(2009ல் என் வலைப்பூவில் இத்தொடரை எழுதினேன்.இன்று பல புதியவர்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில், இத் தொடரை மீள் பதிவிடுவது அவசியம் எனக் கருதியதால் ...மீள் பதிவிடுகிறேன்)
சிவாஜி கணேசன்...
தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்..
இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.
ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.
படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.
ஆம்...அவர் ஒரு பல்கலைக்கழகம்..சகாப்தம்..
இனி வாரம்தோறும் ..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.
என் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.
இனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..
தமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்" என்பதுதான்.பின் திரையில் வெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.
அதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.
பராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.
1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)
பூங்கோதை
-----------------
தெலுங்கில் பர்தெசி என்றும் தமிழில் பூங்கோதை என்றும் எடுக்கப்பட்ட படம் அஞ்சலி பிக்க்ஷர்ஸ் தயாரிப்பு.திரைக்கதை,இயக்கம் எல்.வி பிரசாத்.இசை ஆதி நாராயண ராவ்.
சிவாஜி யின் முதல் படமாக இது வெளிவந்திருக்கக் கூடும்.ஆனால்..நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில்..சற்று தள்ளி ..சில மாதங்கள் இடைவெளியில் வந்த படம் இது. 7-2-53 அன்று இப்படம் வெளியானது.
நடிகர் திலகத்துடன் ஏ.நாகேஸ்வர ராவ், அஞ்சலி தேவி, ரங்காராவ் நடித்திருந்தனர்..
சீகிரி என்னும் மலை வாசஸ்தலத்தில் பூ வியாபாரம் செய்து வருபவ்ள் லட்சுமி
சந்திரன் அங்கு வந்து தங்கும் நேரத்தில் ,அப்பூக்காரியுடன் காதல் ஏற்பட்டு..ஒரு கோயிலில் இருவரும் மணமுடிக்கின்றனர். லட்சுமி கரு தரித்ததும் ..மணமான செய்தியை அறிகிறார் அவர் தந்தை.சந்திரனை அவர் பார்க்க விரும்புகிறார்.ஆனால்..அவனோ தவிர்க்க முடியாத காரணங்களால் அவ்விடத்தை விட்டு ..லட்சுமியிடமும் சொல்லாது சென்று விடுகின்றான்.
இடைபட்ட காலத்தில்..லட்சுமியின் தந்தை ஊராரின் ஏச்சுகளைக் கேட்க முடியாது தற்கொலை செய்து கொள்கிறார்.லட்சுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதனிடையே அவளைத் தேடிவரும் சந்திரனிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் சொல்லப் படுகிறது.
சந்திரனின் நண்பரின் மகன் ஆனந்த.நண்பன் இறக்கும் நேரத்தில் ..ஆனந்தை வளர்க்கும் பொறுப்பை சந்திரனிடம் ஒப்படைக்கிறான்.
லட்சுமியின் பெண் வளர்ந்து வளர்ந்து..ஆனந்தை விரும்புகிறாள்.ஆனால் லட்சுமி அதை விரும்பவில்லை..
சந்திரன் ,லட்சுமியை மீண்டும் சந்தித்தானா..ஆனந்த் லட்சுமியின் மகளை மணந்தானா..என்பதே மீதக்கதை.
திரும்பிப்பார்
------------------
அடுத்து.திரும்பிப்பார்..
வெளியான தேதி 10-7-1953
இதிலும் கலைஞர் வசனம்..
மாடெர்ன் தியேட்டர்ஸ் தயாரிக்க டி ஆர் சுந்தரம் இயக்கம்.
ஜி ராமநாதன் இசையில் எஸ்.சி.கிருஷ்ணன் பாடிய "கலப்படம்..கலப்படம்" என்ற பாடல் பிரபலம்
பண்டரிபாய் நடித்திருந்தார்...படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..
திரும்பிப்பார் படத்தில் செக்ஸ் ஒன்றே வாழ்க்கையின் பரமானந்தம் என நினைத்து, யாராக இருந்தாலும் பெண்டாள துடிக்கிற மோசமான வேடம் பாத்திரம்.. பராசக்தி குணசேகரனுக்கும் அடுத்த ஆண்டு வந்த திரும்பிப்பார் பரமானந்தத்திற்கும் இடையேதான் நடிப்பில் எவ்வளவு வேறுபாடு..
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
.படம்..மாபெரும் வெற்றி படமாக அமைந்தது எனலாம்.
1954..அடுத்த பதிவில்...
3 comments:
தவப்புதல்வனின் சிறப்புகள்...
தொடர்கிறேன்...
tm2
அருமையான பதிவு.
நன்றி.
தொடருங்கள், தொடர்கிறேன்.
Post a Comment