Friday, February 18, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(18-2-11)

125 வருடங்களாக கோலோச்சி நிற்கும் கோகோகோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியத்தை அமெரிக்காவிலிருந்து ஒலி பரப்பாகும் வானொலி ஒன்று வெளியிட்டுள்ளது.தற்போது உலகம் முழுதும் 200 நாடுகளில் நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில்கள் இப் பானம் விநியோகிக்கப் படுகிறது (மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற சச்சீன் என்ன செய்யப் போகிறார்)2)2-ஜி ஸ்பெக்ட்ரம் விலை குறைவாக விற்றதன் மூலம் ஆ.ராசா 3000 கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார் என சி.பி.ஐ., ,மற்றும் அமுலாக்கப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது.(3000கோடி வேறு யார் யாருக்கு விநியோகப் பட்டிருக்கும்).3)உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் திரைப்படத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.திரையரங்குகள் 2 காட்சிகளை ரத்து செய்துவிட்டதாகவும், 50 புதிய படங்கள் வெளியீடும் முடக்கப் பட்டுள்ளதாம்.4)உலக அளவில் அதிகம் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடம் சீனாவிற்கு.அங்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இதனால் இறக்கின்றனராம்.இதே நிலை நீடித்தால் அடுத்த 20 ஆண்டுகளில் 35 லட்சம் பேர் பலியாகக் கூடும் என எச்சரித்துள்ளனர் .இதனால் சீன திரைப்படம்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைபிடிக்கும் காட்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என சீன அரசு உத்தரவிட்டுள்ளதாம்.(அன்புமணி சீன அரசியலுக்கு செல்லலாம்.)5)வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக உணவுப் பொருள்களை வழங்கினால் அரசுக்கு ஆண்டுக்கு 1,75,000 கோடி இழப்பு ஏற்படும்.அதைத் தாங்குவது அரசுக்கு சாத்தியமில்லை என்கிறார் பிரதமர்.ஆனால் லட்சக்கணக்கான கோடிகள் ஊழல் நடக்கிறதே..அதை மட்டும் அரசு எப்படி தாங்குகிறது..(ஏழைகள் தயவு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைத்தால் போதுமே)6)எல்லாப் பத்திரிகைகளும் தலையங்கம் எழுதுகின்றன..ஆனால் சமீப காலங்களாக 'தினமணி'யில் வரும் தலையங்கங்கள் மிகவும் அருமையாகவும்..பல விஷயங்களை அறிந்துக் கொள்ளக் கூடிய தன்மைத்தாயும் உள்ளன..பாராட்டுகள் அதை எழுதுபவருக்கு.அதில் வந்த சமீபத்திய தலையங்கம் ஒன்றிலிருந்து சில பகுதிகள்..

அரசின் ஆதரவுடன் தவறுகள் மறைக்கப்படுகின்றன.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஊழல் வழக்குகளில் தீர்ப்புகள் காலவரையின்றி தள்ளிப் போடப்படுகின்றன.

இதனால்..ஜனநாயகத்தின் மீது வெறுப்பும்,சலிப்பும்,நம்பிக்கையின்மையும் ஏற்படுகிறது.

சட்டத்தின் பிடியிலிருந்து ஒருத்தர் தப்பலாம்..ஆனால் தருமத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

சட்டமும்,நீதியும் சாமான்யனுக்கு மட்டுமல்ல...அனைத்து இந்திய குடிமகனுக்கும் சமம் என்று உறுதிப் படுத்தினால் மட்டுமே அது முறையான மக்களாட்சியாக அமையும்.

20 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய தொகுப்பும் அருமை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏய்ய்ய்.. நான் தான் பஸ்ட்..

ஓட்டு இல்லாமலா.. இதோ போட்றேன்..

போடு முத வோட்டை..

kathir said...

தினமணி தலையங்கம் நன்றாக இருப்பது உண்மைதான்

goma said...

தேங்காய் மாங்காய் பட்டாணியின் கூட்டணி சூப்பர் என் ஓட்டு இந்த அணிக்குத்தான்

vasu balaji said...

மூவாஆஆஆஆஆஆயிரம் கோடியா? அவசரப்பசிக்கு அரிசிமாவை அள்ளி அடைசுண்டுது பக்கி:)))

Chitra said...

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் திரைப்படத்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.திரையரங்குகள் 2 காட்சிகளை ரத்து செய்துவிட்டதாகவும், 50 புதிய படங்கள் வெளியீடும் முடக்கப் பட்டுள்ளதாம்.


.... So what? எதற்கு மவுசு அதிகமோ அதுக்கு கூட்டம் சேரப் போகுது.... இரண்டுமே பிசினஸ் என்றுதான் ஆகி போச்சே...
விளையாட்டுத் திறனும் கலையும் மோதிக் கொண்டால் தான் கவலைப்படணும்... :-)

ஹேமா said...

//சட்டத்தின் பிடியிலிருந்து ஒருத்தர் தப்பலாம்..ஆனால் தருமத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.//

இது சும்மா...பொய் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஹேமா..புரிகிறது..
பொறுத்திருந்து பாருங்கள்

சக்தி கல்வி மையம் said...

தேங்காய் மாங்காய் பட்டாணியின் கூட்டணி சூப்பர்...

Unknown said...

nice news

மாதேவி said...

அருமையான தகவல்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கவிதை வீதி # சௌந்தர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி kathir

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D R Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மாதேவி