Tuesday, August 4, 2009

ஹிட்ஸ் அதிகரிப்பது எப்படி..பதிவர் சந்திப்பில் ஆராய்ச்சி..

வர வர..ஒவ்வொருவர் பதிவையும் படிக்க வரும் வாசகர்கள் குறைவதைக் கண்டு...இந்நிலையை தவிர்ப்பது எப்படி என அமெரிக்க பொருளாதார சீர்க்குலைவுக்கு மண்டையை பிய்த்துக்கொள்ளும் வல்லுநர்கள் போல பிரபல பதிவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு..ஆராய பதிவர் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினர்.

இதில் கலந்துக் கொண்டவர்கள் கருத்துக்கள்..

இதற்கு முக்கியக் காரணம் பைத்தியக்காரன்தான் என அக்னி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.அதற்கு அவர் சொன்ன காரணம்..அடுத்த உரையாடல் போட்டிக்கான கரு என்னாவாயிருக்கும் எனத் தெரியாத நிலையில்..அனைவரும்.கதை,கட்டுரை என யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

அதை வன்மையாக மறுத்த நர்சிம்..லக்கி லுக்கே காரணம் என்றார். லக்கி ..அந்த பெயரைவிட்டு யுவகிருஷ்ணா என்று எழுதுவதால் என்றார் அவர்.ஆனால் அதற்கு லக்கி..'நர்சிம் தன் பதிவுகளை திரட்டிகளில் இணைக்கவில்லை..அதுதான் காரணம்' என்றார்.

வால்பையன்...'அனுஜன்யா கவிதையை எழுதுவதை நிறுத்த வேண்டும்..அவர் எழுதும் கவிதையில்..அவை தமிழ் எழுத்துக்கள் என்ற அளவிலே தான் புரிகிறது என்றார்.ஆதியும் ஏதோ இது சம்பந்தமாக புலம்புவது கேட்டது.

ஜ்யோவ்ராம்சுந்தரை பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடையே பிரபலமான பாடல்களை எழுதச் சொல்லலாம்..என பைத்தியக்காரன் கூறினார்.அதற்கு சுந்தரின் நண்பர் ராஜாராம் 'சரியான யோசனை' என்றார்.

அதிஷாவை..இன்ஃபினிடி கதைகளையும்..கார்க்கியின் புட்டிக்கதைகளையும் நிறைய எழுத வேண்டும்..என லக்கி சொல்ல ..கூட்டம் முழுதும் வழி மொழிந்தது.

இதற்கெனவே..சிங்கையிலிருந்து வந்திருந்த கோவி..எல்லா பதிவு தலைப்பும்..ஆபாசம்..பாலியல்..என்ற பெயரில் வர வேண்டும் என்றார்.அதற்கு பின்னூட்டம் என எண்ணிக் கொண்டு ரிபீட்டு என்றார் அதிஷா.

என்னைப்போல் அனைவரும் கவிதை எழுதினால் ,..தீர்வு கிடைக்கும் என்றார் அகநாழிகை.

நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டாலும்..கருமமே கண்ணாக..ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தார் ஜாக்கி சேகர்.

இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு..அங்கு பரோட்டா சாப்பிடுவோம் என்றார்.எல்லோரும் வெண்பூவை தேட ஆரம்பித்தனர்.

எதிலும் பட்டுக் கொள்ளாமல்..வந்த பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார் டோண்டு ராகவன்.

இந்த பதிவை எழுதினாலாவது..பரிந்துரையில் வருமா..என என் மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது.

நர்சிம் பேசியபோது மட்டும்..ஆமாம்..ஆமாம் ..என சொல்லிக் கொண்டிருந்த முரளிக்கண்னன்..மீதி நேரங்களில் மௌனமாயிருந்தார்.

கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..

வழக்கம் போல எந்த முடிவும் எடுக்காமல்..கூட்டம்..டீக்கடைக்கு கிளம்பியது.

32 comments:

Anonymous said...

இது நிசமா நடந்தது மாதிரியே இருக்கு :)

புருனோ Bruno said...

சுப்பர்

--

இப்படி தலைப்பு வைத்து எழுதினால் கண்டிப்பாக ஹிட்ஸ் வரும் !!

கோவி.கண்ணன் said...

//கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..//

இது டாப்........!

:)

நிகழ்காலத்தில்... said...

என்னப் பத்தி ஒண்ணும் காணோம்,

இருட்டடிப்பு செய்து விட்டீர்களா:))

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...
என்னப் பத்தி ஒண்ணும் காணோம்,

இருட்டடிப்பு செய்து விட்டீர்களா:))
//

நீங்கள் அறிவே 'தெய்வம்' ஆகிற்றே. உங்களைப் பற்றி சொல்லி அது தப்பாகிவிட்டால், அப்பறம் தெய்வக் குத்தம் ஆகிடும்னு பயப்படுறாரோ !
:)

Cable சங்கர் said...

நீங்களும் உங்க பங்குக்கு ஆரம்பிச்சிட்டீங்களா..?

நையாண்டி நைனா said...

hahahahaha....

கலையரசன் said...

ரசித்து சிரித்தேன்...

சிநேகிதன் அக்பர் said...

நல்லா இருந்தது. பெரியவங்களுக்கே இந்த நிலையா.

அப்புறம் முரளி அண்ணா எங்கே ஆளை காணோம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் ஆராய்ச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
இது நிசமா நடந்தது மாதிரியே இருக்கு :)//

வருகைக்கு நன்றி
சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
சுப்பர்

--

இப்படி தலைப்பு வைத்து எழுதினால் கண்டிப்பாக ஹிட்ஸ் வரும் !!//

நன்றி Doctor

Radhakrishnan said...

ஆக மொத்தம் ஒரு முடிவும் எடுக்கல! நன்றாக இருந்தது ஐயா. மிகவும் ரசித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//கோவையிலிருந்து வந்திருந்த வடகரை வேலன்..மௌனமாயிருந்தார்..நாளை சபை நடுவே பேசாதிருப்பவன் என ஒரு பதிவு அவரிடமிருந்து வந்தாலும் வரும்..//

இது டாப்........!//


நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...
என்னப் பத்தி ஒண்ணும் காணோம்,

இருட்டடிப்பு செய்து விட்டீர்களா:))//

நடப்பதே நிகழ்காலத்தில்..பின் இருட்டடைப்பு எப்படி செய்ய முடியும்? :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//நிகழ்காலத்தில்... said...
என்னப் பத்தி ஒண்ணும் காணோம்,

இருட்டடிப்பு செய்து விட்டீர்களா:))
//

நீங்கள் அறிவே 'தெய்வம்' ஆகிற்றே. உங்களைப் பற்றி சொல்லி அது தப்பாகிவிட்டால், அப்பறம் தெய்வக் குத்தம் ஆகிடும்னு பயப்படுறாரோ !
:)
///

???!!!
:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Cable Sankar said...
நீங்களும் உங்க பங்குக்கு ஆரம்பிச்சிட்டீங்களா..?//

நானும் யூத்துதானே ஷங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நையாண்டி நைனா said...
hahahahaha....//

பூமராங்கா திருப்பி இருக்கேன் பாருங்க

அக்னி பார்வை said...

ஹ் அஹ ஹ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கலையரசன் said...
ரசித்து சிரித்தேன்...//

நன்றி கலையரசன்

அத்திரி said...

//இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு.//

கிகிகிகிகிகிகிகி)))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கலக்கல் ஆராய்ச்சி//

நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
ஆக மொத்தம் ஒரு முடிவும் எடுக்கல! நன்றாக இருந்தது ஐயா. மிகவும் ரசித்தேன்//


நன்றி வெ.இராதாகிருஷ்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
ஹ் அஹ ஹ//

அவ்வளவுதானா அக்னி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
//இடையே கேபிள் சங்கர்..சந்திப்பு முடிந்ததும்..எனக்கு தெரிஞ்ச பரோட்டா கடை ஒன்று பக்கத்தில் இருக்கு.//

கிகிகிகிகிகிகிகி)))))))))))//

வருகைக்கு நன்றி அத்திரி

Thamira said...

:-)) ஹ்ஹிஹி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
:-)) ஹ்ஹிஹி..//

நன்றி

anujanya said...

ஏன்? ஏன்? ஏனிந்தக் கொலவெறி?

நல்ல அலசல் சார்.. சாரி.. யூத்.

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அனுஜன்யா

மங்களூர் சிவா said...

/
வழக்கம் போல எந்த முடிவும் எடுக்காமல்..கூட்டம்..டீக்கடைக்கு கிளம்பியது.
/

:))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா