Wednesday, February 2, 2011

ஆ.ராசா கைது..தலைவர்கள் கருத்து..

கலைஞர்- எதிர்க் கட்சிகளின் சதிதான் இது.எனக்கு ராசா மீது முழு நம்பிக்கை உண்டு.அவர் மழைக்கால இரவுக்குப் பின் விடியலில் தோன்றும் சூரியனாய் ..களங்களிலிருந்து விடுபட்டு பிரகாசிப்பார்.வானம் அப்போது முழு நீல நிறத்தில் இருக்கும்.அப்போதும் கடலில் உங்களைக் காக்க இந்த கருணாநிதி கட்டையாய் கிடப்பான்

ஜெ- ஆ.ராசாவின் கைது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அது வெறும் கைதுடன் நின்றுவிடாது, நீதி மன்றம் தண்டனையும் வழங்கும் என நம்புகிறோம்.அதை வலியுறுத்தி கானாடுகாத்தான் ஊராட்சிமுன் அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்

தங்கபாலு-அன்னை சோனியாமுன் எடுக்கப்படும் முடிவுகளுக்கே..இந்த பாலு தலை வணங்குவான்.அதுவே இறுதியானது..உறுதியானது,காங்கிரஸ், தி.மு.க., கூட்டணி வலுவாய் உள்ளது

இளங்கோவன்-ஆ.ராசாவின் கைது..வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் எதிக்கட்சியாய் இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாய் இருந்தாலும் சரி..தி.மு.க., அதில் எங்களுக்கு பங்களிக்க வேண்டும்.இதை தலைமையிடம் வலியுறுத்துவோம்

வை.கோ- சிங்களப்படையால் மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து பிரதமரிடம் முறையிட்டேன்.என் கொள்கைகளை பிரதமர் பாராட்டினார்.ஆ.ராசாவின் கைது..இம் மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என எண்ணுகிறேன்

இரு கம்யூனிஸ்ட்கள்- அ.தி.மு.க., வுடன் கூட்டணிக்கு நாங்கள் பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என்றதும்..பயந்து எடுக்கப் பட்டவையே இந்த கைது.பாராளுமன்றத்தை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை..

ராமதாஸ்-ராசாவின் கைது சி.பி.ஐ., யின் விருப்பம் .இதில் பா.ம.க., தலையிடாது.எங்கள் எண்ணத்தை ஃபெப்ரவரி முதல் வார முடிவில் தெரிக்கிறேன்

விஜய்காந்த்-இது தி.மு.க., வின் அராஜகத்திற்கு விழுந்த அடி.கலைஞர் பற்றி எவ்வளவோ அறிவேன்..ஆனாலும்.அப்போது நான் அவருடன் இருந்த ஒரே காரணத்தால்..அதை சொல்லாமல் இருக்கிறேன்..கலைஞர் தோல்வி உறுதி

சீமான்-பேயுடன் சேர்ந்து பிசாசை முதலில் விரட்டுவேன்..பின் பேயையும் விரட்டுவேன்..பேய்,பிசாசால் என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் சீமான் ஓயமாட்டான்.

பா.ஜ.க.,- இந்த கைது தாமதாக செயல்படப் பட்டுள்ளது.எங்களுடன் கூட்டு சேர எல்லாக் கட்சிகளுக்கும் எங்கள் கதவு திறந்தே இருக்கும்.கடை விரித்துள்ளோம்..கொள்வார் இல்லை..

காமன்மேன்-இது போல பல கைதுகளைப் பார்த்து விட்டோம்.அடுத்தது ஆஸ்பத்திரியில் அனுமதி..அப்புறம் கேஸ் வருஷக்கணக்காய் நடக்கப் போகிறது.இதுவரை இந்தியாவில் ஊழலுக்காக நீதிமன்ற தண்டனை அடைந்த அரசியல்வாதி யாருமே இல்லை என்பதை மறந்து விடுவோமா!!
 
டிஸ்கி-இந்த இடுகை வெறும் கற்பனையே..கற்பனையின்றி உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
18 comments:

tamilan said...

//காமன்மேன்-இது போல பல கைதுகளைப் பார்த்து விட்டோம்.அடுத்தது ஆஸ்பத்திரியில் அனுமதி..அப்புறம் கேஸ் வருஷக்கணக்காய் நடக்கப் போகிறது.இதுவரை இந்தியாவில் ஊழலுக்காக நீதிமன்ற தண்டனை அடைந்த அரசியல்வாதி யாருமே இல்லை என்பதை மறந்து விடுவோமா!! //

EXACTLY . இதுதான்டா இந்தியா.

stoxtrends said...

Total black money (70 lac crores), excedes our 64 years total budget amount. scams,arrests ha,ha,ha

Chitra said...

அரசியலை வைத்து, இப்பொழுது அரசியல்வாதிகளே காமெடி பண்ணுவதுதான் சோகம்.

நீங்க சரியாகத்தான் எழுதி இருக்கீங்க.

MANO நாஞ்சில் மனோ said...

//சீமான்-பேயுடன் சேர்ந்து பிசாசை முதலில் விரட்டுவேன்..பின் பேயையும் விரட்டுவேன்..பேய்,பிசாசால் என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் சீமான் ஓயமாட்டான்.//

இதுதான் டாப்பே......

alappiranthan said...

appadiyaa....?ippaditthaanyaa pesa nenaippanga....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Tamilan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Stoxtrends

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

வானம்பாடிகள் said...

:)) அடி தூள்:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி MANO

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி alappiranthan

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Bala

revathi said...

enna seiyarathu.... orae comediyaa irukku....
Reva

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Revathi

அபி அப்பா said...

அன்பு டி வி ஆர் அய்யா! நீங்கள் எல்லாம் தெரிந்தவர். ஆனாலும் உங்க சமீபத்து பதிவுகள் அத்தனை செரிவுள்ளதாக தெரியவில்லையே ஏன்??

சமீபத்தில் கூட நீங்கள் எழுதிய கட்சிகளின் ஓட்டு சதவீத பதிவில் உங்கள் முதல் சரிவு ஏற்பட்டதாக உணர்ந்தேன். சரிதானா?

டக்கால்டி said...

namma oor kathaiyum sirippa sirikkuthu...athai nenachu Sirichu Sirichu innum sirippaa sirikkatum

T.V.ராதாகிருஷ்ணன் said...

அபி அப்பா said...
//அன்பு டி வி ஆர் அய்யா! நீங்கள் எல்லாம் தெரிந்தவர். ஆனாலும் உங்க சமீபத்து பதிவுகள் அத்தனை செரிவுள்ளதாக தெரியவில்லையே ஏன்??

சமீபத்தில் கூட நீங்கள் எழுதிய கட்சிகளின் ஓட்டு சதவீத பதிவில் உங்கள் முதல் சரிவு ஏற்பட்டதாக உணர்ந்தேன். சரிதானா//

நான் சொல்வது சரியா..தவறா ..என இதே நிலை நீடித்தால் காலம் பதில் சொல்லும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி டக்கால்டி