ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, November 14, 2012
'துப்பாக்கி'யால் சர்ச்சை.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு!
துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை விமர்சித்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. தமிழகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் நன்றாக இருப்பதாக பாசிட்டிவான ரிசல்ட் வர ஆரம்பித்துள்ள நிலையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
மும்பை தீவிரவாத சதிச் சம்பவப் பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம்களை விமர்சிப்பது போல இப்படம் உள்ளதாக தேசிய லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. மேலும் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இணைந்து விஜய் வீட்டு முன்பு போராட்டம் நடத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து விஜய் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் நீலாங்கரை வீட்டுக்கும், அவரது பெற்றோர் வசித்து வரும் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
(தட்ஸ் தமிழ்)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
துப்பாக்கி படம் இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனா புரிந்தது. படத்தில் வரும் குண்டு வைப்பவன்,அயோக்கியன் எல்லாம் இந்துவாக அல்லது பிற மதத்தவனாக இருக்கணும். அவர்களை எல்லாம் பிடித்து கொடுக்கும் நல்லவர் இஸ்லாமியனாக இருக்கணும். இவர்களின் தொல்லைகளுக்குக்கு அளவே இல்லை.
வருகைக்கு நன்றி வேகநரி
பேசாமல் விஜய் படத்தைப் பார்க்கச் சொல்லலாமே?
நன்றி அப்பாதுரை
Post a Comment