Saturday, November 21, 2009

வாலி என்னும் வாலிப கவிஞன்




திரையுலக முடிசூடா கவிஞனாக கண்ணதாசன் இருந்த போது உள்ளே நுழைந்தவர் வாலி.

குதப்ப கொஞ்சம் வெற்றிலை, சீவல் ..எழுத பேப்பர்..பேனா கிடைத்தால் போதும்...சுற்றுப்புறம் பற்றி கவலையில்லை.. கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன் என்பார் இவர்.ஒவியன் ஆகணும்னு சின்ன வயசிலே ஆசை..அப்போ விகடன்ல மாலின்னு ஒரு ஓவியர் இருந்தார்..அவர் மாதிரி புகழ் பெறணும்னு வாலி ன்னு என் நண்பன் எனக்கு புனைப்பெயர் வைச்சுட்டான்..என்கிறார்..ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் என்ற பெயர் கொண்ட வாலி.

திருச்சி வானொலியில் வேலை செய்துக்கொண்டிருந்த இவரை..டி.எம்.எஸ்., சென்னைக்கு வந்துடு என்றாராம்.

எம்.ஜி.ஆருக்கு..ஓடும் மேகங்களே.வும்...நான் ஆணையிட்டால் எழுதும் போதே...மச்சானைப் பார்த்தீங்களா எழுதினேன்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு..சிக்கு புக்கு ரயிலே..எழுதினேன்..யுவனுக்கு தத்தை தத்தை
எழுதினேன்.என்னை கிராஸ் பண்ணாமல் எந்த புயலும்...தென்றலும் செல்லமுடியாது என்கிறார்.

என் பாட்டை தாத்தா ரசித்தார்,அப்பா ரசித்தார்,மகன் ரசித்தான்..இப்போது பே
ரனும் ரசிக்கிறான் என்கிறார் 78 வயது இளைஞரான இவர்.

விருதுகளைப் பற்றிக் கூறுகையில்...எழுதுகிற பாட்டுக்கு ரெமெனரேஷன் கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பேன்,,ரெககனைசேஷன் எதிர்பார்க்க மாட்டேன் என்கிறார்.

அம்மா என்று அழைக்காத பாட்டுக்கு கிடைத்த பாராட்டுகளை விட விருது என்ன பிரமாதம்..என்கிறார்.

இவர் ஆத்திகமா..நாத்திகமா என்றால்...'நான் நாத்திகன்னு எந்த இடத்திலும் வேஷம் போடலை.திராவிட இயக்கக் கொள்கைகள் பிடிக்கும்...கடவுள் இல்லை ங்கிற ஒரு கருத்தில் மட்டுமே பெரியாரிடத்தில் எனக்கு வேறுபாடு' என்கிறார் பளீச்சென்று.

அரசியல் ஈடுபாடு பற்றி கூறுகையில்..கண்ணதாசன்தான் இதிலும் எனக்கு குரு என்கிறார்...

அரசியலுக்குப் போனதால் என்னவெல்லாம் இழந்தேன் என்று அவர் எனக்கு பலவற்றைக் கூறியுள்ளார்.எனக்கு மூன்று அறிவுரை சொன்னார்..சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.

வாலி என்னும் இவ் வாலிப கவிஞரை கொள்ளுபேரனும் ரசிக்கட்டும்.

(வாலியின் பத்திரிகை பேட்டிகளின் தொகுப்பு)

(மீள்பதிவு)

10 comments:

வானம்பாடிகள் said...

அருமையான கவிஞனைப் பற்றிய அருமையான தகவல்கள். நன்றி சார்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அப்படி.., அப்படி..,

வாலிப கவிஞர் அப்படி..,

எம்.ஜி.யாருக்கும் எழுதுவார். பவித்ரனுக்கும் எழுதுவார்.

அக்பர் said...

//சொந்த படம் எடுக்காதே, புலனடக்கம் முக்கியம், அரசியல்வாதிகளிடம் நட்பாய் இரு..அரசியல்வாதி ஆகிவிடாதே..அம்மூன்று அறிவுரையும் இன்றும் ஃபாலோ செய்கிறேன்.//

இதுதான் முக்கியம்.

அவருக்கு பெருமை சேர்ப்பது அவருடைய தன்னடக்கம்தான்.

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் நண்பர் TVR அவர்களே...

மிக அழகான தகவல்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

நன்றி... நன்றி..

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி SUREஷ்

T.V.Radhakrishnan said...

நன்றி..அக்பர்

பின்னோக்கி said...

ஜனரஞ்சகக் கவிஞர்.
கொஞ்ச காலமாக ஜால்ரா சத்தம் அதிகமாகிறது :)

T.V.Radhakrishnan said...

//இராகவன் நைஜிரியா said...
சூப்பர் நண்பர் TVR அவர்களே...

மிக அழகான தகவல்களை கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

நன்றி... நன்றி..//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ராகவன்

T.V.Radhakrishnan said...

//பின்னோக்கி said...
ஜனரஞ்சகக் கவிஞர்.
கொஞ்ச காலமாக ஜால்ரா சத்தம் அதிகமாகிறது :)//

:-))))