Saturday, November 1, 2008

அரசியல்வாதிகளும்...சினிமா கலைஞர்களும்...

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்..கலைஞர்கள் ..அரசியலில் பங்கு கொள்வது என்பது அதிக மாகிவிட்டது.

ஆரம்ப காலங்களில்..வாசன்,மெய்யப்பன் போன்றோர் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுடன் இருந்தனர்.எம்.ஆர்.ராதா..பெரியாரின் பிரதம சீடராகவே இருந்தார்..பின் அண்ணாவின் வழியில்...கலைவாணர்,கே.ஆர்.ராமாசாமி,கண்ணதாசன்,கலைஞர்,சிவாஜி ஆகியோர்..தி.மு.க.வில் அங்கத்தினர்களாகவும்..ஒரு சிலர் ஆதரவாளராகவும் இருந்தனர்.ஒரு நடிகர்..தீவிர அரசியலில் புகுந்து எம்.எல்.ஏ., ஆனது..எனக்குத் தெரிந்தவரை முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான்.பின்..காங்கிரஸ்ஸிலிருந்து எம்.ஜி.ஆர்.,தி.மு.க.விற்கும்...சிவாஜி..காங்கிரஸ்ஸிற்கும் வந்தனர்.
தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்.,மா பெரும் சக்தியாக திகழ்ந்தார்.,அண்ணாவே ஒரு சமயம்...நாம் கூட்டத்தில் எவ்வளவு நேரம் பேசினாலும் ஏற்படும் பயனைவிட..தம்பி..எம்.ஜி.ஆர்.,தன் முகத்தை ஒரு முறை மக்களுக்கு காட்டினால் ஏற்படும் பயன் அதிகம்..என்றார்.

அ.தி.மு.க., தோன்றிய பின்னர்...திரை உலகினர் அரசியலில் ஈடுபடுவது அதிகரித்தது..,எம்.ஜி.ஆர்.,ஆட்சியின் போது..சிரிப்பு நடிகர் ஐசரி வேலன்,திருச்சி சௌந்தரராஜன் ஆகிய நடிகர்கள் அமைச்சர்களாகவே இருந்தனர்.புரட்சி நடிகருக்குப்பின் ஜெ முதல்வர் ஆனதும்..ராதாரவி,,எஸ்.வீ.சேகர் ஆகியவர்கள் எம்.எல்.ஏ.,(எஸ்.எஸ்.சந்திரன்,ராஜ்யசபா எம்.பி.,)ஆகினர்.
தி.மு.க.தரப்பில் நெப்போலியன் எம்.எல்.ஏ.,ஆனார்.,சரத்குமார்.ராஜ்ய சபா எம்.பி.ஆனார்.இயக்குநர் ராமனாராயணன் எம்.எல்.ஏ.,ஆனார்.

பல நடிகர்கள்..குமரி முத்து,தியாகு,சந்திரசேகர் போன்றவர்கள் தி.மு.க.வின் பேச்சாளர் ஆயினர்.,தேர்தல் சமயத்தில்..ராதிகா..சிம்ரன்..சௌந்தர்யா,மனோரமா போன்றோர்..ஏதோ ஒரு கட்சிக்கு பிரசாரம் செய்தனர்.

சிவாஜி,பாக்யராஜ்,ஆகியோர் கட்சி ஆரம்பித்து அரசியலில் தோற்றனர்.

டி.ராஜேந்தர்..தி.மு.க.தரப்பில்..சட்டசபை உறுப்பினர் ஆகி..பின்னர்..ஒரு தனி கட்சி ஆரம்பித்து நடத்தி(?!) வருகிறார்.

விஜய்காந்த்,சரத்குமார்..ஆகியவர்களும் தனிக்கட்சி ஆரம்பித்துள்ளனர்.கார்த்திக்..ஃபார்வேர்ட் பிளாக் கின் தமிழக தலைவராகி..பின் விடுவிக்கப்பட்டு..இப்போது பதவிக்கு கனவு கண்டுகொண்டு இருக்கிறார்.,

ஆமாம்...இப்படி நடிகர்கள்..அரசியலில் ஈடுபடலாமா? என்று கேட்டால்...

அவர்களும் இந்தியக் குடிமகன்கள்தானே...ஒவ்வொருவருக்கும் அதற்கான உரிமை உண்டு...இன்னும் சொல்லப்போனால் ..இன்றைய அரசியல்வாதிகளைவிட...மக்களிடம் திரைஉலகினருக்கே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மக்கள்..அவர்களின் ரசிகர்கள்...அவர்களுக்காக எதையும் செய்வார்கள்...

ஆனால்...திரை உலகத்தினரே..உங்களின் அரசியல் பிரவேசம்..ஆரோக்யமானதாய் இருக்கட்டும்..சுயநலமில்லா உழைப்பிருந்தால்...கண்டிப்பாக வெற்றி அடைவீர்கள்..

ஆமாம்...இவ்வளவு சொல்லிவிட்டு முக்யமானவரை விட்டுவிட்டேனே என்கிறிர்களா?

உண்மையில்...இன்று அரசியலுக்கு வர முழு தகுதியும் உள்ளவர் அவர்தான்..அவர் கண்டிப்பாக வருவார்..என்றே தோன்றுகிறது..சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

எம்.ஜி.ஆரும்..60 வயது தாண்டிய பின்னரே..தனிக்கட்சி ஆரம்பித்தார்...

இவரும் அதற்காகத்தான் காத்திருக்கிறாரோ?

(இப்பதிவில்..யார் பெயரேனும் ..விட்டுப்போயிருந்தால்...என் கவனக்குறைவே தவிர...வேறு காரணம் இல்லை)

4 comments:

நசரேயன் said...

நீங்க என் பெயரை விட்டு விட்டீர்கள்

பூச்சாண்டியார் said...

//இன்று அரசியலுக்கு வர முழு தகுதியும் உள்ளவர் அவர்தான்..அவர் கண்டிப்பாக வருவார்..என்றே தோன்றுகிறது..

யார சொல்றீங்க? ரஜினி காந்தா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நீங்க என் பெயரை விட்டு விட்டீர்கள்//


நீங்கள் கட்சி ஆரம்பிக்க ..இன்னும் 28 வருஷங்கள் இருப்பதால் ..உங்கள் பெயரை சேர்க்கவில்லை நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பூச்சாண்டியார் said...
//இன்று அரசியலுக்கு வர முழு தகுதியும் உள்ளவர் அவர்தான்..அவர் கண்டிப்பாக வருவார்..என்றே தோன்றுகிறது..

யார சொல்றீங்க? ரஜினி காந்தா?///


நீங்கள் சொல்வது சரிதான்...அவர் ..யாரும்..என்னை கட்டாயப்படுத்த முடியாது..என்று சொல்லிவிட்டதால்..இப்போதற்கு பெயர் சொல்ல வேண்டாம் என்றுதான்