Sunday, October 26, 2008

தாமிராவும்..பிளீச்சிங்க்பவுடரும்..பின்னே கலைஞரும்

தமிழன் ஒரு இளிச்சவாயான்..அவனை சாதாரண குழந்தையால் கூட கோபமூட்ட வைக்கலாம்...உடன் உணர்ச்சிவசப்படுபவன்...கோபம் வந்த சில நிமிஷங்களில் சமாதானம் அடைபவன்.
தாமிரா... ரிலையன்ஸின் பிரௌசிங்க் சென்டர் போனார்..அவரால் பிரௌஸ் பண்ண முடியவில்லை...அங்கிருந்த ஊழியர்களும் சரியான பதிலை சொல்லவில்லை..உடனே கோபமடைந்தார்..
ரிலையன்ஸ் மீது காறி உமிழுங்கள் என கோபத்தில் பதிவிட்டார்..பின் நண்பர்கள் சிலர் கூற ..கோபம் தணிந்து..ரிலையன்ஸை கண்டிக்கிறேன்..என்று மாற்றிக்கொண்டார்.

பிளிச்சிங்க். அவரது பதிவு ஒன்றால்...ஒருவர் மீது கோபம் கொண்டு..நாய்..சிங்கம் கதையெல்லாம் சென்னை பாஷையில் பதிவிட்டார்..கோபத்தில்..பின்னர்..அவர் நண்பர்களாலும்,கோபமும் தணிந்ததும் ..குறிப்பிட்ட பதிவை விலக்கிக்கொண்டார்.

கலைஞர்..இலங்கை தமிழர்களின் அவல நிலையை குறுந்தகடில் பார்த்தார்..உணர்ச்சிவசப்பட்டார்..அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.மத்ய அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்தார்..அதற்குள் ..அரசு முடிவெடுக்கவில்லை எனில் தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்றார்..பிரதமர்..நாத்தழுதழுக்க பேசியதும்..கோபம் சிறிது தணிந்தது.ப்ரனாப் முகர்ஜியை அனுப்பி..கலைஞரின் கோபத்தை தணித்தனர்.கோபம் தணிந்த கலைஞர்..எம்.பி.க்கள் ராஜிநாமா இல்லை என அறிவித்து விட்டார்..

அதாவது..கலைஞரும்..தமிழன் ஆயிற்றே!!
தமிழனுக்கான இளிச்சவாய்த்தனமும்..உணர்ச்சி வசப்படுதலும்..விட்டுக்கொடுத்தலும்,விட்டுக்கொடுத்ததும் சால்ஜாப்பு சொல்வதுமான குணங்கள் அவரிடமும் உண்டாயிற்றே!!
அவரை அறிந்தவர்கள்..கலைஞர் ராஜதந்திரி என்கிறார்கள்..உண்மையா?

16 comments:

நசரேயன் said...

எனக்கு என்னவோ எழுதுற நீங்க தான் ராஜதந்திரி மாதிரி தெரியுது மன்னிக்கணும் நானும் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் :)

குப்பன்.யாஹூ said...

தா பாண்டியனின் பேட்டி கேட்டிங்களா. கலைஞரின் இந்த வ்யாக்யானம் எல்லாம் வேண்டாம்.

நாங்கள் வேண்டுவது அடிப்படையான மூன்று கோரிக்கைகள் தான்

இலங்கையில் தமிழ் உயிர் பலியை தடுக்க வேண்டும்.

இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்ய கூடாது.

தனி தமிழ் ஈழ்ம் பேச்சு வார்த்தை மூலம் மலர வேண்டும்.


இதற்கு பிரணாப் முகர்ஜீயும் சரி, கலைஞரும் சரி ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் நிதர்சனம்.

குப்பன்_யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சரேயன் said...
எனக்கு என்னவோ எழுதுற நீங்க தான் ராஜதந்திரி மாதிரி தெரியுது மன்னிக்கணும் நானும் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் :)//




உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள்..தவறாய் அமைந்துவிடுவது உண்டு நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குப்பன்_யாஹூ said...
இதற்கு பிரணாப் முகர்ஜீயும் சரி, கலைஞரும் சரி ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் நிதர்சனம்.//
உண்மையைச் சொன்னால் துரோகி பட்டமே கிடைக்கும்.
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

மணிகண்டன் said...

************ உண்மையைச் சொன்னால் துரோகி பட்டமே கிடைக்கும். ************

சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க துரோகி தான் சார் !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// மணிகண்டன் said...
************ உண்மையைச் சொன்னால் துரோகி பட்டமே கிடைக்கும். ************

சொன்னாலும் சொல்லாட்டியும் நீங்க துரோகி தான் சார் !!!////


அடடா..மணி..நீங்கள் என்னை புரிந்துகொண்டதற்கு பாராட்டுகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//sivam said...
அருமையான எழுத்து//

nanri

அத்திரி said...

கலைஞரின் கபட நாடகம் இன்றுடன் முடிகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் ஒருவர்தான் சரியாக பதிவு எழுதியுள்ளீர்கள்(கெடு விதித்த நாளில் இருந்து ).
பிரணாப் உடன் சேர்ந்து அடுத்த நாடகத்தை ஆரம்பித்துவிட்டார் தமிழினத்தின் ஒரே தலைவர். ஈழ விசயத்தில் இன்னும் கலைஞரை நம்பும் அப்பாவிகளை என்ன சொல்வது.

பாபு said...

சரியா சொன்னீங்க

குடுகுடுப்பை said...

டிவிஆர் அய்யா நல்லது நடக்கும் என் நம்புவோம்.சற்றே நல்ல தேநீர் குடித்து ஓய்வெடுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
கலைஞரின் கபட நாடகம் இன்றுடன் முடிகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் ஒருவர்தான் சரியாக பதிவு எழுதியுள்ளீர்கள்(கெடு விதித்த நாளில் இருந்து ).
பிரணாப் உடன் சேர்ந்து அடுத்த நாடகத்தை ஆரம்பித்துவிட்டார் தமிழினத்தின் ஒரே தலைவர். ஈழ விசயத்தில் இன்னும் கலைஞரை நம்பும் அப்பாவிகளை என்ன சொல்வது.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பாபு said...
சரியா சொன்னீங்க//

வருகைக்கு நன்றி பாபு

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
டிவிஆர் அய்யா நல்லது நடக்கும் என் நம்புவோம்.சற்றே நல்ல தேநீர் குடித்து ஓய்வெடுங்கள்//

நல்லது நடக்கும்.

மணிகண்டன் said...

********* அடடா..மணி..நீங்கள் என்னை புரிந்துகொண்டதற்கு பாராட்டுகள் *********

நீங்க தான் சார் புரிஞ்சிக்கல. இந்த பதிவுலகத்தில் ஒரு சிலர் மட்டுமே கலைஞரையும், தமிழரையும் விமர்சிக்கலாம். அந்த வட்டத்தில் இல்லாதவர் விமர்சித்தால் "துரோகி" என்றே அழைக்கப்படுவர். நீங்கள் அந்த வட்டத்தில் இருக்க முடியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணி..உங்கள் பின்னூட்டத்திற்கு விரிவுரையே வேண்டாம்..நான் ஜோக்குகளை..கண்டிப்பாக புரிந்துக் கொள்வேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கயல்விழி