Monday, November 24, 2008

ஜாதிகள் இருக்குதடி பாப்பா...

பள்ளியில் ஆரம்ப காலங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடல்..

சாதிகள் இல்லையடி பாப்பா - குலம்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ஆனால்..அப்பள்ளியில் சேர..ஜாதி சான்றிதழ் வேண்டும்..

சிறு வயதில்..பள்ளி பருவம் முடியும் வரை..மாணவர்கள் மனதில்..சாதி விதைப்பதில்லை.

அவன் கல்லூரியில் கால் வைத்ததுமே..ஜாதி அடிப்படையில்தான்..சேர்க்கப்படுகிறான்..அது வேறு விஷயம்..அதைப் பற்றியதல்ல இப் பதிவு. அவனுக்கு..கல்லூரி தேர்தலில் நிற்பதற்குக் கூட இந்த ஜாதிப்பேய் துணை நிற்கிறது.நான் உயர்ந்த ஜாதி..இவன் தாழ்ந்த ஜாதி..என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்தி விடிகிறது.

அவன் படிப்பு முடித்து வந்ததும்..வேலை தேடும் படலம்..அவனுக்கு ஜாதி வெறி இருக்கிறதோ ..இல்லையோ..அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்..அவன் மனதில்..இந்த விஷத்தை தூவி விடுகிறார்கள்.

இளைஞர்கள் மனதில்..'உனக்கு வேண்டிய திறமை இருக்கிறது..இந்த வேலை..உன் திறமைக்கு கிடைத்த வேலை..'என்ற எண்ணம் ஏற்படவேண்டும்..

அப்படிப்பட்ட..நிலை..வரும்போதுதான்..ஜாதிப்பேய் ..சமூகத்தைவிட்டு ஓடும்...

இன்றைய சூழலில்..காதல் மட்டும் தான் ஜாதி பார்க்காமல் வருகிறது.ஆகவே தான்..கலப்புத் திருமணங்களுக்கு..அரசு ஆதரவு அளிக்கிறது..

கடைசியாக...பெரும்தலைகளே..உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

ஜாதி ஏற்றத்தாழ்வுகள்...உங்கள் தலைமுறையுடன் ..ஒழியட்டும்...

தேவையில்லாமல்...நம் சுயநலத்திற்காக..இளைஞர்கள் மத்தியில்..ஜாதி என்னும் நச்சு செடியை வளர்க்காதீர்கள்..

நடந்ததை மறப்போம்...நடப்பதை நினைப்போம்...இதுவே நம் தாரக மந்திரமாய் இருக்கட்டும்..

புதியதோர் உலகம் செய்வோம்....

19 comments:

மங்களூர் சிவா said...

jai hind

மங்களூர் சிவா said...

jai hind

தமிழ் ஓவியா said...

பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்? என்று டி.வி.ஆர். அறிந்து கொள்வது நல்லது. அது குறித்து தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தும் செய்தி இதோ:

கேள்வி : சாதி, மதச் சண்டை களினால் மனித குலம் அழியும் போது, அதை ஒழிக்காமல் பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்?பதில் : சாதி, மதங்களை ஒழிக்கவேண்டியது மிகவும் அவசியம் பள்ளிகளில் சாதிகளைக் கேட்பது அவர்கள் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? மலைவாழ்மக்களா என்று அறிந்து அவர்களுக்கு தனி முன்னுரிமை கொடுத்து உதவுவதற்காகத்தான்!

ஜாதி கூடாது ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஜாதி முறையினால்தான் நம் பிள்ளைகள் படிக்கமுடியாமல் காலங்காலமாய் தடுக்கப்பட்டனர்.

அதை மாற்று வதற்கு இந்த ஏற்பாடு ஒரு கால கட்டம் வரை தேவை. அம்மை நோயினை அழிக்க அம்மைக் குத்திக் கொள்வதுபோல.

---------ஆசிரியர் தாத்தா {தி.க.தலைவர்.கி.வீரமணி} பதில்கள் - "பெரியார் பிஞ்சு" செப்டம்பர் --2003

ஜாதியை வளர்ப்பதற்காக பள்ளியில் ஜாதி கேட்பதில்லை என்பதை உணருங்கள்.

அது மட்டுமல்லாது பள்ளிச் சான்றித்ழைப் பார்த்து அவன் ஜாதி தெரிந்து கொள்வதில்லை.

அவர்கள் குடும்பத்தில் செய்யும் சாஸ்திர சம்பிரதாயங்கள் மூலமே அவன் ஜாதியை தெரிந்து கொள்கிறான்.

ஆமா இவ்வளவு தூரம் ஜாதி ஒழிப்புப் பற்றி பேசும் டி.ஆர்.வி. ஜாதி ஒழிப்புக்காக செய்த செயல்கள் பற்றி தெரிவித்தால் நமக்குள் ஒரு புரிதலுக்கு வர வாய்ப்பு ஏற்படும். சொல்வீர்களா?

நசரேயன் said...

/*
இன்றைய சூழலில்..காதல் மட்டும் தான் ஜாதி பார்க்காமல் வருகிறது.ஆகவே தான்..கலப்புத் திருமணங்களுக்கு..அரசு ஆதரவு அளிக்கிறது..
*/
கஜனி முகமது மாதிரி முயற்சி பண்ணினேன்,ஆனா முடியலை..
ஐஸ்வர்யா ராய் எல்லாம் என்னை திரும்பி ௬ட பார்க்கலை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் ஓவியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

குடுகுடுப்பை said...

வணக்கம் நானும் இருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அன்பு தமிழ் ஓவியா
//ஆமா இவ்வளவு தூரம் ஜாதி ஒழிப்புப் பற்றி பேசும் டி.ஆர்.வி. ஜாதி ஒழிப்புக்காக செய்த செயல்கள் பற்றி தெரிவித்தால் நமக்குள் ஒரு புரிதலுக்கு வர வாய்ப்பு ஏற்படும். சொல்வீர்களா?//
நான் என்ன செய்தேன்..செய்கிறேன்..என்பதை நான் சொல்ல விரும்பவில்லை..
ஆனால்..என் தந்தை செய்ததை சொல்கிறேன்..
என் வகுப்பு தோழனை..(அவன் ஜாதி இப்போதுதேவையில்லை..ஆனால் எங்களைச் சேர்ந்தவன் அல்ல).அவன் குடும்பத்தில் அனைவரும் படிப்பறிவு அற்றவர்கள்..எங்கள் வீட்டில் அவனை..தங்கவைத்து...நான் என்ன ஆடை அணிகிறேனோ..அதையே அவனுக்கும்..அணிவித்து..எனக்கு என் வீட்டில்..என்ன என்ன சலுகையோ..அதை அவனுக்கும் அளித்து..என்னுடன்..அவனுக்கும்..வீட்டில் பாடம் நடத்தி..பள்ளி இறுதி வகுப்பு வரை அவனுக்கு வழிகாட்டியவர்..இதனால் பலர் கேலிக்கு ஆளானவர்..தனக்கு இல்லை என்றாலும்..இல்லை என வருபவருக்கு..தன்னால் முடிந்த பொருளுதவியும்..சிலருக்கு..தான் வேலை செய்த இடத்தில் வேலையும் வாங்கிக்கொடுத்தவர்.இன்றும்..ஏதேனும் குழந்தைகளுக்கு..கல்விக்கு உதவி வருகிறோம்.
நான்/நாங்கள் செய்வதை..என் சந்ததி உரைக்கட்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

rapp said...

இது பொதுவா என்னோட கருத்து, இங்கு சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க.

நான் பொதுவா ஒரே ஒரு விஷயம்தான் இதுல சொல்வேன். ஜாதியோ மதமோ ஒரு அடையாளங்கரதால கண்டிப்பா என்னைக்கும் அழியாது. உலகம் முழுசும் இது பல வகைகளில் இருக்கு. ஜாதி மதம் ஒழிச்சிட்டா, அடுத்து மொழி, இனம்னு சண்டை போடுவோம். ஏன்னா எல்லாருக்கும் ஒரு ஐடன்டிடி தேவைப்படுது. இது அழிக்க முடியாத ஒரு மனித உணர்வு.

ஆனா பல வகைகளில் சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ரெண்டையும் வளர்க்கலாம்.

பள்ளியில ஜாதி கேக்கலைன்னா, அப்போ பல ஆண்டுகளா ஒடுக்கப்பட்டிருந்த மக்களுக்குக் கல்வியில் விடிவுகாலம் எப்போது, எப்டி வரும்? மூணாவது தலைமுறை பட்டப்படிப்பு படிப்பவராக இருந்தால் வேணும்னா சலுகைகள குறைக்கிறதை பத்தி யோசிக்கலாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதில் தப்பாய் எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை ராப்..அவரவர்..கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம்..அதை மற்றவர்களும்..ஏற்றுக்கொள்ள வேண்டும்..என்பதும்...நாகரிகமற்ற முறையில் பின்னூட்டம் இடுவதும்...தவிர்க்கபடவேண்டிய ஒன்று.அவ்வளவுதான்.

தமிழ் ஓவியா said...

தங்கள் தந்தையின் பெருந்தன்மையை மதிக்கிறேன். போற்றுகிறேன்.

அதற்காக நீங்கள் எழுதும் பதிவில் எப்படியாவது பார்ப்பனர்களுக்கு தொடர்பில்லாத பதிவில் கூட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் அவசியம் என்ன?

எடுத்துக் காட்டாக ரஜினியைப் பற்றிய ஒரு பதிவில்

"பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்?"

என்று தொடர்பில்லாமல் எழுதுவது ஏன்?

ஆரியப் பார்ப்பனர்களின் அட்டூழியங்களைப் பற்றி தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
"ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே...." என்று போட்டு வலைப்பக்கம் நடத்துவது மகிழ்சியே.

ஆனால் ஒரே ஜாதியாக இருக்கவிடாமல் இன்று வரை தடுத்துக் கொண்டிருப்பது எது? பார்ப்பனர்களும் அவர்கள் உண்டாக்கிய சாஸ்திரங்களும் ,சம்பிரதாயங்களும்தானே.
உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டுகிறேன்.

நான் இப்போது சுட்டிக்காட்டுவதை தாங்கள் ஏற்கனவே படித்திருக்கலாம். மீண்டும் ஒருமுரை படியுங்கள்.
தெளியுங்கள்.

"ஜாதி அடுக்குமுறை உருவாகியது என்பதைவிட்ட உருவாக்கியதின் நோக்கம் பற்றி அறிந்து கொண்டால் ஜாதிக் கலவரம் ஏற்படுவது ஏன்? அதற்கு மூல காரணமாக இருப்பவர்கள் யார்? என்பது புலப்படும்.

ஊண்றிப்படித்து உண்மையை அறிக.

ஜாதி அடுக்குமுறையின் நோக்கம் என்ன?நம் நாட்டின் சமூகக் கொடுமைகளிலேயே மிகவும் கோரமானது, அக்கிரமமானது வர்ணாசிரம - ஜாதி அடுக்குமுறையாகும்!

பிறவி அடிப்படையில் ஜாதிகளைப் பிரித்த சூழ்ச்சியைவிட அதனை ஒன்றன்பின் ஒன்று என்று கீழான அடுக்குகளாக்கியது தான் வெறுக்கத்தகுந்த கொடுமையாகும்!

பார்ப்பனர் வகுத்த ஜாதி அடுக்குமுறை

மேல்ஜாதி என்று ஆக்கிக் கொண்ட ஜாதியினரான பார்ப்பனர் அதற்கு அடுத்து கீழ் என்று ஏணிப் படிக்கட்டுகளைப் போல ஜாதிமுறை அடுக்கு பேத முறையாக ஆக்கியதன் உள்நோக்கம் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டே இருப்பதோடு, மிகவும் கீழான படிக்கட்டில் நிற்பவருக்குத்தான் ஆத்திரம் பொங்கும் அதிகமாக என்றாலும், அது மேல்தட்டில் உள்ள பார்ப்பனர்களோடு மோதலாக வெடிக்கக் கூடாது என்பதற்காகவே 1, 2, 3, 4 என்று பிரித்து 5 என்ற பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை அய்ந்தாம் ஜாதியாக்கி விட்டதோடு, பெண்களை அதற்கும் கீழே 6 ஆவது இடத்தில் மனுதர்மம் வகுத்தது. சமுதாயத்தில் பேத நிலை பெரு நிலையாகவே ஆனதற்கு இதுவே அடிப்படையாகும்.

இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் (Graded inequality) அடுக்குமுறை பேதமுறை - ஜாதி முறை என்றார்!

இதில் 5 ஆம் ஜாதி என்ற தாழ்த்தப்பட்ட நமது ஆதிதிராவிட சகோதரர்களைக்கூட ஒரு பிரிவாக இருக்கவிடாமல், பறையர், பள்ளர், அருந்ததியினர் (சக்கிலியர்) என்று பிரித்து அவர்களுக்குள்ளேகூட ஒருவர் இன்னொருவரோடு இணையவிடாத பிரித்தாண்ட சூழ்ச்சியை ஆரியம் செய்தது!

வர்க்கப் பிரிவில் இப்படி அடுக்குமுறை அமைப்பு கிடையாது. முதலாளி - தொழிலாளி, ஆண்டான் - அடிமை என்ற அளவில் மட்டுமே - வருணப் பிரிவில் மட்டும் இந்தப் பெருங்கொடுமை!

இந்த ஒடுக்கப்பட்ட சகோதரர்கள்தான் அதிகமான உழைப்பைச் சமூகத்திற்குத் தந்துவிட்டு, தாங்கள் குந்தக் குடிசையின்றி, குடிக்கக் கூழின்றி, படுக்கப் பாயின்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களாக மண் புழுக்களைவிட கேவலமாக, பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர் நமது பாரத புண்ணிய பூமியில்

----------- தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையிலிருந்து "விடுதலை" 24-11-2008.

இப்போது புரிகிறாதா? பார்ப்பனர்களின் நயவஞ்சகமான நரித்தனம்.
தோழர்களே எப்போதும் பார்ப்பனர்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள்.

நன்றி தோழர்.

தமிழ் ஓவியா said...

ஆரியப் பார்ப்பனர்களின் அட்டூழியங்களை மேலும் தெரிந்து கொள்ள இந்தத் தகவலும் உதவும் என்பதால் இதையும் தருகிறேன்.
படியுங்கள். தெளியுங்கள்.

"உலகம் எப்படித் தோன்றியது, மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள் என்பது குறித்து எல்லா மதங்களும் பேசுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் கூறும் கருத்தை இஸ்லாம் உட்படப் பல மதங்கள் ஏற்கின்றன. கடவுள் முதலில் ஆதாம் என்கின்ற ஆணைப் படைத்தார், பிறகு அவனுடைய விலா எலும்பிலிருந்து ஏவாள் என்கின்ற பெண்ணைப் படைத்தார் என்பதே மதங்களின் பார்வை. படைப்புக் கொள்கைக்கு மாறான, பரிணாமக் கொள்கையை எந்த மதமும் எடுத்துரைக்கவில்லை. எடுத்துரைக்கவும் முடியாது. எனினும், முதல் ஆணையும், முதல் பெண்ணையும் கடவுள் படைத்தார் என்றுதான் மதங்கள் கூறுகின்றன. ஆனால், உலகிலேயே, நால்வருணங்களாக மனிதர்களைக் கடவுள் படைத்தார் என்று இந்துமதம் மட்டுமே கூறுகின்றது.இது குறித்த ஆழ்ந்த ஆய்வினை அண்ணல் அம்பேத்கர் நிகழ்த்தியுள்ளார். ரிக் வேதத்தின் 10 ஆவது இயலான புருஷசூக்தத்தில் கடவுளின் நெற்றி, தோள், இடை, பாதம் ஆகியனவற்றிலிருந்து பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர வருணங்கள் தோன்றியதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது ‘இடைச்செருகல்’ என்பது அம்பேத்கரின் கருத்து. இருப்பினும், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வருணம் வருணமாகப் படைக்கப்பட்டனர் என்னும் இந்துமதக் கருத்தியல்தான், இன்றைய சக ஏற்றத்தாழ்வுகளின் அடித்தளம் என்பதை அவர் நிறுவியுள்ளார். இந்த ஏற்றத்தாழ்வை நிறுவுவதே பகவத்கீதையின் நோக்கம் என்பதையும் அவர் ஆதாரங்களுடன் காட்டியுள்ளார்.

எனவே, உலகெங்கும் உள்ள ‘தொழில் பிரிவு’, இந்தியாவில் மட்டும் ‘தொழிலாளர் பிரிவு’ என ஆக்கப்பட்டது. அதுவும், வெறும் பிரிவாக அல்லாமல், ஒருவரின் கீழ் ஒருவர் என்னும் வகையில் அடுக்காக ஆக்கப்பட்டது. அந்த அடுக்கு எவ்வாறு இருந்ததெனில், ‘படிப்படியான சமநிலை அற்றதாக’ இருந்தது என்பார் அம்பேத்கர்.

தனி மனிதனைப் படைக்காமல், வருணங்களைப் படைத்த கடவுள் (“சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்”-பகவத்கீதை ), ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு தொழில் உரியது என்றும் ‘விதித்துவிட்டார்’ என்பதே இந்துமதத் தத்துவம். நான்கு வருணங்கள், நாலாயிரம் சாதிகள் ஆயின. பிறகு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில் என்றாயிற்று. இன்று வழக்குரைஞர்களாக உள்ள நாங்கள் எல்லோரும் ஒரே சாதியினர் இல்லையே என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். சாதிக்கும், தொழிலுக்குமான பிணைப்பு, நூற்றாண்டுகள் போராடிய பின்பு, இன்று அறுபட்டுள்ளது. அதுவும் கூட, இடைநிலையில் மட்டும்தான் அறுபட்டுள்ளது. மேலும், கீழும் நிலை மாறவில்லை.

கோயில் அர்ச்சகர்களாக, புரோகிதர்களாகப் பார்ப்பனர்களே உள்ளனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் புரட்சித்திட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுபோன்றே, பிணம் எரித்தல், பறை அடித்தல், மலம் அள்ளுதல், சாக்கடை சுத்தம் செய்தல் ஆகிய தொழில்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதே சுமத்தப்பட்டுள்ளன. சாதியும், தொழிலும் அங்கே அறுபடவில்லை. இப்பிணைப்பின் காரணமாக, சாதி அடிப்படையிலேயே தொழில்களுக்கான முதலீடுகள் செய்யப்பட்டன. இன்றும், கிராமங்களில் உற்பத்தி ஒழுங்கு முறையில் சாதி ரீதியான முதலீடுகளே உள்ளன. அவை, வர்க்கப் போராட்டத்திற்கு வழிவிடாத தடைச்சுவர்களாக உள்ளன.

தொழிலாளி என்பவன் தொழிலாளியாக மட்டுமில்லாமல், சாதியப் பாகுபாடுகளுக்கு உரியவனாகவும் இருக்கிறான். அதனால்தான், தொழில் வளர்ச்சி பெற்ற இடங்களிலும் கூட, சாதியின் ஆதிக்கம் குறையாமலே இருக்கிறது. ஆகவே, வருண-சாதி அமைப்பை அழித்து ஒழிக்கப் பாடுபடுவதே இன்றைய முதல் தேவையாக உள்ளது".

-----------23.09.08 - கோவை, வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்து சுபவீ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து

அன்பு said...

//அதற்காக நீங்கள் எழுதும் பதிவில் எப்படியாவது பார்ப்பனர்களுக்கு தொடர்பில்லாத பதிவில் கூட பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்குவதன் அவசியம் என்ன?

எடுத்துக் காட்டாக ரஜினியைப் பற்றிய ஒரு பதிவில்

"பார்ப்பனர்களிடம் குறை கண்டுபிடிப்பதுபோல குறை கண்டுபிடிக்கப் படுகிறதே..அது ஏன்?"//

பார்ப்பனீயத்தை வித்தியாசமாக புகுத்துவதில் இந்த ஆள் இதில் பெரிய கில்லாடி ஆச்சே. இதில் இவனுக்கு நிகர் இவன் மட்டும் தான்

மணிகண்டன் said...

புலிகேசி அவர்களுக்கு :- நீங்க ரொம்ப புத்திசாலின்னு நினைக்கறேன் ! உண்மை தான ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மணிகண்டன்

வால்பையன் said...

நீங்க சொல்றது தாங்க கரைக்ட்டு,

பள்ளிகளில் சாதி கேட்பது தாழ்த்தப்படவர்களுக்கு உதவி செய்ய என்ற வாதம் கேனத்தனமாக இருக்கிறது.

என்ன மாதிரியான உதவி செய்வீர்கள் ஐய்யா?
இலவ்ச டியூசன் எடுப்பீர்களா?

பிஞ்சிலேயே நீ தழ்ந்த சாதி அதை பயன்படுத்து, படிக்காமலேயே வேலை கிடைக்கும் என்று அவனுள் விசத்தை விதைக்கிறார்கள்.

இவங்களுக்கு அரசியல் பண்ண சாதி வேணும், அதனால சாதி ஒழிய கூடாது.

பெரியார் காலத்துல பார்பனீயம் பெரிய விசமாக இருந்திருக்கலாம், அதை பெரியாரே மருந்திட்டு குணப்படுத்தி விட்டார், இன்று நிறைய பார்பனர்களே பெரியார் மேல் மரியாதை வைத்திருக்கிறார்கள் என்றால், அன்று அவருடய வாதம் சரியாக இருந்தது.

அன்று தேவைப்படட்து அதை அவர் செய்தார், இன்று என்ன தேவை என்று யோசிக்காமல் பூனையை தூணில் கட்டிய கதையாக மீண்டும் மீண்டும் பார்பனனையே திட்டி கொண்டிருப்பது பகுத்தறிவாக தெரியவில்லை.

கண்ணை கட்டிய குதிரைகளுக்கு சாலையை தவிர வேறொன்றும் தெரியாது, அறிவை கட்டிய உங்களுக்கு பார்ப்பன எதிர்பை தவிர வேறொன்றும் தெரியாது.

உங்களை போல் ஆட்களால் தான் நாடு இன்னும் உருப்படாமல் இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வால்பையன்