Wednesday, May 13, 2009

தே.மு.தி.க., வெற்றிமுகம்..FLASH NEWS

இன்றைய தேர்தல் ..தமிழகத்தில் பட ..ஓரிரு சம்பவங்களைத் தவிர மற்ற இடங்களில் அமைதியாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களே..எதிர்பாராத வகையில்..ஊடகங்களின் கணிப்பு..இணைய தள பிரகஸ்பதிகளில் கணிப்பு..என எல்லாவற்றையும் ஏமாற்றி..தே.மு.தி.க., எல்லா தொகுதிகளிலும் முன்னணியில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்..விஜய்காந்த்..நிருபர்களுக்கு..வாக்களித்து முடிந்ததும்..அளித்த பேட்டியில்..40க்கு 40ம் தே.தி.மு.க., வெற்றி பெறும் என்றும்..பல தி.மு.க.,வினர் டிபாசிட் தொகையை இழப்பதோடு..3ம் இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.இச் செய்தி அறிந்து..கலைஞர்,ஜெ..இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டவனுடனான என் கூட்டணியில் ஆண்டவன் என்னை ஏமாற்றவில்லை.ஆகவேதான் பெரியவர்கள்..சாமியை நம்பு..ஆசாமியை நம்பாதே என்று கூறியுள்ளனர்.

விருதுநகரில்..கார்த்திக்கிற்கு..அமோக ஆதரவு உள்ளது.அவர் தே.தி.மு.க., விற்கு சரியான போட்டியாய் இருப்பதாகத் தெரிகிறது.இந்த தொகுதி மட்டுமே..தே.தி.மு.க., விற்கு வெல்வது சற்று கடினம்..ஆனாலும்..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்..கார்த்திக்...தோற்கடிக்கப்பட்டு..தே.தி.மு.க., வெல்லும்..என்றும் அவர் தெரிவித்தார்.

இப்படியெல்லாம்..ஏப்ரல் 1ஆம் தேதி தேர்தல் நடந்திருந்தால் பதிவுகள் போடலாம்..ஆனால்..என்ன செய்வது..அதற்குக் கூட வழி இல்லாமல் போயிற்றே.

23 comments:

அத்திரி said...

விசயகாந்து மேல இவ்ளோ கொலைவெறியா??

? said...

இந்த மாதிரி அயல்நாட்டு சக்திகள் பரிகாசித்து சதி செய்தாலும், கேப்டன் அமெரிக்க ஏகாதிபத்யத்துக்கு சவால் விடும் வகையில் வெல்லத்தான் போகிறார்.

நசரேயன் said...

நம்ப முடியலை

ராஜ நடராஜன் said...

அவருக்கு கொடுத்த கிடைச்ச வேலைய அவர் செய்றாரு.அவரப்போய் நொய் நொய்ன்னு தொந்தரவு செஞ்சா எப்படி?

(ஆனா Flash போட்டுட்டு வசனம் விட்டீங்களே அது அசத்தல்.திண்ணை ஒண்ணு காலியாகுதுன்னு உங்களை அனுப்பலாம்ன்னு யோசனை வருது:)

முரளிகண்ணன் said...

உங்கள் நகைச்சுவைகளே தனிரகம்தான்.

pinnoottam said...

விஜய காந்த் ஸ்டைல் ல சொன்னா இது நிச்சயமா பாகிஸ்தான் தீவிர வாதிகளோட சதி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
விசயகாந்து மேல இவ்ளோ கொலைவெறியா??//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நந்தவனத்தான் said...
இந்த மாதிரி அயல்நாட்டு சக்திகள் பரிகாசித்து சதி செய்தாலும், கேப்டன் அமெரிக்க ஏகாதிபத்யத்துக்கு சவால் விடும் வகையில் வெல்லத்தான் போகிறார்.//

கேப்டனுக்கு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
நம்ப முடியலை//
உண்மையைச் சொன்னா நம்பமாட்டாங்களே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
அவருக்கு கொடுத்த கிடைச்ச வேலைய அவர் செய்றாரு.அவரப்போய் நொய் நொய்ன்னு தொந்தரவு செஞ்சா எப்படி?//

நீங்க சொல்றதும் சரிதான்.
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//முரளிகண்ணன் said...
உங்கள் நகைச்சுவைகளே தனிரகம்தான்.//
நன்றி முரளி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//pinnoottam said...
விஜய காந்த் ஸ்டைல் ல சொன்னா இது நிச்சயமா பாகிஸ்தான் தீவிர வாதிகளோட சதி.//

:-)))

சரவணகுமரன் said...

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சரவணகுமரன்

மணிகண்டன் said...

கேப்டன் ! கேப்டன் விஜயகாந்த் - கிண்டலா பண்றீங்க !

சார், உண்மையை சொல்லப் போனா, நாலு வருஷம் முன்னாடி எங்கப்பாவ கடுப்பேத்த விஜயகாந்த் அரசியலுக்கு வந்து ஒரு மாற்றம் கொண்டு வருவாருன்னு சொல்லுவேன் !

என்னடானா அவரு 8 சதவீதம் வாக்கு வாங்க ஆரம்பிச்சுட்டாரு ! கொடுமை தான் ! உங்காளு மற்றும் அம்மா பண்ற கூத்துல மக்கள் இவருக்கும் வோட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
கேப்டன் ! கேப்டன் விஜயகாந்த் - கிண்டலா பண்றீங்க !

சார், உண்மையை சொல்லப் போனா, நாலு வருஷம் முன்னாடி எங்கப்பாவ கடுப்பேத்த விஜயகாந்த் அரசியலுக்கு வந்து ஒரு மாற்றம் கொண்டு வருவாருன்னு சொல்லுவேன் !

என்னடானா அவரு 8 சதவீதம் வாக்கு வாங்க ஆரம்பிச்சுட்டாரு ! கொடுமை தான் ! உங்காளு மற்றும் அம்மா பண்ற கூத்துல மக்கள் இவருக்கும் வோட்டு போட ஆரம்பிச்சுட்டாங்க//

கேப்டன் படித்தால்...தனக்கும் மணிகண்டன் என்பவர் ஆதரவு இருப்பது அறிந்து மகிழ்வார்.

கோவி.கண்ணன் said...

பீதியைக் கிளப்புறிங்களா ?
:)

ரவி said...

தேமுதிக என்று சொல்லவேண்டும். தேதிமுக அல்ல.

இது ஒருவகை வியாதி.

நிவாரணம் என்பதை சின்ன வயதில் நான் டேஷ் டேஷ் என்று படிப்பேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

// செந்தழல் ரவி said...
தேமுதிக என்று சொல்லவேண்டும். தேதிமுக அல்ல.

இது ஒருவகை வியாதி.

நிவாரணம் என்பதை சின்ன வயதில் நான் டேஷ் டேஷ் என்று படிப்பேன்..//
இது கை வியாதி ரவி..தட்டச்சு செய்கையில் இப்படி ஆகிவிடுகிறது.சரி செய்து விட்டேன்.சுட்டிக்காட்டிமைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
பீதியைக் கிளப்புறிங்களா ?
:)//

நானா?

மதிபாலா said...

இது போன்ற புரளிகளைக் கிளப்பி சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களைக் கண்டதும் சுட டி.ஜி.பி உத்தரவாம்.

எதுக்கும் பாத்து பதவிசா இருந்துக்குங்க அய்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மதிபாலா said...
இது போன்ற புரளிகளைக் கிளப்பி சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களைக் கண்டதும் சுட டி.ஜி.பி உத்தரவாம்//


அது நகைச்சுவையை புரளின்னு சொல்றவங்களைத்தான்னு நினைக்கிறேன் மதி

Unknown said...

கட்சி வெறும் 25 தொகுதியில் போட்டியிடும் அதிமுக தலைவி நாந்தான் அடுத்த பிரதமர் என்கிறார். ஒரு சமயத்தில் மைக் பிடித்தவர்களெல்லம் நாந்தான் 2011ல் முதல்வர் என்று கூட சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைவிட இது ஒன்றும் மோசமில்லை. அவர் தன்னம்பிக்கையை வெளிபபடுத்தியிருக்கிறார். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம் (காண்டு).