Sunday, February 13, 2011

இந்திய அரசுக்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மற்றுமொரு அவமானம்

. ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சரின் உரை மாற்றம் 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது உரைக்குப் பதிலாக போர்ச்சுக்கல் நாட்டு அமைச்சரின் உரையை மாற்றிப் படித்த சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் மேற்படி கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.

தான் வாசிப்பது, தனது உரையல்ல என்பதை மூன்று நிமிடங்கள் வரை உணர்ந்து கொள்ள முடியாதவராக , மற்றொருவரின் உரையை வாசித்திருத்திருப்பதும், அதனை மூன்ற நிமிடங்களின் பின், அருகில் இருந்த ஐ.நாவின் இந்தியத் தூதர் சுட்டிகாட்டும் வகையில் இருந்ததும், இந்திய அரசுக்கு மிகப்பெரும் தலைகுனிவு. இந்திய அரசில் அங்கம் வகிப்பவர்களின் பொறுப்பற்ற செயலினை உலகத்தின் முன் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் அறிகையில்; ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் தலைவர்களின் உரைகளின் நகல்கள் அனைவருக்கும் அந்தந்த நாடுகளால் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த போர்த்துக்கல் அமைச்சரின் உரையின் நகலை, தனது உரை நேரத்தின் போது கிருஷணா படிக்கத் தொடங்கியிருக்கின்றார்.

உரையின் முதற் பகுதிகளில் உள்ள பொதுவான விடயங்கள் கூறப்பட்டு போர்த்துக்கல் தொடர்பான விடயங்கள் வாசிக்கப்படும் போதே அருகில் இருந்த ஐ.நாவுக்கான இந்தியத் தூதுவர் உரை மாற்றப்பட்டிரப்பதை உணர்ந்து அமைச்சர் கிருஷணாவிற்கச் சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பின்னரே அவர் கிருஷ்ணா சரியான தனது உரையினைப் படித்தார் எனத் தெரிய வருகிறது. அதுவரையில் அந்த உரை தன்னுடையதல்ல என்பதை அமைச்சர் கிருஷணா உணர்ந்து கொள் முடியாதவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தற்போது எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

இது ஒரு பெரிய விஷயமே இல்லை. சர்வதேச கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பேசும் ஆரம்பகட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாக தான் இருக்கும். மேலும் என் முன்னால் நிறைய அறிக்கை தாள்கள் இருந்ததால், தவறுதலாக உரையை மாற்றி வாசிக்க நேர்ந்தது என அவர் கூறியுள்ளார்.


4 comments:

goma said...

அசத்தப்போவது யாரு,பார்க்க இனிமேல் தொலைக்காட்சி பக்கமே போக வேண்டாம் தினசரி செய்தி போதும்...
நேற்று ,ஹ்யூமர்கிளப்பில் கூட இதுதான் மேன் ஆஃப் ட் த மேட்ச் ஜோக்

தமிழ் உதயம் said...

ஈயடிச்சான் காப்பி போல் இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்