Friday, January 7, 2011

பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மத்திய அமைச்சர்

2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்கிறார் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல்
நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியை காங்கிரஸ் மதிக்கிறது.அதே நேரத்தில் அவர் கூறியுள்ள 1.76 லட்சம் கோடி நஷ்டம் எந்தக் கணக்கின் அடிப்படையில் கூறியுள்ளார் எனத் தெரியவில்லை.
சில தவறான கணக்கீட்டு முறையைப் பின்பற்றியுள்ளார்.அதில் ஏராளமான பிழைகளும்,தவறுகளும் உள்ளன.இந்தக் கணக்கை ஏற்கவே முடியாது.
தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதியை செய்துக் கொண்டுள்ளனர்..என்றுள்ளார்.

டிஸ்கி -கபில்சிபல் மத்திய அமைச்சர் ஆவதற்கு முன் உச்சநீதிமன்ற வக்கீல் ஆவார்..ஒரு வக்கீலுக்கு தன் கட்சிக்காரருக்காக வாதாடி, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டிய கடமை உண்டு.

18 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

கபிலின் கூற்றையும் சிறிது செவிமடுக்கலாமே ...அது தானே சிறந்தது ...

மயாதி said...

ஒருவேளை அந்தத் தொகை குறைவு என்று சொல்ல வருகிறாரோ?

தம்பி கூர்மதியன் said...

ஒரு வக்கீலுக்கு ஆராயும் குணமும் இருக்கலாம் தானே.. நண்டு@நொரண்டு சொல்வது போல கொஞ்சம் அக்கோணத்தையும் கவனிக்கலாமே...!!!

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்தக்கணக்கு பி.ஜெ.பி காரர்களுக்கான மறைமுகமான அறிக்கை, அதாவது நீங்கள் நினைக்கிற அளவுக்கெல்லாம் நாங்கள் அடிக்கவில்லை அதனால் நீங்கள் கேட்கிற பங்குத்தொகையை தர இயலாது என்பதற்காக...

குறை ஒன்றும் இல்லை !!! said...

அப்படியெனில் ராசா மீது நடவடிக்கை எதற்கு ? எதிர்கட்சிகளும், ஊடகங்களுமே காரணமெனில் ஆளுங்கட்சி எதற்கு ? அவர்களையே ஆள விடலாமே? உச்ச நீதிமன்றத்தில் வழக்கெதற்கு ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
கபிலின் கூற்றையும் சிறிது செவிமடுக்கலாமே ...அது தானே சிறந்தது ...//மடுத்திடுவோம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மயாதி said...
ஒருவேளை அந்தத் தொகை குறைவு என்று சொல்ல வருகிறாரோ?//
கபில் சிபல் மிகவும் புத்திசாலி..இந்த அளவில் இது மட்டுமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தம்பி கூர்மதியன் said...
ஒரு வக்கீலுக்கு ஆராயும் குணமும் இருக்கலாம் தானே.. நண்டு@நொரண்டு சொல்வது போல கொஞ்சம் அக்கோணத்தையும்
கவனிக்கலாமே...!!!//


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இந்தக்கணக்கு பி.ஜெ.பி காரர்களுக்கான மறைமுகமான அறிக்கை, அதாவது நீங்கள் நினைக்கிற அளவுக்கெல்லாம் நாங்கள் அடிக்கவில்லை அதனால் நீங்கள் கேட்கிற பங்குத்தொகையை தர இயலாது என்பதற்காக...//


எனக்கும் பி.ஜே.பி., யின் குரலை ஒடுக்கவே இப்படி என்றே தோன்றுகிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குறை ஒன்றும் இல்லை !!! said...
அப்படியெனில் ராசா மீது நடவடிக்கை எதற்கு ? எதிர்கட்சிகளும், ஊடகங்களுமே காரணமெனில் ஆளுங்கட்சி எதற்கு ? அவர்களையே ஆள விடலாமே? உச்ச நீதிமன்றத்தில் வழக்கெதற்கு ?//
அதுதானே..எதற்கு..எதற்கு..எதற்கு...
ராஜா ராஜினாமா எதற்கு
பிரதமர் சொல்லைக் கேட்கவில்லை என்பது எதற்கு
டாடா ..நீராடியா..பேச்சு எதற்கு...
ஒரு குறைன்னு சொல்லமுடியலீங்க

Chitra said...

:-(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சித்ரா

nerkuppai thumbi said...

ஊழல் செய்தார் என்பதில் ஒரு ஐயமும் இல்லை.
தணிக்கை அதிகாரிகளே மூன்று விதமாக வருவாய் இழப்பை மதிப்பிடலாம் என மூன்று தொகைகள் கூறினார். அவற்றில் அதிகமான தொகையான 1,76,000 மனதில் பதிந்து விட்டது. அவர்கள் கணக்கிலும் பிழைகள் இருக்கலாம். அவர்களும் அரசு அதிகாரிகள் தானே, பிழைகள் செய்வது அவர் பிறப்புரிமை.
கபில் சிபல் சொல்வது ஊழல் அவ்வளவு இல்லை; கொஞ்சம் கம்மி; சுமார் ஒரு லட்சம் கோடி தான்! மீடியாக்களே ரொம்பவும் சத்தம் போடாதீர்கள்.
அவர் கூறுவதையும் செவி மடுத்து விட்டோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி nerkuppai thumbi

செந்தழல் ரவி said...

கபில்சிபல் சொல்வது 100 சதவீதம் உண்மையே !!!

அரசன் said...

பண்ணினதும் பண்ணியாச்சு...

அதை மையமா வச்சி பல கோடிகள் அரசுக்கு நட்டமாச்சு ....

புது புது கதை விட்டு மறைக்க முயலும் செயல் இது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
கபில்சிபல் சொல்வது 100 சதவீதம் உண்மையே !!!//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி ரவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அரசன் said...
பண்ணினதும் பண்ணியாச்சு...

அதை மையமா வச்சி பல கோடிகள் அரசுக்கு நட்டமாச்சு ....

புது புது கதை விட்டு மறைக்க முயலும் செயல் இது//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி அரசன்