Tuesday, January 27, 2009

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.

பிரணாப் முகர்ஜி..காலையில் முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசியதாக செய்திகள் கூறுகின்றன.அவர் இலங்கை செல்லும் முன் அவரிடம் அதைப்பற்றி பேசியதாகக் கூறப்பட்டது.

ஒருவழியாக..பிரதமர் வாக்குறுதியை காப்பாற்றினார் என்று எண்ணியபோது..ராஜபக்சே..எங்கள் அழைப்பை ஏற்றுதான் அவர் இலங்கை வருகிறார் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி அவர்கூறியதாவது




எங்களது அழைப்பை ஏற்றே வருகிறார்!

தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்றே பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார் என்று சிறிலங்க அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சகம், “எங்களது அழைப்பை ஏற்றுத்தான் இன்று பிரணாப் முகர்ஜி கொழும்பு வருகிறார். இன்று மாலை அவர் அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வெற்றிகளை குவித்து, அவர்களின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மக்களை விடுவித்துவரும் நிலையில், இரு தரப்பின் நலனை கருத்தில் கொண்டு இச்சந்திப்பு நடக்கிறது” என்று கூறியுள்ளது.

மற்றுமோர் செய்தி...

காங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் இம்மாதம்29ல் கூடி மக்களவை தேர்தல் குறித்தும்..கூட்டணி பற்றியும் விவாதிக்க உள்ளது. பிரணாப் பயணத்தால்..கலைஞர் மனம் குளிர்ந்து..கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எண்ணினாலும் எண்ணும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது காங்கிரஸ்.

8 comments:

வால்பையன் said...

இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கட்டும்.
இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் அனுப்பி ஏன் தமிழர்கள் தலையில் போடுகிறார்கள்?

மணிகண்டன் said...

உங்களோட காமெடிக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு !

நசரேயன் said...

எனக்கு ஒரு மாங்காய் வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வால்பையன் said...
இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கட்டும்.
இந்தியாவிலிருந்து ஆயுதங்கள் அனுப்பி ஏன் தமிழர்கள் தலையில் போடுகிறார்கள்?//

ஏனென்றால் தமிழன் எவ்வளவு அடிவேணும்னாலும் வாங்கிப்பான்...ரொம்ப நல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
உங்களோட காமெடிக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு !//


அரசியல் கோமாளிகள் பற்றி எழுதினால்...நான் காமெடி பண்றேனா...உங்கள் பின்னூட்டம் மதுரைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
எனக்கு ஒரு மாங்காய் வேண்டும்//


தங்கபாலுவிடம் பரிந்துரை செய்கிறேன்.

Thamizhan said...

காங்கிரசுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு
இருந்தால் மொத்த மானம்,மரியாதை
எல்லாம் வங்கக் கடலோடும்,தமிழ் ரத்தத்துடனும் கரைந்து விடும்.
தூக்கியெறிங்கள் காங்கிரசை.
அவமதித்தது போதும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழன்