Monday, August 24, 2009

இன்னும் செத்துவிடாத மனித நேயம்...

சிங்கை நாதனுக்கான இருதய அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் தேவைப்படும் என்ற நிலையில்...பதிவுலக நண்பர்களும்..மற்றும் விஷயம் அறிந்து அவரது கல்லூரி நண்பர்களும்..பல நல்ல உள்ளங்களும்..நாங்கள் இருக்கிறோம்..கவலையை விடுங்கள் என்று கிட்டத்தட்ட 75 சதவிகித வரை இதுவரை நிதி திரட்ட உதவியுள்ளனர் என்ற செய்தி பால்ராஜ் அவர்களின் பதிவின் மூலம் தெரியவருகிறது.(http://www.maraneri.com/2009/08/latest-updates.html)இன்னும் 25% அதாவது 25000 சிங்கை டாலர்கள்தான்..அதை திரட்டிவிடலாம் என தெம்பை கொடுத்துள்ளது.உதவ எண்ணுபவர்கள் உடனே செய்யவும்.

இந்நிலையில்..அவருக்கு நடைபெறுவதாக இருந்த முதல் அறுவை சிகிச்சை ..புதனிலிருந்து வியாழன் அதாவது 27ம் நாள் காலை சிங்கை நேரம் 8மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மருத்துவம் பாட்டிற்கு..நடக்கட்டும்..நாமும் அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்வோம்.

இனி தலைப்பிற்கு வருவோம்..

இப்போதெல்லாம்..அவ்வப்போது மனிதநேயம் செத்துவிட்டதா என்ற புலம்பல்கள் வருகின்றன.."இல்லை" என்பதற்கான நிகழ்ச்சி ஒன்று திரிச்சூர் அருகே நடந்துள்ளது,

கூலி வேலை செய்யும் ஒரு தம்பதிகளின் 5 வயது மகளுக்கு..இருதயத்தில் கோளாறு.அதற்கான அறுவை சிகிச்சைக்கு 60000 ரூபாய் ஆகும் என திரிச்சூர்,குன்னம்குலம் அருகே பெரும்பிளவு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால் பெற்றோருக்கு இயலாத நிலை.அப்போது நாங்கள் இருக்கிறோம் என் உதவிக்கு வந்துள்ளவர்கள் யார் தெரியுமா?

திரிச்சூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள்.அவர்கள் சிறையில் செய்யும் வேலைக்கு ஒரு நாளைக்கு 30 ரூபாய் கொடுக்கப்படுகிறதாம்..அதை சேர்த்து அனைவரும் இதுவரை ரூபாய் 29000 கொடுத்துள்ளார்களாம்.கைதிகள் செய்தித்தாள்கள் மூலம் விஷயம் அறிந்து தாங்களே வலிய உதவ வந்தார்களாம்.இதை சிறை மேலாளர் பி.பிரதீப் தெரிவித்துள்ளார்.

அறுவைசிகிச்சை அடுத்த மாதம் நடைபெறுகிறது.அதற்குள் மீத பணத்தை சேர்த்துவிடலாம் என்றும் கைதிகள் தெரிவித்துள்ளனராம்.

இப்போது சொல்லுங்கள்..செத்துவிட்டதா மனிதநேயம்...

20 comments:

வல்லிசிம்ஹன் said...

மனித நேயம் இன்னும் இறக்கவில்லை. இதயங்கள் உறுதியாகவும்
நோயில்லாமல் இருக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

Unknown said...

மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[ananth said...
மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.]]]

ஆனந்தின் இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன்..

அனைவருக்குள்ளும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்தத்தான் மாட்டேன் என்கிறார்கள்..!

இந்தக் கைதிகள் உண்மையில் நல்லவர்கள்தான்.. சூழ்நிலையும், சட்டமும்தான் அவர்களைக் குற்றவாளியாக்கியிருக்கிறது..!

goma said...

எதற்குமே அழிவில்லை
இருக்கும் இடம்தான் தெரிவதில்லை.
மனமிருந்தும் தர இயலாமை,
உதவிகள் தேவைப்படும் இடம் அறியாமை,
தக்க நேரம் கிட்டாமை
என்ற பல காரணங்களால் ,
மனித நேயம் செத்து விட்டதாகத் தெரிகிறது.

Thamira said...

நல்ல பதிவு.

ஜோசப் பால்ராஜ் said...

10 நாட்களுக்கு முன்னால் நானும் மனித நேயம் செத்துவிட்டது என எண்ணியவன் தான். ஆனால் இன்று செந்தில் நாதன் அவர்களுக்காக உலகெங்கிருந்தும் குவியும் உதவிகளைப் பார்த்துவிட்டு என் எண்ணங்களை அடியோடு மாற்றிக்கொண்டுவிட்டேன். நேரடியாக பல நல்லவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். முகம் தெரியாத , செந்தில் நாதனை யார் என்றே தெரியாத நண்பர்கள் கூட உதவிக்கொண்டுள்ளார்கள்.

சிறைகைதிகளின் உதவி வணங்கத்தக்கது. அதுக்கு மேல சொல்ல வார்த்தை இல்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வல்லிசிம்ஹன் said...
மனித நேயம் இன்னும் இறக்கவில்லை. இதயங்கள் உறுதியாகவும்
நோயில்லாமல் இருக்கவும் இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
வல்லிசிம்ஹன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ananth said...
மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.//

உண்மை..ஆனால்..அதற்கான பல தனிப்பட்ட காரணங்களும் இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[ananth said...
மனித நேயம் செத்துவிடவில்லை. ஆனால் பல சமயங்களில் அது வெளிபடுவதில்லை.]]]

ஆனந்தின் இந்தக் கருத்தில் நான் உடன்படுகிறேன்..

அனைவருக்குள்ளும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் வெளிப்படுத்தத்தான் மாட்டேன் என்கிறார்கள்..!

இந்தக் கைதிகள் உண்மையில் நல்லவர்கள்தான்.. சூழ்நிலையும், சட்டமும்தான் அவர்களைக் குற்றவாளியாக்கியிருக்கிறது..!//


வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
எதற்குமே அழிவில்லை
இருக்கும் இடம்தான் தெரிவதில்லை.
மனமிருந்தும் தர இயலாமை,
உதவிகள் தேவைப்படும் இடம் அறியாமை,
தக்க நேரம் கிட்டாமை
என்ற பல காரணங்களால் ,
மனித நேயம் செத்து விட்டதாகத் தெரிகிறது.//

நேரம், காலம் தெரியாமை..இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வருகைக்கு நன்றி கோமதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல பதிவு.//

நன்றி ஆதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோசப் பால்ராஜ் said...
10 நாட்களுக்கு முன்னால் நானும் மனித நேயம் செத்துவிட்டது என எண்ணியவன் தான். ஆனால் இன்று செந்தில் நாதன் அவர்களுக்காக உலகெங்கிருந்தும் குவியும் உதவிகளைப் பார்த்துவிட்டு என் எண்ணங்களை அடியோடு மாற்றிக்கொண்டுவிட்டேன். நேரடியாக பல நல்லவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். முகம் தெரியாத , செந்தில் நாதனை யார் என்றே தெரியாத நண்பர்கள் கூட உதவிக்கொண்டுள்ளார்கள்.

சிறைகைதிகளின் உதவி வணங்கத்தக்கது. அதுக்கு மேல சொல்ல வார்த்தை இல்லை.//

அதேபோல் பல வேலைகளிடையே..இப்படிப்பட்ட வேலைகளிலும் ஈடுபட்டுள்ள உங்களைப் போன்றோரின் பணி மிகவும் பாராட்டத் தக்கது.
நன்றி பால்ராஜ்

vasu balaji said...

அவ்வப்போது துடிக்கத்தான் செய்கிறது. நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
அவ்வப்போது துடிக்கத்தான் செய்கிறது. நல்ல பதிவு.//

நன்றி வானம்பாடிகள்

venkat said...

மனித நேயம் சாகவில்லை - பணம் இல்லாதவனிடம், மனம் உள்ளவனிடம்.
மனித நேயம் செத்துவிட்டது - பணம் உள்ளவனிடம், மனம் இல்லாதவனிடம்.

துபாய் ராஜா said...

உண்மைதான்.செந்தில்நாதனின் இதயம் திருந்த இணையப்பதிவரெல்லாம் இதயம் திறந்து பிரார்த்திப்போம்.

இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html

சூழ்நிலைக்கைதிகள் என்றாலும் எல்லோருமே மனிதர்கள்தானே...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
venkat
துபாய் ராஜா

குடுகுடுப்பை said...

மனித நேயம் எப்போதும் இறக்காது.

குடுகுடுப்பை said...

என் அலுவலகத்தில் உள்ள சில தெலுங்கு நண்பர்கள் கூட பேபால் மூலமாக உதவியுள்ளார்கள், அவர்களுக்கு செந்தில்நாதனை யார் என்றே தெரியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனித நேயம் அற்றவனை மக்கட்பதராய் எடுத்துக் கொள்ளலாம்
குடுகுடுப்பை