Thursday, November 20, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந்திப்பும்...

அண்ணாசாமிக்கு சனிக்கிழமை மெரினாவில்..நடைபெறும்..பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ள ஆசை...ஆனால்...அவருக்கு யாரையும் தெரியாது...என்ன செய்யலாம்..என யோசித்தவர் ஒரு அசட்டு தைர்யத்தில் கிளம்பிவிட்டார்..

கலங்கரைவிளக்கம் அருகே..ஒரு மர நிழலில்..பேந்த..பேந்த..பாண்டியராஜன் போல...முழித்துக்கொண்டு..நின்றவரிடம்..வந்த ரோந்து போலீஸ் கான்ஸ்டபிள் கந்தசாமி..'ஏன் இங்க நிக்கறிங்க..நீங்க யார்....யாரைப்பார்க்கணும்' னு அடுக்கடுக்காய் கேள்வி..கேட்க..

சிறுவயது முதலே..போலீஸ் என்றதுமே பேண்ட் ஈரமாகிவிடும்..அண்ணாசாமிக்கு..இப்போதோ..போலீஸ் வந்து..கேள்வி கேட்கவே..பயத்தில்..நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள..'வெண்பூ..அத்திரி,தாமிரா..அதிஷா..'என்று சொல்ல ஆரம்பிக்க..உடனே..கந்தசாமி...தன் மொபைலில்...இன்ஸ்பெக்டருக்கு தகவல் தந்தார்..அடுத்த ஐந்தாவது நிமிடம்..இருபது
போலீஸ்காரர்கள்..படை சூழ..இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

'ஸார்..இந்த ஆளைப்பார்த்தா சந்தேகமா..இருக்கு...கேட்டா...வெண்பூ..அத்திரின்னு..ஏதேதோ சொல்றான்..எல்லாம்..code words மாதிரி இருக்கு..'என்றார் கந்தசாமி..

ஆஹா..இன்னிக்கு ஒரு அருமையான கேஸ் மாட்டி இருக்கு...லா காலேஜ் பிரச்னையிலே..பெயர் கெட்டு இருக்கும்...நமக்கு..இந்த சமயத்திலே..இவன் மாட்டி இருக்கான்..பக்குவமா டீல் செய்து..பெயர் வாங்கிடணும்னு நினைச்ச..போலீஸ் அதிகாரி..'யாருய்யா..நீ? எங்கிருந்து வர்றே?'என்று அண்ணாசமியை அதட்டினார்.

அண்ணாசமிக்கு உடனே பரிசல்காரர் ஞாபகம் வர.."அது வந்து..ஸார்..பரிசல்.."என இழுத்தார்..

ஓஹோ..பரிசல்ல வந்தியா...கள்ளத்தோணியா..என்று கேட்டபடியே..தன் புத்திசாலித்தனத்தை..கந்தசாமி பாராட்ட வேண்டும்..என்ற எண்ணத்தில்...ஜனகராஜ் பார்வையை..அவர் மீது வீசினார்.

அண்ணாசாமிக்கு..அடுத்து ஞாபகத்தில் வந்தவர்..கேபிள் சங்கர்.. 'அது வந்து..சார்..இந்த கேபிள் சங்கர்...'என இழுத்தார்.கேபிள் என்ற பெயரைக் கேட்டதுமே அதிகாரி...'ஓஹோ..நீ மதுரைக்காரனா..உன்னைப்பார்த்தா அஞ்சா நெஞ்சன் மாதிரி தெரியலையே..'என்றார்.

அண்ணாசாமி..'குட்டிப்பிசாசு..கும்க்கி..' என்றார்..

'சார்..நீங்க குட்டிப்பிசாசாம்..கும்க்கி..எடுத்துடுவாராம்..'என்றார் கந்தசாமி..

அப்படியா...என்ற அதிகாரி..கந்தசாமி கையிலிருந்த லட்டியை..வாங்கி..அண்ணாசாமி..கால்களில் அடிக்க ஆரம்பித்தார்....இரு லாடம் கட்டறேன் என்றபடியே....

அண்ணாசாமிக்கு இப்போது ஞாபகத்தில் வந்தவர்..டோண்டு...உடனே..'சார்..டோன்ட் டூ'என்றார்..

'அடிக்காதேன்னு..அதிகாரம் பண்றியா'என்றவாறு ..மேலும்..நாலு விளாசு..விளாசினார்.

உடன் வந்த..அத்தனை போலீஸ்காரர்களும் ..இந்த நிகழ்ச்சிகளை..வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

பதிவர் சந்திப்புக்கு வந்துக்கொண்டிருந்த லக்கிலுக்கின் லக்கி லுக்..அண்ணாசாமி மீது ..பட..அவர்..அதிகாரியிடம்..பேசி..அண்ணாசாமியைக் காப்பாற்றினார்..

'இதை முன்னமேயே..சொல்லி இருக்கலாம்..இல்ல..'எண்ரார்..நர்சிம் போல இருந்த அந்த போலீஸ் அதிகாரி.

சந்திப்பின் இடத்துக்கு வந்த..அண்ணாசாமிக்கு டாக்டர் புருனோ..முதல் உதவி செய்ய...அடிவாங்கியதால்...அண்ணாசாமியின் கால்கள்...அங்கங்கே..போண்டா போல வீங்கி இருந்ததைப் பார்த்த பாலபாரதிக்கு..போண்டா...இன்னும்..வழங்கப்படவில்லை...என்ற ஞாபகம் வர..அனைவரையும் அழைத்துக் கொண்டு...எதிரே இருந்த டீக்கடைக்கு விரைந்தார்..அப்துல்லா,ரமேஷ் வைத்யா,முரளி கண்ணன்,சந்தோஷ்,ஸ்ரீ..ஆகியோர் முன்னமேயே அங்கு காத்திருந்தனர்..அவர்களுக்காக.

15 comments:

நாமக்கல் சிபி said...

:))))))))))))))))))))))))))))

Thamiz Priyan said...

:)))))))))))))) கலக்கல்!

நசரேயன் said...

கலக்கல்.கலக்கல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
நாமக்கல் சிபி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் பிரியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

சகாதேவன் said...

சார், நீங்க எங்கேயோ போயிட்டீங்க
சகாதேவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி சகாதேவன்

அத்திரி said...

நல்ல கற்பனை. நல்ல நகைச்சுவை

எட்வின் said...

கலக்கிட்டீங்க போங்க...சிரிச்சு சிரிச்சு வயிறே வலிச்சி போச்சுங்கோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி Arnold Edwin

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Arnold Edwin said...
கலக்கிட்டீங்க போங்க...//

:-))))

மங்களூர் சிவா said...

:)))))))))))))) கலக்கல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா