கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.
சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.
முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே
என்கிறார்.
அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.
இனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..
எண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.
உதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று
எந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து
14 comments:
தமிழின் நயம்பட உரைத்தீர்கள் நன்று.
தமிழின் நயம்பட உரைத்தீர்கள் நன்று.
உண்மையிலயே தமிழுக்கு அமுதென்று பெயர் தான்
சிறப்பை அறிந்தேன்...
நன்றி...
tm2
தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html
நன்றி
தமிழின் வளமை அருமை.
அன்பின் காஞ்சனா இராதாகிருஷ்ணன் - சிவபெருமானின் கண்கள் தாரை வார்க்கப்பட்ட பிற்கு மீதமிருப்பது அரைக்கண்ணே - ஆகா இப்படியும் ஒரு சிந்தனை - காளமேகத்தின் சிலேடை சிறப்பு வாய்ந்தது. தமிழின் சிறப்பும் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
வருகைக்கு நன்றி முனைவர் குணசீலன்
வருகைக்கு நன்றி மலரின் நினைவுகள்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி vijay periasamy
வருகைக்கு நன்றி Cheena sir
அழகான தமிழின் தகவல்! அருமை!
வருகைக்கு நன்றி கிரேஸ்...
Post a Comment