையாய் இருக்கும்..இது அவற்றில் ஒன்று)


எல்லா வீடுகளிலும் பால் வாங்கப்பட்டிருக்கும்.  பண்டிகை நாளில் பால் இல்லாமல் இருக்காது. அந்தப் பால் கலப்படம் இல்லாததுதானா?

இந்த ஆய்வு முடிவுகள் இந்தியா முழுவதிலும் ஆங்காங்கே எடுக்கப்பட்ட மாதிரிச் சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது என்பதும், இந்த மாதிரிச் சான்றுகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் தெரிந்ததுதான். இத்தகைய ஆய்வு முடிவுகளைப் 10 விழுக்காடு கூடுதலாக அல்லது குறைவாக மதிப்பிடலாமே தவிர, இந்த ஆய்வு முடிவுகளை முழுவதுமாகத் தவறு என்று குறை சொல்லிவிட முடியாது. இந்தியாவில் விற்கப்படும் பாலில் கலப்படம் மிக அதிக அளவில் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இன்றைய சூழ்நிலையில், பால் என்பது இந்தியாவில் எல்லா வீடுகளிலும் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. பால் இல்லாமல் குழந்தை உணவு இல்லை. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் பால் மிகவும் அவசியமான உணவாக ஆகிவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் இடம்பெற்றுவிட்ட தேநீர்க் கடைகளில் பால் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அனைவரும் ஏதோ ஒருவகையில் பால் மற்றும் பால் பொருள்களை உண்கிறோம்.
இவ்வாறாக நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட பாலில் 68 விழுக்காடு கலப்படம் என்றால், நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆண்டுதோறும் பாலின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2009-10-ஆம் ஆண்டில் பால் உற்பத்தி 11.60 கோடி டன். 2010-11-ஆம் ஆண்டில் இது 12.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. நிகழாண்டிலும் 60 லட்சம் டன் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாலுக்கான சந்தைத் தேவை அதிகரிக்கிறது. அதற்கேற்ப கலப்படமும், எடை, அளவுக் குறைபாடுகளும் அதிகரிக்கின்றன.
பால் உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அவர்களால் அனைவரது தேவையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் இந்த இடைவெளியை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. இவர்களில் பிரபலமான முத்திரை நிறுவனங்கள் சில இருப்பினும், பல நூறு நிறுவனங்கள் யாரும் கேள்விப்படாத பெயரில் செயல்படுவன. இவற்றின் மீது அரசின் கண்காணிப்பு மிகவும் குறைவு.
ஊரகப் பகுதிகளில் நடத்திய ஆய்வுகளில் கலப்படம் செய்யப்பட்டது கண்டறியப்பட்ட பாலில் 83 விழுக்காடு கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை. நகர்ப்புறங்களில் 66 விழுக்காடு கலப்படப் பால் கேன்களில் விநியோகம் செய்யப்பட்டவை.
இந்தக் கலப்படத்தில் தண்ணீர் கலப்படம்தான் அதிகம். தண்ணீர் கலப்பதால் பாலின் சத்து குறைந்துவிடுகிறது என்பது ஒருபுறம் இருக்க, அந்தத் தண்ணீர் தூய்மையான தண்ணீராக இல்லை என்பதுதான் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சில இடங்களில் பால் அடர்த்தியாக இருக்க சோப்புநீர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பால்பவுடர் கலக்கப்பட்டிருப்பதும், சிலவற்றில் பாலின் தன்மையை சமன்படுத்த வேதிப்பொருள்களைச் சேர்த்திருப்பதும் தெரியவந்துள்ளது என்று இந்த உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது.
தமிழ்நாட்டில் அரசு நிறுவனமாகிய ஆவின் கூட்டுறவு பால் உற்பத்திக் கூடத்தைத் தவிர மற்ற அனைத்தும் தனியார் நிறுவனங்கள்தான். இவற்றில் எத்தனை நிறுவனங்களை நம்பலாம், அல்லது கேன் மூலம் பால் விநியோகிப்போரில் எத்தனைப் பேரை நம்புவது?
தற்போது மின்தட்டுப்பாடு காரணமாக, குளிரூட்டு வசதி இல்லாததால் ஆவின் பால் உள்பட அனைத்துப் பாலும் விரைந்து கெட்டுப்போய், திரிந்து விடுகின்றன என்று புகார்கள் எழுகின்றன. பால் விரைந்து கெட்டுப்போவதற்கு மின்தடையால்  குளிரூட்டு வசதி இல்லை என்பது ஆணித்தரமாகச் சொல்ல முடிவதைப்போல, இந்தப் பால் தரமானதாக இல்லை என்பதால்தான் விரைந்து கெட்டுப்போனது என்று நம்மால் சொல்ல முடிவதில்லை. ஏனெனில், நாம் நம்புகிறோம். நமக்கு வழங்கப்படும் பால் உண்மையிலேயே தரமானது என்று!
இந்தியாவில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 10 மாநிலங்களின் வரிசையில் தமிழகம் 8வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பால் உற்பத்தி செய்கிறது. தமிழகம் வெறும் 60 லட்சம் டன் மட்டுமே! இதிலும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் மூலம் கிடைக்கும் அளவு மிகவும் குறைவு.
ஆவின் பால் விநியோக சேவையில் குறைபாடு இருந்தாலும், அவர்கள் கலப்படம் செய்தார்கள் என்பதாக முறைகேடு இல்லை. ஆவினைப் பொருத்தவரை, நிர்வாக ஊழல்கள் உண்டே தவிரக் கலப்படம் இல்லை. ஆனால் ஆவின் நிறுவனம் ஏன் வளரவில்லை, அதை வளர விடவில்லை என்கிற கேள்விக்கு சரியான பதிலில்லை.
இன்று தமிழகத்தில் தனியார் பால் விநியோகம்தான் அதிகமாக இருக்கிறது. தமிழக அரசு பால் தரத்தைச் சோதிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பால்பண்ணைகளிலும் வாரம் ஒருமுறையாகிலும் திடீர் ஆய்வுகள் நடத்தி, பால் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் விற்பனை முகவர்கள் சங்கமும் வலியுறுத்தியுள்ளது.
மனிதனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் இயற்கை, குழந்தைகளுக்குத் தாயுருவில் பாதுகாப்பு அளிக்கிறது. போஸ்டர்களையும், குப்பைக் கூளங்களையும் தின்கிற அவலம் ஏற்பட்டாலும் பசு தனது கன்றுக்குக் கலப்படம் இல்லாத பாலைத்தான் வழங்குகிறது. ஆனால் மனிதன்...?

Tuesday, October 23, 2012

யாரிடத்து போயுரைப்பேன் -கலைஞர்





உள்கட்சி சண்டையால் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும், மத்திய இணை அமைச்சருமான பழனிமாணிக்கம் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு "நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும், 90 வயதில் பொதுச்செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம்.

திமுகவினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கிறார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்சி வந்து விட்டது, கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவரீதியாக உணர்கிறேன்.

கட்சியினருடன் பேசிவிட்டு இரவு 11 மணிக்கு உறங்கச் சென்றால் உள்கட்சியை அரித்து வரும் இத்தகைய குழுக்கள் பற்றிய வேதனைதான் என்னை சூழ்ந்து கொள்கிறது. தூங்க விடாமல் செய்கிறது.

மத்திய இணை அமைச்சர் பழனிமானிக்கம் சனிக்கிழமை (அக்டோபர் 20) அளித்த பேட்டி குறித்து அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவனும், முரசொலி செல்வமும் கூறியவுடன், இன்றிரவு என் தூக்கம் போச்சு என்றுதான் கூறினேன். அதுபோலவே இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.

அண்ணா சொன்ன குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது மறந்துவிட்டதா? தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய நானும், அன்பழகனும் இரண்டு மணி நேரம் செலவிட்டோம். அப்போது பேசிய துரைமுருகன், தஞ்சை மாவட்டம் தலைவரின் (கருணாநிதி) நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டம். அங்கு அவர் கூறுவதுதான் வேதவாக்கு. அங்கு குழு உருவாகலாமா என்று கண்ணீர் மல்க கேட்டாரே? அந்த மாவட்டத்திலா இந்த தலைகுனிவு?

இரண்டு நாள்களுக்கு முன்பு என்னைச் சந்தித்த பழனிமாணிக்கம், அவரது தொகுதியில் நடப்பதைப் பற்றி சொன்னார். பொறுத்திருங்கள். தலைமைக்கு புகாராக எழுதிக் கொடுங்கள் என்றேன். அதற்குள் என்ன அவசரம்? எதற்காக இந்தப் பேட்டி? நான் அனைவருடனும் அன்புடன் பழகுகிறேன் என்பதை பலவீனமாக எடுத்துக் கொண்டு எது வேண்டுமானாலும் செய்வதா? நான் அனைத்தையும் மன்னித்து விடுகிறேன். மறந்து விடுகிறேன் என்பதற்காக எதையும் செய்யத் துணிவதா?

எதிர்க்கட்சிகளிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவதா அல்லது நமக்குள் நிலவும் குழு பேதத்தை போக்குவதா? இலையில் நிறைய பண்டங்களைப் பரிமாறிவிட்டு ஒரு ஒரத்தில் சாணத்தை வைப்பதற்கு பெயர் விருந்தோம்பலா? எதற்காக நான் இருக்கிறேன்? எதற்காக தலைமை இருக்கிறது? மாவட்டத்துக்கு மாவட்டம் இது போன்றதொரு நிலைமை உருவானால் அதற்கு எங்கே எல்லை?

மனசாட்சி உறுத்தியதால் பேட்டி கொடுத்த இரவே பழனிமாணிக்கம் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தார். டி.ஆர். பாலுவும், பழனிமாணிக்கமும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலுவை மேற்கு வங்க மாநில எம்.பி.க்கள் தாக்க வந்தபோது 5-வது வரிசையில் இருந்த பழனிமாணிக்கம் முதல் வரிசைக்கு ஒடி வந்து தடுத்தார். அந்த உணர்வு இன்று எங்கே போய்விட்டது?

பழனிமாணிக்கத்தை தாக்க யார் முற்பட்டாலும், ஓடிவந்து பாதுகாக்க கூடியவர் பாலு.

ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் என்ற நிலையில் யாரிடத்து போயுரைப்பேன் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

டிஸ்கி-  கலைஞரும்...இப்படி சொல்லியிருக்க வேண்டாமே...மூன்றாம் நபருக்குத் தெரியாமல்..உட்கட்சி பேச்சு வார்த்தையில் இப்பிரச்னையை தீர்த்திருக்கலாம்.
        என் காங்கிரஸ் நண்பன் ஒருவன் கோஷ்டி பற்றி...நீங்கள் பேசாதீர்கள் என்கிறான் என்னிடம்.

Monday, October 22, 2012

புரசைவாக்கம் புன்னகை பவன் - உணவகம்..




புரசைவாக்கம்..தானா தெருவு தாண்டி சென்றால் ஒரு சின்ன குறுக்குத் தெரு வரும். தெருமுனையில் சிறுநீர் கழிக்கக்கூடாது என சுவரில் கிறுக்கியிருப்பார்கள்.ஆனால் அங்குதான் சிறுநீர் கழித்து நாற்றம் அடிக்க வைத்திருப்பர் குடிமகன்கள்.

அதைத் தாண்டி சற்றுச் சென்றால்..புன்னகை பவனைப் பார்க்கலாம்.போர்டு ஏதும் இருக்காது.அங்கு விசாரித்தால் சின்ன குழந்தைகளும் புன்னகையுடன் இடத்தைக் காட்டும்.

நீங்கள் உள்ளே நுழையும் போது வாயிலில் ஒருவர் கை கூப்பி புன்னகையுடன் 'வாங்க..வாங்க.'.என்று புன்னகையுடன் வரவேற்பார்.கல்யாண மண்டபத்தில்..பெண்ணைப் பெற்றோர்., பிள்ளை வீட்டாரை வரவேற்கும் தோரணைப் போலவே இருக்கும்.

நீங்கல் புன்னகையை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று..ஒரு மேசையில் அமர்ந்து..இரண்டு பரோட்டா, பீஸ்மசாலா ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தால் கால்மணி நேரத்தில் பரோட்டா உங்கள் முன் வந்து அமரும்....சும்மா பள பள என..

கண்டிப்பாக நெய் போட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால்..நெய் போன்ற வஸ்து உபயோகப்பட்டிருக்கக் கூடும்.அதை பிட்டு..பீஸ் மசாலாவை சேர்த்துச் சாப்பிட்டால்....அடடா...அடடா..

"தெய்வம் இருப்பது எங்கே..அது இங்கே..வேறெங்கே..' என பாட ஆரம்பித்துவிடுவீர்கள்.

பரோட்டா மாஸ்டரைப் பார்த்தால்...வேர்த்துக் கொட்ட இருப்பார்..பரோட்டாவின் பளபள ப்புக்கு காரணம் தெரிந்துவிடும்.

விலையும் அதிகம் இல்லை...

ஆனால்...அங்கு விஜயம் செய்து..உங்கள் உடல் நலம் கெட்டால்...நான் பொறுப்பல்ல.


Sunday, October 21, 2012

பீட்சா..(மாற்றான விமரிசனம்)




பீட்சா படம் பற்றி விமரிசனம் செய்ய ஆசை.

நாம் ஒரு நல்ல படத்தைப் பார்த்தால்...அந்த சந்தோசத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.

படம் பற்றி..விவாதிப்போம்..கிளைமாக்சை அலசுவோம்.

படம் நன்றாய் இருந்தால்..விமரிசனம் நன்றாக எழுதுவோம்.

ஆனால் பீட்சா பற்றியும் விமரிசிக்க ஆசை.

படத்தின் முடிவை வெளியே சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்...

ஆரம்பம் பற்றி மட்டும் கூறிவிட்டு..முடிவைக் கூறாவிட்டால் முழு விமரிசனமும் ஆகாது என்பதால் படம் பற்றி விமரிசனம் செய்வதைத் தவிர்த்திருக்கிறேன்.

இதற்கு மேலும் எழுதினால்...நான் முடிவைச் சொல்லிவிடுவேனோ என அஞ்சுகிறேன்.

வெள்ளித்திரையில் மட்டுமே பார்த்து..முடிவை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

யாரேனும் உண்டோ..?






வானவூர்தி ஒலிக் கேட்டு

விண்ணைப் பாராதார்

மழை கொட்டுகையில்

மனதில் மத்தாப்பாய் ரசிக்காதார்

விபத்து நடந்ததும்

விரைந்து சென்று

வேடிக்கைப் பார்க்காதார்

கடந்து சென்ற அழகைக் காண

கழுத்து வலிக்க திரும்பாதார்

பேருந்து நிறுத்தத்தில்

சரியாக நிறுத்தும் ஓட்டுநர்

ஆளும் கட்சியின் நற்செயலையும்

குறைகூறா எதிக்கட்சியினர்.

Friday, October 19, 2012

மின்வெட்டு...முதல்வர் அதிரடி பேட்டி..




மின்வெட்டு குறித்து..இன்று அமைச்சர்களின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர், 'மாநிலத்தில் மின் பற்றாக்குறை இருப்பதை இதுவரை எந்த அமைச்சரும், அதிகாரிகளும் தன் கவனத்திற்குக் கொண்டு வராதது ஏன்? என வினவினார்.

அவர் மேலும் கூறுகையில்..தான் பத்திரிகைகள் மூலமே இதை இப்போதுதான் அறிந்ததாகக் கூறினார்.அதற்காகவே இந்த அமைச்சரவை கூட்டம் என்றார்.

மின்துறை அமைச்சரை நிலைமை சீராகும் வரை இலாகா இல்லாத அமைச்சராக இருக்குமாறு பணித்தார்.


Thursday, October 18, 2012

தினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)


இல்லாமை, இயங்காமை அல்ல!



மின்வெட்டைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விதவிதமான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில இடங்களில் கடையடைப்பு நடத்துகிறார்கள். சில ஊர்களில் ஆர்ப்பாட்டம், தெருமுனைக்கூட்டம். சிறுதொழிலதிபர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவை போன்ற நகரங்களில் பேரணி நடத்தப்படுகின்றது.
மின்சார அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிடுகிறார்கள். சில இடங்களில் இரவு நேரத்தில் முற்றுகையிட்ட மக்கள், ஆத்திரத்தில் மின் அலுவலர்களைத் தாக்கியுள்ளனர்.
கரண்ட் காணாமல் போய்விட்டது கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். அந்தப் புகாருக்கு காவல்நிலையமும் ரசீது கொடுக்கிறது. "காணவில்லை- பெயர் மின்சாரம், அடையாளம் - தொட்டால் ஷாக் அடிக்கும்' என்று சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
இதெல்லாம் சரி. மின்தடைக்குத் தமிழக அரசு மட்டுமே காரணமா, தமிழக அரசும் காரணமா, அல்லது எந்த அரசாக இருந்தாலும் இந்த நிலையைச் சந்திக்க வேண்டியாகியிருக்குமா? மின்சாரத்தை வைத்துக்கொண்டே தமிழக அரசு வழங்க மறுக்கிறதா? சுமார் 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருக்கும்போது ஒரு மாநிலம் என்ன செய்ய இயலும்?
இந்தக் கேள்விகளைப் போராட்டம் நடத்துபவர்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே இந்தப் பிரச்னையை அணுகுகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிர்வாகம் செய்யத் தெரிந்திருந்தால், இந்நேரம் தட்டுப்பாட்டை போக்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன. ஆனால், மத்திய அரசு ஏன் தர மறுக்கிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. கூடுதல் விலைக்கு வாங்கி, குறைந்த விலைக்கு எத்தனைக்காலத்துக்கு சமாளிக்க முடியும் என்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதாகத் தெரியவில்லை.
மின்வாரியத்திடம் மின்சாரம் போதுமான அளவு இல்லை என்பதே உண்மை. மத்திய தொகுப்பிலிருந்து அதிக மின்சாரத்தை தமிழகம் கெஞ்சிக் கேட்டாலும் தரப்படவில்லை. மேட்டூர் அனல்மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின்நிலையம் ஆகியன அடிக்கடி பழுதாகின்றன. பருவமழைக் காலத்தில் காற்றாலை மின்சாரம் குறைந்துபோனது. உற்பத்தியாகும் குறைந்த மின்சாரத்தை பகிர்மானம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தமிழக மின்வாரியம் திணறிக்கொண்டிருக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு மட்டுமே இழப்பு என்றில்லை. மின்வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு. மாதம் முழுவதும் நாள்தோறும் 12 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்ய முடியும் என்றால், மின்வாரியத்துக்குக் கிடைக்க வேண்டிய மின்கட்டண வசூல் 50% குறையும். பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுமென்றே மின்தட்டுப்பாட்டை தமிழக அரசு உருவாக்குகிறது என்ற பிரசாரங்கள் ஏற்புடையவை அல்ல. நீதிமன்ற விவகாரமும், ரஷ்யா தற்போது,"இழப்பீட்டுக்கும் பொறுப்பேற்க வேண்டுமானால், கூடங்குளத்தின் மின்உலைச் செலவுகள் இன்னும் கூடுதலாகும்' என்று சொல்வதால், கூடங்குளம் மின்உற்பத்தி இன்னும் சில ஆண்டுகளுக்கு நிச்சயமில்லை என்பதுதான் உண்மை நிலைமை.
கூடங்குளத்தால் தமிழகத்துக்கு 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்ற செய்திக்கு முகநூலில் ஒரு அன்பர் ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் வீட்டுல விளக்கெரிய அடுத்தவன் வீட்ல பொணம் விழணும்னு நாங்களா கேட்டோம்?' என்று. நல்லவேளை, அவருக்கு உண்மை தெரிந்திருக்கவில்லை. தமிழகத்தின் பாதித் தேவையைப் பூர்த்தி செய்யும் அனல்மின்சாரம், பல ஆயிரம் ஏக்கர் காடுகளை அழித்துக் கிடைத்த நிலக்கரியை எரிப்பதால் கிடைப்பதும், புவிவெப்ப மாறுதலை அது ஏற்படுத்துகிறது என்பதும்! தெரிந்தால், அனல் மின் நிலையங்களையும் மூட வேண்டும் என்பார்!.
இத்தகைய சூழ்நிலையில், மின்தட்டுப்பாடு குறித்து நிலைமையை ஆராய மின்துறை அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து, திங்கள்கிழமைதோறும் நிலைமையைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள முதல்வரின் நடவடிக்கை இந்த நேரத்திற்கு அவசியமானது. அதே நேரத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், அரசியல் கட்சியினரை அழைத்து நிலைமையை விளக்குவது பயன் உள்ளதாக அமையும்.
மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை என்பதால்தான் அரசு ஜூன் மாதத்தில் திறக்கவில்லை என்பது விவசாயிகளுக்குப் புரிவதைப் போல, இன்றைய மின்உற்பத்தி இவ்வளவுதான்; இதைக்கொண்டு இவ்வளவு நேரம்தான் மின்சாரம் வழங்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அரசு மக்களிடம் வெளிப்படையாக விளக்கம் தர வேண்டும். தொழில்துறைக்கு மின்சாரத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்குப் புரியவைத்தால் போராட்டங்கள் தானே குறையத் தொடங்கும்.
தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவும் வேளையில், புதிய தொழிற்கூடங்களுக்கு அனுமதி அளிப்பதை சிறிது காலம் தள்ளிப்போடலாம். அல்லது மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக்கொள்ள முன்வரும் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கலாம். அரசும் தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
நாள்தோறும் மத்திய அரசு தரும் மின்சாரம் இவ்வளவுதான் என்று சொல்வதால், அரசியல் ரீதியாகவும் மாநில அரசுக்கு சாதகம்தான். உள்ள நிலைமையை வெளிப்படையாகப் பேசுங்கள். மக்கள் புரிந்துகொள்வார்கள். பேசாவிட்டால், இதை, அரசின் தோல்வியாக எதிர்க்கட்சிகள் சித்திரிக்கும். இல்லாமை வேறு, இயலாமை வேறு, இயங்காமை வேறு! அரசியல் ரீதியாக அணுக வேண்டிய பிரச்னைகளை அதிகாரிகள் மூலம் தீர்க்க முடியாது. மக்களாட்சியில் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடக் கூடாது. அரசின் இன்றைய நிலைமை இல்லாமைதானே தவிர, இயலாமையோ, இயங்காமையோ அல்ல என்பதைப் புரியவைக்காததால்தான் இத்தகையப் போராட்டங்கள்!

Wednesday, October 17, 2012

வைரமுத்து வ‌ரிகள் - நீர்ப்பறவையில் நீக்கப்பட்டது..




சர்ச்சைக்கு‌ரிய பாடல் வ‌ரிகளை தனது நீர்ப்பறவை படத்திலிருந்து சீனு ராமசாமி நீக்கினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் சம்மதத்துடன் இது நடந்ததாக கூறப்படுகிறது.

நீர்ப்பறவையில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை சீனு சொல்லியிருக்கிறார். கதையோட்டம் எப்படியோ அதே ஓட்டத்தில் பாட்டு அமைக்கிறவர் வைரமுத்து. அப்படி அமைத்ததால் தென்மேற்குப் பருவக்காற்று அவருக்கு கி‌‌ரீடமாக அமைந்தது.

நீர்ப்பறவையின் களம் கிறிஸ்தவ மீனவர்கள் என்பதால் விவிலிய வார்த்தைகளை பயன்படுத்தி மொத்தப் பாடல்களையும் எழுதியிருந்தார். இது பலராலும் சிலாகிக்கப்பட்டது. ஆனால் அதில் சில வ‌ரிகள் சர்ச்சையை கிளப்பியது. காதலன் காதலியைப் பார்த்து சத்தியமும் ‌ஜீவனும் நீயே என்று சொல்வது போல் அமைந்த வ‌ரி கிறிஸ்தாவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களைப் பொறுத்தவரை சத்தியமும் ‌ஜீவனும் ஏசு மட்டுமே.

பாடல் வ‌ரிகளை நீக்க வேண்டும் என்ற போராட்டத்தை தொடர்ந்து யார் மனதையும் புண்படுத்த நான் அப்படி எழுதவில்லை என வைரமுத்து விளக்கமளித்தார். ‌ரிலீஸ் நேரத்தில் படத்தைப் பற்றி பேசுவதற்குப் பதில் இந்த சர்ச்சை பாடுபொருளாகிவிடக் கூடாது என்று அந்த வ‌ரிகளையே நீக்கிவிட்டார் சீனு ராமசாமி.

(வெப்துனியா)

டிஸ்கி- இந்து மதம் தவிர எந்த மதத்தினர் பற்றி எழுதினாலும் நாங்கள் சும்மாயிருக்கமாட்டோம்.