Thursday, August 27, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்-24

1981ல் வந்த படங்கள்
மோகனபுன்னகை
சத்ய சுந்தரம்
அமர காவியம்
கல்தூண்
லாரி டிரைவர் ராஜாகண்ணு
மாடிவீட்டு ஏழை
கீழ் வானம் சிவக்கும்

மோகனப் புன்னகை..ஸ்ரீதர் கதை, வசனம்.இப்படத்தில் சிவாஜி, கீதா, ஜெயபாரதி நடித்தனர்.எம் எஸ் விஸ்வநாதன் இயக்கம்

ஸ்ரீதருடன்..சிவாஜி இணைந்த கடைசி படம்..படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை


அமரகாவியம்..விஸ்வனாதன் தயாரிப்பாளர்.அமிர்தம் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா, மாதவி நடித்தனர்.முக்கந்தர் கா சிக்கந்தர் என்ற ஹிந்தி படத்தின் தழுவல்.விஸ்வநாதன் இசை

கல்தூண்..மேஜர் சுந்தரராஜன்..நாடகமாக போட்ட கதை..மேஜர் இயக்கத்திலேயே படம் வெளிவந்து..100 நாட்கள் ஓடியது.சிவாஜி, கே ஆர் விஜயா., எம் எஸ் வி இசை

லாரிடிரைவர் ராஜாகண்ணு..(புஷ்பலதா   நடிகர் ஏ.வி.எம்.ராஜன் மனைவி..தயாரிப்பாளர்) ஸ்ரீபிரியா நாயகி.டிரைவர் நாயுடு என்ற தெலுங்குப் படத்தின் தழுவல்

மாடி வீட்டு ஏழை..சிவாஜி கடைசியாக கலைஞர் வசனம் பேசி நடித்த படம்.
சுஜாதா,ஸ்ரீபிரியா உடன் நடித்திருந்தனர்.முரசொலி செல்வம் தயாரிக்க அமிர்தம் இயக்கம்

கீழ் வானம் சிவக்கும்..விசுவின் சகோதரர் ராஜாமணி குழுவினரால்..மேடையேற்றப்பட்ட நாடகம்.விசு வசனம்..படம் 100 நாட்கள் ஓடியது.முகதா ஸ்ரீனிவாசம் இயக்கம்.சரிதா, சரத்பாபு ஆகியோருடன் சிவாஜி.எம் எஸ் விஸ்வநாதன் இசையில் 'கடவுள் நினைத்தான்" என்ற பாடல் ஹிட்


சத்ய சுந்தரம் மற்றுமொரு 100 நாள் படம்.கே எஸ் பிரகாஷ்ராவ் இயக்கம்.சிவாஜியுடன் ஸ்ரீபிரியா, கே ஆர் விஜயா, மாதவி நடித்தனர்.இசை விஸ்வநாதன்

1982ல் வந்த படங்கள்..
ஹிட்லர் உமாநாத்
ஊருக்கு ஒரு பிள்ளை
வா கண்ணா வா
கருடா சௌக்யமா
சங்கிலி
வசந்தத்தில் ஒரு நாள்
தீர்ப்பு
நிவுரு கப்பின நிப்பு (தெலுங்கு)
தியாகி
துணை
பரீட்சைக்கு நேரமாச்சு
ஊரும் உறவும்
நெஞ்சங்கள்

சிவாஜி திரை உலகிற்கு வந்து 30 ஆண்டுகள் பூர்த்தி ஆன ஆண்டு.இரண்டு தலைமுறைகள் கடந்தும் நாயகனாக கோலோச்சி சாதனை படைத்தவர்.நாயகனாகவே ஒரே வருடத்தில் 13 படங்கள் நடித்து சாத்னை புரிந்தார்.

தீர்ப்பு..மற்றும் நிவுரு...படங்கள் வெள்ளிவிழா படங்கள்.

மற்றபடி..வா கண்ணா வா,சங்கிலி(இலங்கையில் 100 நாள்)தியாகி,பரீட்சைக்கு நேரமாச்சு ஆகியவை 100 நாட்கள் ஓடின.சங்கிலி..சிவாஜியுடன் அவரது மகன் பிரபு இணைந்த முதல் படம்.

மிண்டும் ஒரு நாடகம் வெற்றி படமாகியது..பரீட்சைக்கு நேரமாச்சு.

1983 படங்கள் அடுத்த பதிவில்.

10 comments:

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வசந்தத்தில் ஒரு நாள்//


இந்தக் கதையோட கருவப் பத்தி பல இடுகைகள் கிழி கிழி என்று கிளிக்கின்றவே...., அதைப் பற்றியும் சொல்லி இருக்கலாமே தல.., இந்த ஆண்டுப் படங்கள் அதிகம் நான் பார்க்கவில்லை..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சங்கிலி//


இப்போது ரீமேக் செய்ய அற்புதமான படம்.., பிரபு பாத்திரத்திற்குத்தான் ஆள் இல்லை..,

இதில் வரும் ஒரு முறையைப் பயன்படுத்தி ஷாம்லி(யின் தோழர்கள்) ஒரு படத்தில் துப்பறிவார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//கீழ் வானம் சிவக்கும்//

இப்படி ஒரு சோகக் காவியம் கண்டிப்பாக எடுத்துத்தான் இருக்க வேண்டுமா தல.., எவ்வளவுதான் சிறப்பாக எல்லோரும் நடித்து இருந்தாலும் எவ்வளவுதான் வரவேற்பு பெற்றீருந்தாலும் படம் பார்த்தபின் ஒரு இனம் புரியாத உணர்வுதான் வந்தது. இன்னும் கூட எனக்கு அதை விவ்வரிக்க தெரியவில்லை. இப்படி ஒரு படம் யாரும் எடுக்க கூடாது என்பது ஒரு எண்ணம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எம்.எஸ்.விஸ்வனாதன் தயாரிப்பாளர்.

மேஜர் இயக்கத்திலேயே படம் வெளிவந்து


ஏ.வி.எம்.ராஜன் தயாரிப்பாளர்.


சிவாஜி கடைசியாக கலைஞர் வசனம் பேசி


விசு வசனம்

குறிப்பிடத்தக்க வருடம்..,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துகளுக்கும் ..பின்னூட்டங்களுக்கும் நன்றி சுரேஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஞானி..பணம் அனுப்பிவிடுகிறேன்..

Unknown said...

www.puthumai.weebly.com

இலவசமாக மூன்று மாதங்களுக்கு விளம்பரம் செய்ய முடியும்

உங்கள் விளம்பர அளவு

170 pix x 100 pix

GIF Image or JPEG Image

எமக்கு அனுப்புங்கள் உங்களது விளம்பரம் இணைக்கப்படும்

puthumai@ymail.com

SANKAR said...

சத்திய சுந்தரம் படத்தில் விசுவை போலே சிவாஜியும் KR விஜயாவும் வீடுவீடாக சென்று பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.
மாடி வீட்டு ஏழை- எண்ட பார்யா மலையாள பட ரீமேக்
ஹிட்லர் உமாநாத் சுருளிராஜனின் வில்லுபாட்டு சிவாஜி பட பேர் எல்லாம் சொல்வார்.
வசந்ததில் ஒரு நாள்-வேண்டும் வேண்டும் உந்தன் உறவு பாடல் அருமை
நெஞ்சங்கள் படத்தில் மீனா குழந்தை
நட்சத்திரமாக அறிமுகம்
தீர்ப்பு சிவாஜியின் 225வது படம்.
தீயே உனக்கென்ன தீராத பசியோ என்னும் பாடலை கும்பகோணம் தீவிபத்து சமயம் வானொலிகளில்
ஒலிபரப்பினார்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி SANKAR