ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Tuesday, November 20, 2012
தமிழுக்கு அமுதென்று பெயர் - 3
காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.
ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.
உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.
மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.
கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இவ்வாறான பாடல்கள் இன்றைய இளம் தலைமுறையினர் ரசிக்கவேண்டும்.
உங்களைப்போன்றோரால் தமிழ் வாழும். வாழ்கிறது. வாழ்ந்துகொண்டிருக்கிறது.
சிலேடைப்புலவர் ..என்னே தமிழ் இன்பம். கணினி புதுப்பிக்கிறது.
ananthako.blogspot.com
அருமை...
நன்றி...tm2
மிகவும் அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
வருகைக்கு நன்றி Sethuraman Anandakrishnan
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி தமிழ் காமெடி உலகம்
Post a Comment