Thursday, August 6, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-8-09)


1.கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் உத்திரபிரதேசத்தில்..தனது சிலைகள் உட்பட தலைவர்களின் சிலையை வைக்க 550 கோடி ஒதுக்கியுள்ள மாநில முதல்வர் மாயாவதி..வறட்சி நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் 250 கோடி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

2.இந்தியாவின் திறமையான இளைஞர்கள்..அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு தேவை..அதனால் இந்தியர்களுக்கு அமெரிக்காவின் கடும் குடியுரிமை சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும்...என அமெரிக்க கம்ப்யூட்டர் மன்னன் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

3.அழகிரி தன் பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றிவிட்டாராம்.தமிழின் சிறப்பு 'ழ' என்ற எழுத்து.இதை வட இந்தியர்கள் உச்சரிக்க சிரமப்படுகிறார்களாம்.(நம்மவர்களிலும் இருப்பது வேறு விஷயம்). மேலும் அதை ஆங்கிலத்தில் எழுதும் போது zha என எழுதுவதை அவர்கள் ஜா..இல்லை ஸா என்கிறார்களாம்.அழகிரியை அஜாகிரி என்றும் அஸாகிரி என்றும் சொல்கிறார்களாம்.அதனால் அழகிரி..தன் பெயரின் ஸ்பெல்லிங்கை Alagiri என்று மாற்றிவிட்டாராம். கனிமொழி என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.

4.ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்திரன் படத்திற்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார்.இது குறித்து படம் வெளிவந்த பின் முடிவெடுக்கப் படும் என்றும் கூறினார்.
எத்தனை காலம்தான்......

5. உருளைக்கிழங்கை அதிக அளவில் உட்கொள்ளுவதால் உடல் எடை அதிகரிக்கும்..நீரிழிவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் நினைப்பது தவறாம்.மாறாக உடல் ஆரோக்யத்திற்கு அது துணைபுரிகிறதாம்.இதில் குறைந்த அளவே கலோரியே உள்ளதாம்.இயற்கையிலேயே கொழுப்பு குறைவான..உயிர்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளனவாம்.இதைச் சொல்வது இந்திய மருத்துவ சங்கம்.

6.இடைத்தேர்தலில் 3 தொகுதிகள் தன் பொறுப்பில் உள்ளதாகவும்..இந்த தொகுதியில் பொட்டியிடும் தி.மு.க., வேட்பாளருக்கு அதிக ஓட்டுகள் பெற்றுத்தரும் மாவட்ட செயலருக்கு தனது சொந்த செலவில் முதல்வர் உருவம் பொறித்த டாலருடன் கூடிய 25 சவரன் தங்கசங்கிலி பரிசாக வழங்கப்போவதாக மத்திய அமைச்சரும்..கலைஞரும் மகனுமான அழகிரி தெரிவித்துள்ளார்.
தந்தை அண்ணாவிடம் கணையாழி பெற்றார்.மகன்...?

கொசுறு ஜோக்..

அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல பருப்பு சாம்பார்தானாம்.

14 comments:

கோவி.கண்ணன் said...

எல்லாவற்றையும் விட பட்டாணி சுண்டல் படம் பசியைக் கிளப்புது !
:)

புருனோ Bruno said...

//எத்தனை காலம்தான்......//

சூப்பர் :) :)

//அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல பருப்பு சாம்பார்தானாம்.//

1999ல் வந்த நகைச்சுவை

அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல வெங்காய சட்னிதானாம்.

--

காலசுழற்சி !!

குடுகுடுப்பை said...

4 சூப்பர்.
அப்புறம் கோவி சொன்னதுதான்.

SUBBU said...

நாலாவது நச்ச்ச்ச்ச்ச்ச்
கடைசி சோக்கும் சூப்பரு :))

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
எல்லாவற்றையும் விட பட்டாணி சுண்டல் படம் பசியைக் கிளப்புது !
:)//

ஒரு சிங்கை பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டு..வடைக்கு பதில் சுண்டல் கொடுத்துவிடுங்கள்

T.V.Radhakrishnan said...

//புருனோ Bruno said...
//எத்தனை காலம்தான்......//

சூப்பர் :) :)//

நன்றி டாக்டர்

T.V.Radhakrishnan said...

//குடுகுடுப்பை said...
4 சூப்பர்.
அப்புறம் கோவி சொன்னதுதான்.//
கோவிக்கான பதில்தான் உங்களுக்கும்..சிங்கை என்பதை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்

T.V.Radhakrishnan said...

//SUBBU said...
நாலாவது நச்ச்ச்ச்ச்ச்ச்
கடைசி சோக்கும் சூப்பரு :))//

நன்றி SUBBU

மங்களூர் சிவா said...

/

அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல பருப்பு சாம்பார்தானாம்.
/

வருத்தமான உண்மை :(

SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஓ.கே..., ஓ.கே....,

T.V.Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
/

அவன் பணக்காரன்னு எப்படி சொல்ற
தினமும் அவன் வீட்ல பருப்பு சாம்பார்தானாம்.
/

வருத்தமான உண்மை :(//

ஆம்..ஒரு விதத்தில் இதை ஜோக் என்று சொல்வதே தவறு

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓ.கே..., ஓ.கே....,//

நன்றி SUREஷ்

அக்பர் said...

அரசியல் சுவையுடன் சுண்டல் சூப்பர்.

T.V.Radhakrishnan said...

//அக்பர் said...
அரசியல் சுவையுடன் சுண்டல் சூப்பர்//

நன்றி அக்பர்