Monday, November 16, 2009

வீணை எஸ்.பாலசந்தர் என்ற நடிகர்..1930 களில் ஏழு வயது சிறுவனான பாலசந்தர் சீதா கல்யாணம் படத்தில் நடித்தார்.இசைக்கலையில் தேர்ச்சியும்..சினிமாக்கலையில் அனுபவமும் அந்த வயதிலேயே அவருக்கு ஏற்பட்டு விட்டது.

தனது இருபத்திமூணாம் வயதில் 'என் கணவர்' என்ற படத்தை இயக்கினார்.ஆனாலும் அந்த நாள் படம் தான் இவரது திறமையை வெளிப்படுத்தியது.அந்தக் காலத்திலேயே புரட்சிகர கதை அமைப்புடன்,பாடல்களே இல்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற படம் இது.ஏவி.எம்.தயாரிப்பான இப்படத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

பிறகு அவனா இவன்? பெண்..போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும்..புது நடிகர்களை நடிக்க வைத்து 'பொம்மை' என்ற சஸ்பென்ஸ் நிறைந்த படத்தை எடுத்தார்.இது இவரது சொந்த படம்.கதை,திரைக்கதை,வசனம்,இசை,இயக்கம் என எல்லாப் பொறுப்பையும் ஏற்றார்.படம் முடிந்தும்..வியாபாரம் உடனே ஆகவில்லை.

ஆனால் படம் வெளிவந்த போது..எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களும் வந்தன.ஆனால் இவர் படம் மட்டுமே வெற்றி பெற்றது.சென்னை கெயிட்டி திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது .

படம் ஒட வேண்டுமானால்..நல்ல கதையம்சம் இருந்தால் போதும் என் உணர்த்திய படம் .இந்த படத்தில்தான்..ஜேசுதாஸ் அறிமுகமானார்.அவர் இதில் பாடிய பாடல் 'நீயும் பொம்மை நானும் பொம்மை'என்ற பாடல்.

பின் இவர் எடுத்த 'நடு இரவில்' என்ற திரில்லர் படமும் வெற்றி பெற்றது.

ஆனாலும் சினிமா இயக்குநர் என்பதைவிட..வீணை வித்வானான தன்னை வீணை பாலசந்தர் என்று சொல்வதையே விரும்பியவர் இவர்.

ஸ்ரீதரின் 'கலைக்கோவில்' படத்திற்கு..கதாநாயகனுக்கு வீணை வாசிக்க இவரைக் கேட்ட போது மறுத்ததுடன்'வீணை ஆராதனைக்காக..சினிமா சாதனைக்காக' என கடைசிவரை வாழ்ந்தவர் இவர்.

நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..அதனால் வீணை கிடைத்தது..நிறைய பாவம் செய்திருக்க வேண்டும் அதனால் சினிமா வாய்த்தது என்பார்.

12 comments:

goma said...

நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..அதனால் வீணை கிடைத்தது..நிறைய பாவம் செய்திருக்க வேண்டும் அதனால் சினிமா வாய்த்தது என்பார்.

சரியாகச் சொன்னார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோமா

vijayan said...

seivana thiruntha sei endrapadi vaaznthavar.KB endra copy mannanukku kidaitha publicity indha SB endra medhaikku kidaikkavillai.VIZZY.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Vijayan said...
seivana thiruntha sei endrapadi vaaznthavar.KB endra copy mannanukku kidaitha publicity indha SB endra medhaikku kidaikkavillai.VIZZY.//

உண்மை Vijayan

NO said...

அன்பான நண்பர் திரு TVR,

நல்ல சப்ஜெக்ட். வீணை பாலச்சந்தர் அவர்கள் was a man of thoughts much beyond his time. பொம்மை பட இறுதியில் எல்லா நடிகர்களையும் அறிமுகம் செய்வார், which was unique and was not done by anyone, even now in any cinema for that matter. அப்படி செய்யும் பொழுது அவர் அணிந்து கொண்டிருப்பது ஒரு அரை டிரௌசர் மட்டுமே. அதாவது வெகு casual ஆக, casual உடையில் அதை செய்வார். அந்த நாள் படத்தைப்பற்றி சொல்ல தேவை இல்லை! பாடல்கள் இல்லாமல், அசட்டுத்தனமான மிகை நடிப்பு இல்லாமல் நம்மாலும் படம் எடுக்க முடியும், அதையும் நன்றாக எடுத்து வெற்றி பெறவும் செய்ய முடியும் என்பதற்கு இந்த படமே சாட்சி!

இதில் பல ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்தார்கள் - சிவாஜி, S பாலச்சந்தர், AVM செட்டியார், ஜாவர் சீதாராமன் ஆகியோரின் தரமான output இந்த படம் என்று சொல்லலாம்! வியப்பான விடயம், அதே சமயத்தில் உறுத்துகிற விடயம், Why was "அந்த நாள்" not repeated??? அதாவது ஏன் இந்த மாதிரி பாடல்களே இல்லாத, திரைக்கதையை மட்டுமே நம்பி கொஞ்சம் realisticஆக படங்கள் தமிழில் அவ்வளவாக எடுக்கப்படவில்லை என்பதுதான்! மனதிற்கு வரும் சில படங்கள் (பாடல்கள் உள்ள படங்கள் இதில் அடக்கம் என்றாலும்) , சில நேரங்களில் சில மனிதர்கள், அவள் அப்படித்தான், உதிரிப்பூக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, பதினாறு வயதினிலே, வீடு, முள்ளும் மலரும் மற்றும் சில!

S பாலச்சந்தரும், அதற்க்கு பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார்! Maybe Hero oriented மற்றும் melodrama and masala oriented படங்களாக தமிழ் சினிமா மாறிவிட்டதால் ஆவர் அதை வெறுத்து ஒதிங்கியிருக்கலாம்! K சுப்ரமணியம், S பாலச்சந்தர், A P நாகராஜன் போன்ற இயக்குனர்கள் தமிழ் திரை உலக சரித்திரத்தில் மறக்கமுடியாத சிலர் !

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி No

vasu balaji said...

நல்ல தகவல் அய்யா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

He was a spontaneous actor.
I can never forget
his jolly life'' song.

நடுஇரவில் படம் கிடைத்தால் பார்க்க ஆசை. வெகு நல்ல பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
நல்ல தகவல் அய்யா. நன்றி.//


வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வல்லிசிம்ஹன் said...
He was a spontaneous actor.
I can never forget
his jolly life'' song.

நடுஇரவில் படம் கிடைத்தால் பார்க்க ஆசை. வெகு நல்ல பதிவு.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி

பின்னோக்கி said...

நல்ல அறிமுகம். இவர் படங்களை தேடித் தேடி பார்த்தது நினைவுக்கு வருகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
நல்ல அறிமுகம். இவர் படங்களை தேடித் தேடி பார்த்தது நினைவுக்கு வருகிறது.//

வருகைக்கு நன்றி பின்னோக்கி