Monday, March 25, 2013

தைரியத்தை இழக்கிறார்களா திராவிடத் தொண்டர்கள்....




ஒரு காலத்தில்..திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர் என்றால்...தைரியமானவர் என்றும் பொருள் கொள்ளும் வகையில் இருந்தனர் தொண்டர்கள்..தலைவர்கள்.

திராவிட முன்னேற்ற கழகம் உருவானபோது.. அதில் இருந்த பலம் மிக்க..தொண்டர்கள் ஆதரவு மிக்க, தனக்கென தன்னை பின்பற்றுவோர் இருக்க பல வலிமையான தலைவர்கள் இருந்தனர்.

உதாரணத்திற்கு...அண்ணா...நேர்மைக்கு பெயர்போன தலைவர்..அவருக்கு ஆதரவாக, சம்பத், நெடுஞ்செழியன்,மதியழகன்,சாதிக், எம்.ஜி.ஆர்.,ராஜாராம்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்களை நம்பி பல லட்சம் தொண்டர்கள்..எந்த தியாகமும் செய்யத் தயாராய்..

அவ்வளவு ஏன்...அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நான், அநையும் மீறி...ஏ.வி.பி. ஆசைத்தம்பி அவர்களுக்கு அம்பத்தூரில் ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளேன்.

ஆனால்..இன்றைய தொண்டர்களிடம் அந்த அளவு வீரமோ..கட்சிப் பற்றோ உள்ளதா என்றால்..தலையை இடமிருந்து வலம் ஆட்ட வேண்டியதுதான்.

கருத்து வேறுபாடால் சம்பத் , அண்ணா கலத்திலேயே பிரிந்து தனிக்கட்சி தொடங்கி தோல்வியடைந்தார்.

அண்ணாவின் மறைவிற்குப் பின்...முதல்வர் யார்..என்ற கேள்வியின் போது..பரவலாக நெடுஞ்செழியன் பெயர் பேசப்பட்டாலும், தொண்டர்களின் ஆதரவைத் தவிர..எம்.ஜி.ஆரின் பக்கபலம் கலைஞரை தலைவராக தேர்ந்தெடுத்தது.

பின்னர்..இதேக் கட்சியைச் சேர்ந்த..எம்.ஜி.ஆர்., தனிக் கட்சி ஆரம்பித்து..தன் சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடித்தார்.நெடுஞ்செழியன் தனிக்கட்சி ஆரம்பித்து..ஆதரவு இல்லாததால் அ,தி.மு.க.வில் இணைந்தார்.வை.கோ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து ம.தி.மு.க., ஆரம்பித்தார்.

இப்படியாக தி.மு.க.,விலிருந்து பலர் பிரிந்து தனிக்கட்சிகளை ஆரம்பித்தாலும்..தாய்க் கட்சி சேதமடையவில்லை.

ஆனால்...சமீப காலங்களாக நடந்துவரும் நிகழ்ச்சிகளைக் கண்டால்...இவர்கள்..கட்சியை உடைத்து, அழித்து...புதைத்துவிடுவார்கள் போல இருக்கிறது.

இதற்கான காரணம் என்ன..

என சற்று யோசித்தால்..கட்சித் தலைமையிடம் முன்னர் இருந்த கண்டிப்பு இல்லை..

தலைவர் என்றால்..ஒரு பயம் கலந்த மரியாதை இருக்க வேண்டும்..அது இன்று மிஸ்ஸிங்.

தொண்டர்களுக்கும்..மக்களுக்கும் கட்சி தலைமையிடமும், கட்சியிடமும் சற்று அவநம்பிக்கை எற்பட்டு விட்டது..

இக்கட்டத்தில்..பாரம்பரியம் மிக்க இக்கட்சி செல்வாக்கை இழக்காமல் இருக்க வேண்டுமாயின்..

மீண்டும் தலைமையிடம்..கண்டிப்பும், தவறு யார் புரிந்தாலும் அதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கும் திறனும் வேண்டும்.

இது இல்லாவிடின்...

கட்சி மக்கள் ஆதரவை மட்டுமல்ல..தொண்டர்களின் ஆதரவையும் இழந்து...அழிவை நோக்கிப் போவதை தடுக்க முடியாது.

6 comments:

Yaathoramani.blogspot.com said...

நடு நிலையான நேர்மையான அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

bandhu said...

//மீண்டும் தலைமையிடம்..கண்டிப்பும், தவறு யார் புரிந்தாலும் அதை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கும் திறனும் வேண்டும்.//
இது தான் உதைக்கிறது. பலரும் விமர்சனம் செய்யும் பெரிய தவறுகள், உண்ணாவிரத நாடகம், ஈழப்போரின் போது கடிதம் அனுப்பியது.. பதவிக்கு நேரில் போனது, போன்ற தவறுகளுக்கு காரணமே 'தலைவர்' தான் என்றபோது .. எங்கு நடவடிக்கை எடுப்பது?

தமிழ்மகன் said...

கணிப்பொறியை Assembling செய்வது எப்படி? ----- http://www.mytamilpeople.blogspot.in/2009/08/assembling.html

Unknown said...

முற்றும உண்மை! துணிவு வருமா!

VOICE OF INDIAN said...

உண்மை நல்வாழ்த்துக்கள்