தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)
முல்லைத் திணை- பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி
இனி பாடல்-
ஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறென முகைக்கு நாடற்குத்
துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே.
-ஒக்கூர் மாசாத்தி.
என் கண்கள், மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,மேகம் மழைபெய்து கலந்த, முல்லை நிலத்திலுள்ளனவாகிய, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, உறக்கத்தையொழிந்தன.
(கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்து வருந்துகின்றேன்.
No comments:
Post a Comment