Tuesday, January 11, 2011

சீமான் பலிகடா ஆக்கப் படுகிறாரா..

வைகோ சீமானை சந்தித்து பேசிய பின்..பின் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட ஒன்று.

சீமானை..சிறைக்கு அனுப்பியது..கலைஞராகவே இருக்கட்டும்..

ஆனால்..கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் ஈழத் தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் செய்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருந்ததாகவே இருக்கட்டும்..அதிக பட்சம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே அவரால் இருக்க முடிந்ததாகவே இருக்கட்டும்..சீமான் சற்று எண்ணிப் பார்க்கட்டும் ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என.

தேவையில்லாமல் பொடா சட்டத்தில் வைகோ வை சிறையில் அடைத்தவர் அவர்..

கலைஞர் இடமாவது சற்று உண்மையான வருத்ததை எதிர்பார்க்கலாம்.ஜெ..யிடம்..

எம்.ஜி.ஆரை.யே செயல்பட முடியா முதல்வர்..என்னை முதல்வராக ஆக்குங்கள் என ராஜீவிடம் கூறியவர்.

ஜானகி மீது இவர் சொன்ன குறையைச் சொல்லக் கூட எனக்கு மனமில்லை.

பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர்.

ஜெ இப்போது பதவி வெறியில் உள்ளார்..எப்பாடு பட்டாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

ராஜா விவகாரத்தில்..காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாகச் சொன்னதை சீமான் மறந்துவிடக் கூடாது.

நாளைக்கே..காங்கிரஸ் அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால்..தன்னிடம் இருக்கும் அனைவரையும் கழட்டிவிடவும் அவர் தயாராய் இருப்பார்.

சீமான் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய தருணம்..

அரசியலுக்கு வந்து சட்டசபைக்குச் செல்ல சீமான் ஆசைப்படுவது தவறல்ல..அந்த ஆசையை..தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் சக்திக்கு இரையாகி விடக் கூடாது.

சீமான் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து முடிவுக்கு வரட்டும்.

பதவிக்காக காவு கொடுக்க பலிகடா தேடுபவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது.

டிஸ்கி- ஆடு கசாப்புக் கடைக்காரரைத்தான் நம்புமாம்..

35 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Test

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

vasu balaji said...

டிஸ்கி ரொம்பச் சரி சார். ஆனா எங்க திரும்பினாலும் கசாப்புக் கடைக்காரராவே இருக்கும்போது ஆடு என்ன பண்ணும் பாவம்:(

NAGA INTHU said...

அப்போ உங்க வாதப்படி எதிரியை விட நம்பிக்கைதுரோகி பரவாயில்லை அப்படித்தானே?.தமிழ்இனம் அழிந்தாலும் பரவாயில்லை பதவிஆசை பிடித்தவர் உங்களுக்கு உயர்ந்தவரா?நல்லவரா?.
அரவரசன்.

KARMA said...

அய்யா,

கொஞ்சமாவது யோசிச்சு பதிவு போடுங்க. சீமான் அ.தி.மு.க பக்கம் போறார்-னு தெரிஞ்சவுடனே அதுக்காக மெனெக்கட்டு ஒரு ஆராய்ச்சி பதிவு போட வேண்டியதில்லை.

"// கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் ஈழத் தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் செய்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருந்ததாகவே இருக்கட்டும்..அதிக பட்சம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே அவரால் இருக்க முடிந்ததாகவே இருக்கட்டும்..சீமான் சற்று எண்ணிப் பார்க்கட்டும் ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என // "

இதெல்லாம் ஒரு காரணமா ? சொல்லுங்கய்யா ?

ஹிட்லர் முதல்வரா இருந்தா என்ன பண்ணிருப்பார்?
ரஜினி/ விஜய காந்த் முதல்வரா இருந்தா என்ன பண்ணிருப்பார்? .......
விசய T ராசேந்தர் முதல்வரா இருந்தா என்ன பண்ணிருப்பார்? .......

நீர் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு என்ன நொட்டிநீர் ? என்பது தான் கேள்வி.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமானால் கவிஞர் தாமரை அவர்களின் பேச்சை youtube -ல் இன்னொருமுறை பாருங்கள். மக்கள் உங்களை எதற்கு முதல்வராக தேர்ந்தெடுத்து கோட்டைக்கு அனுப்பினார்கள் ? ஒன்றுக்கும் வக்கில்லை என்றால் எதற்கு அந்த நாற்காலி உங்களுக்கு ??? இதுதான் கேள்வி.

இதே இடத்தில் இன்னொருவர் என்ன செய்திருப்பார் என்பதல்ல கேள்வி.

நல்லா..., கொலைஞர் மாதிரியே வாதம் பண்ண கற்றுக்கொன்றீர்.

தயவு செய்து அடிப்படையான இதை புரிந்து கொள்ளாமல் பதிவெழுதுவதை தவிர்ப்பது நலம்.

தமிழன் said...

சீமானும் தெளிவாக உள்ளார் நாங்களும் தெளிவாக உள்ளோம், கொலைக்கார காங்கிரசு உடன் இனி யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு தோல்விதான் அது அ.தி.மு.க என்றாலும் சரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தமிழன் என்று சொல்பவர்கள் அனைவருக்கும் உடன்பாடு உண்டு..
தோற்கடித்தால் போதாது..காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் பூண்டோடு ஒழிக்கப் பட வேண்டும்

ராஜ நடராஜன் said...

சீமானுக்கு கயிறு மேலே நடக்கும் தருணம் இப்பொழுதும் எதிர்காலமும்.விசித்திரமான தமிழக அரசியலில் இன்னொரு வை.கோ வாகி விடும் சூழல் சீமானுக்கு நிச்சயம் ஏற்படும் அ.தி.மு.கவுடன் சேர்வது.இந்த சறுக்கலில் துவங்குகிறது சீமானின் அரசியல் பயணம்.முள்ளும் படாம துணியும் கிழியாமல் பயணிக்க இயலாதபடி கூட்டணி அரசியல் யாரையும் சுயத்தை இழக்கவே வைப்பது வருத்தமளிக்கிறது.நாளைக்கே ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டால் சீமான் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்ளப் போகிறார்?

திருடா திருடியை மீறி தமிழகத்தில் மாற்றங்களுக்கான மனிதன் கிடைக்காமல் இருப்பது தமிழகத்தின் சாபம்.

குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்ட விரும்பும் தமிழக மக்களை நினைத்தால் எனக்கு அழுகை அழுகையா வருது!

Chitra said...

டிஸ்கி- ஆடு கசாப்புக் கடைக்காரரைத்தான் நம்புமாம்..


.....ஹா,ஹா,ஹா,.... இதுக்கு மேல தெளிவாக சொல்ல முடியாது.

Thekkikattan|தெகா said...

இந்த சந்திப்பில் பெரிதாக சீமானிடத்தில் என்ன ச்சாய்ஸ் இருக்கிறது?

கிடைத்ததை எடுத்து விட்டெறிவதே சமயோசிதம்.

அதற்காகவே அம்மினீயிடத்திலேயே உறைந்து போய் கிடக்க வேண்டுமென்ற தேவையுமில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்...

bandhu said...

சீமான் இப்போது போகும் இடம் பற்றிய தி மு க வினரின் கவலை : ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம்!

Reggie J. said...

டிஸ்கி- ஆடு கசாப்புக் கடைக்காரரைத்தான் நம்புமாம்.

நச்...!!! சீமான் உண்மையாகவே ஈழத்தமிழர் பற்றி கவலைப்படுகிறாரா?

Reggie J. said...

உண்மையாகவே ஈழத்தமிழர் மீது அக்கறை இருக்குமானால், சீமான் என்ன செய்திருக்க வேண்டும் - வைகோ மற்றும் நெடுமாறன் இவர்களை ஒன்று சேர்த்து தனிக்கூடடணி அமைத்து இருக்கலாம்.

He does not have a strategic thinking, rather just another tactical politician(!!??). To defeat DMK and Congress I, he is partnering with ADMK. Bull Shit! That's why, I am saying - His motive is to defeat DMK and Congress I, not to find a solution for Sri Lankan Tamils long term. Get Educated Seeman, for God's sake!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...//வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
டிஸ்கி ரொம்பச் சரி சார். ஆனா எங்க திரும்பினாலும் கசாப்புக் கடைக்காரராவே இருக்கும்போது ஆடு என்ன பண்ணும் பாவம்:(//

:(((

T.V.ராதாகிருஷ்ணன் said...

// NAGA said...
அப்போ உங்க வாதப்படி எதிரியை விட நம்பிக்கைதுரோகி பரவாயில்லை அப்படித்தானே?.தமிழ்இனம் அழிந்தாலும் பரவாயில்லை பதவிஆசை பிடித்தவர் உங்களுக்கு உயர்ந்தவரா?நல்லவரா?.
அரவரசன்.//

வருகைக்கு நன்றி Naga

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும்..புரிதலுக்கும் நன்றி Karma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழன் said...
சீமானும் தெளிவாக உள்ளார் நாங்களும் தெளிவாக உள்ளோம், கொலைக்கார காங்கிரசு உடன் இனி யார் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு தோல்விதான் அது அ.தி.மு.க என்றாலும் சரி.//
குறைந்தது காங்கிரஸ் வெல்லக் கூடாது என்பதில் நமக்குள் ஒற்றுமை உள்ளது கண்டு மகிழ்ச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும்.. நன்றி
ராஜ நடராஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும்.. நன்றி

Thekkikattan|தெகா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//bandhu said...
சீமான் இப்போது போகும் இடம் பற்றிய தி மு க வினரின் கவலை : ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவுதாம்!//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Reggie J.

கோவி.கண்ணன் said...

//பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர்.//

இது கருணாநிதிக்கும் பொருந்தும் என்று தட்டச்சும் போது நீங்கள் நினைக்கவே இல்லையா ?

குடும்பத்தினர் பதவி வேண்டுதலின் நேர்த்திக்கடனுக்கு டெல்லிக்கு காவடி,

பாம்புகள் பல்லிகள் புழங்கிய சிறையில் இருந்து வந்த பின்பு, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக,

பத்துலெட்சம் பக்தவச்சலம் கோஷம்

ஸ்பெக்டரம் உள்ளிட்ட இமாலய ஊழல்

என........சொல்லிக் கொண்டே போகலாம்.

Unknown said...

பதிவு எழுதுவதற்கு முன்னு தயவு செய்து நன்கு சிந்திக்கவும்.
சீமானும் சரி நாங்களும் சரி, மிக தெளிவாகத்தான் உள்ளோம். முதளிலேர்ந்தே சீமான் தான் சொல்லியபடிதான் நடந்துகொண்டிருக்கிறார்.
காங்கிரேசு கட்சியை அளிபதுதன் முதல் வேலை, அதற்காக முதலிலேயே தனியாக நின்றால் யாருக்கு லாபம்.
ஆகவே முதலில் காங்கிரேசு பிறகு மற்றவை.

நன்றி.
செந்தில்குமரன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>>>வானம்பாடிகள் said...

டிஸ்கி ரொம்பச் சரி சார். ஆனா எங்க திரும்பினாலும் கசாப்புக் கடைக்காரராவே இருக்கும்போது ஆடு என்ன பண்ணும் பாவம்:(


repeattu

damildumil said...

ஈழப்போர் உச்சத்தில் இருந்த பொழுது, நாங்கள் ஐந்து லட்சம் தமிழர்கள் கடல் கடந்து போய் புலிகளுக்கு ஆதரவாக போரிடுவோம் வெத்து கூச்சல் போட்ட ஆளு, சண்டை நடக்கும் போது என்ன புடுங்கிட்டு இருந்துச்சு. நீங்கள் மீனவர்களை அடித்தால் நாங்கள் உங்கள் மாணவனை அடிப்போம்ன்னு சொன்னியே அதையாச்சும் செஞ்சியா? அதுவும் இல்லை. அந்த ஆளுக்கு வாய் தான் காது வரை நிளம். மற்றபடி சரியான தொடை நடுங்கி. இவரை போய் ஈழத்தை காக்க வந்த பரம்பொருள் போல் சில மடையர்கள் பேசுவதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது.

damildumil said...

சினிமாவில் வீர வசனம் எழுதுபவர், நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருப்பார்ன்னு நம்பும் மக்கள் இருக்கும் வரை நாம் தமிழர்,யார் தமிழர்,ஏன் தமிழர்ன்னு எத்தனை கட்சி வேனாலும் ஆரம்பிக்கலாம்

ராஜ நடராஜன் said...

//வருகைக்கும்..கருத்திற்கும்.. நன்றி
ராஜ நடராஜன் //

இந்த பல்லவிதான் எல்லோருக்குமே அத்துபடியாயிற்றே:)

புதுசா சரணம் பாடினா கேட்க நல்லாயிருக்குமில்ல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ராஜ நடராஜன் said...
//வருகைக்கும்..கருத்திற்கும்.. நன்றி
ராஜ நடராஜன் //

இந்த பல்லவிதான் எல்லோருக்குமே அத்துபடியாயிற்றே:)

புதுசா சரணம் பாடினா கேட்க நல்லாயிருக்குமில்ல//


அட நன்றின்னு கூட சொல்ல விட மாட்டேங்க்கறாரே..
(தங்கவேலு பானியில் படிக்கவும்)
இனி விஷயத்திற்கு வருகிறேன்.
என் எண்ணங்களை இடுகையாக்கியுள்ளேன்.
அதற்கான ஆதரவு கருத்து, மாற்று கருத்து, இடுகையைப் புரிந்துக் கொண்டு வேண்டுமென்றே வம்புக்கிழுக்கும் கருத்துகள் என பின்னூட்டம்.
பின்னூட்டம் இட்டவர்கள் கருத்துகள் அவை.என் கருத்தைச் சொன்னது போல அவர்கள் கருத்தைச் சொல்லியுள்ளனர்.
அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியது என் கடமை.அதே நேரம் அவர்களுக்கான கருத்தில் தலையிட, விவாதிக்க நான் தயார் இல்லை.
என்றாலும்..சீமான்..இரண்டில் எந்த கட்சியை ஆதரித்தாலும் அது அவரை சாதாரண அரசியல்வாதி ஆக்கிவிடும்.
இப்படியில்லாததால்தான் நெடுமாறன் இன்னும் மனதில் இருக்கிறார்.

Anand K Lingam said...

"சீமான் பலிகடா ஆக்கப் படுகிறாரா.."


அய்யா,

இந்த பதிப்பை பதிவு செய்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

தங்களது இந்த பதிப்பின்காரணமாக நான் எனது கருத்தை பதிவு செய்துகொள்ள வசதியாக உள்ளது...

அண்ணன் சீமான் பலிகடா ஆக்கப்படுகிறார என்று தாங்கள் கவலைகொள்ள வேண்டாம்.

2010 Dec 25 M.G.R. நகரில் நடந்த வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் ரொம்ப

தெளிவாக சொன்ன செய்தி நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நோக்கம் DMK மற்றும் congress

இருவரையும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பது , அதற்கான ஒரு கருவிதான் ADMK. DMK மற்றும் congress

இரண்டயுமே அளிப்பதுதான் எங்கள் முதல் நோக்கம் . தங்களது கவனத்திற்காக இந்த Link...

http://www.thedipaar.com/news/news.php?id=22482

இவை எங்கள் அண்ணனின் முழக்கங்களில் சில ............

மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் , நாம் தமிழர் என்பதை உணருங்கள் ....

நம் சகோதரர்களின் விடுதலைக்காக குரல்கொடுங்கள் ....

http://www.naamtamilar.org/

Anand K Lingam said...

"சீமான் பலிகடா ஆக்கப் படுகிறாரா.."


அய்யா,

இந்த பதிப்பை பதிவு செய்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

தங்களது இந்த பதிப்பின்காரணமாக நான் எனது கருத்தை பதிவு செய்துகொள்ள வசதியாக உள்ளது...

அண்ணன் சீமான் பலிகடா ஆக்கப்படுகிறார என்று தாங்கள் கவலைகொள்ள வேண்டாம்.

2010 Dec 25 M.G.R. நகரில் நடந்த வீரவணக்கம் பொதுக்கூட்டத்தில் அண்ணன் சீமான் அவர்கள் ரொம்ப

தெளிவாக சொன்ன செய்தி நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நோக்கம் DMK மற்றும் congress

இருவரையும் தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பது , அதற்கான ஒரு கருவிதான் ADMK. DMK மற்றும் congress

இரண்டயுமே அளிப்பதுதான் எங்கள் முதல் நோக்கம் . தங்களது கவனத்திற்காக இந்த Link...

http://www.thedipaar.com/news/news.php?id=22482

இவை எங்கள் அண்ணனின் முழக்கங்களில் சில ............

மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் , நாம் தமிழர் என்பதை உணருங்கள் ....

நம் சகோதரர்களின் விடுதலைக்காக குரல்கொடுங்கள் ....

http://www.naamtamilar.org/

Prakash said...

Can expect below shall happen in due course,

1. Jaya shall never meet Seemon or she will not allow Seemon to meet her in Boes Garden or ADMK HQ.
2. All dealings with Seeman shall be done thru ViKO only and Jaya will treat Seeman as untouchable.
3. Jaya & Seemon shall never share a common dias in any public meeting.
4. If Seemon & his party is contesting in any constituency, Jaya shall NOT campaign in those Constituencies.
5. If ADMK losses the election, CHO and other likeminded ADMK sympathizers shall say, because of “terrorists” like Seemon supported and campaigned for ADMK, it lost the election.

Though DMK to be defeated because of its recent Anti Tamil policies and becoming slave of Congress.

But the question is,

BY WHOM DMK to be defeated?

Is it by the hands of Brahminical elements like CHO & Jaya Or Is it by biased North Indian Vested elements who wants to defame Dravidian identity. No way…DMK to be defeated only by a True Tamil party. This might not happen during this election, but Seemon & likeminded parties need to become a mainstream political party and do this in 2016.

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

ஞாஞளஙலாழன் said...

விமர்சிப்பது யார்க்கும் எளிது. இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் சீமான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் நண்பரே?