Monday, February 21, 2011

விஜயகாந்த் இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?-

 தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எச்சரிக்கை கலந்த அறிவுரை கூறும் வகையில், திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியில், இனியாவது உண்மையை உணர்ந்து கொள்வாரா?- என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

2006 சட்டமன்றத் தேர்தலுக்கு ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்கு முன்பு நடிகர் விஜயகாந்த், தே.மு.தி.க. என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அந்தக் கட்சியைத் தொடங்கிய போது பல்வேறு மாவட்டங்களிலும் இளைஞர்கள், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. போன்ற பல்வேறு கட்சிகளிலும் இருந்து அதிருப்தியாளர்கள் சிலரும் அதிலே சேர்வதில் அக்கறை காட்டினார்கள். அவர் எடுத்த எடுப்பிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தை கடுமையாகத் தாக்கிப் பேச ஆரம்பித்ததையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு பார்ப்பன ஏடுகளும் அவரை போட்டி போட்டுக் கொண்டு ஆதரித்தன.

2006 சட்டமன்றத் தேர்தலில் அவர் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் 234 தொகுதிகலும் தனியாகவே போட்டியிட்டார். அதில், அவரது கட்சி 234 தொகுதிகளிலும் 5 ஆயிரம், 10 ஆயிரம், 15 ஆயிரம் என்று ஓட்டு வாங்கியது. நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அது தனது டெப்பாசிட்டையே பறிகொடுத்தது. என்றாலும், மொத்தத்தில் 8 சதவிகித ஓட்டுகளை அது 234 தொகுதிகளுக்குமாகச் சேர்த்து எடுத்து விட்டது.


விருத்தாசலம் தொகுதியில் மட்டுமே ஒரே ஒரு வேட்பாளர் தே.மு.தி.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வேறு யாருமல்ல, விஜயகாந்தே தான்!


2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 11 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல்கள் நடந்தன. எல்லாத் தொகுதிகளிலும் விஜயகாந்த் கட்சி போட்டியிட்டது. அத்தனை தொகுதிகளிலும் தோல்வி, தோல்வி, படுதோல்வி தான்.

2006 லிருந்து இன்று வரையிலான கால கட்டங்களில் அவர் நிறைய சினிமாப் படங்களில் நடித்துக் கொண்டே இருந்தார். வெளிவந்த எல்லாப் படங்களுமே ஓடாமல் பெட்டிக்குள் சுருண்டு கொண்டன. எனினும் அவர் பெரும்பாலான நேரத்தை சினிமா படப்பிடிப்பிலேயே கழித்து வந்தார்.

கடைசியாக 2010-ம் ஆண்டில் கூட தமது மைத்துனரின் தயாரிப்பில் உருவான ‘விருத்தகிரி’ என்ற சினிமாவின் படப்பிடிப்பிற்காக அவர் மலேசியா, ஹாங்காங் போன்ற வெளிநாடுகளிலேயே ஆறு, ஏழு மாதங்கள் தங்கி அந்தப் படத்தில் நடித்ததோடு படத்தையே அவர் தான் இயக்கினார்.

விக்கிரமாதித்தன் கதையில் விக்கிரமாதித்த மகாராஜா நாடாறு மாதம், காடாறு மாதம் போனதாக கதையிருக்கிறது. அதாவது விக்கிரமாதித்த மகாராஜா ஓர் ஆண்டில் ஆறு மாதம் நாட்டில் இருந்து ஆட்சி நடத்துவார். அடுத்த ஆறுமாதம் காட்டுக்குப் போய்விடுவார் என்பதே அந்தக் கதை.

விஜயகாந்தைப் பொறுத்த வரையில் அரசியலில் ஆறு மாதம், சினிமாவில் ஆறு மாதம் என்றுகூட அல்ல, பெரும்பாலான மாதங்கள் சினிமாவிலும், சில மாதங்களே அரசியலிலுமாக காலத்தைக் கழித்து வந்தார்.

இந்தக் கால கட்டத்திற்குள்ளாக அவரது கட்சியில் எல்லா மாவட்டங்களிலும் கோஷ்டிச் சண்டைகள் தலைவிரித்து ஆடின. பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் தே.மு.தி.க.வை விட்டு விலகி வேறு கட்சிகளில் சேர்ந்தார்கள்.

எனினும் விஜயகாந்த் எந்த நாட்டில் இருந்தாலும் அவர் பெயரில் சென்னையிலிருந்து ஒரு அறிக்கை நாள் தவறாமல் வந்து கொண்டிருக்கும். அந்த அறிக்கைகள் முழுவதிலும் தி.மு.க. மீதும், தி.மு.கழக ஆட்சி மீதும், முதல்வர் கலைஞர் மீதும் புழுதிவாரித் தூற்றப்பட்டிருக்கும்.

அதனாலே பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அவரது அறிக்கைகளை, தங்களது தி.மு.க. துவேஷம் காரணமாக பெரிதுபடுத்தி பிரசுரித்து வந்தன. அந்த அறிக்கைகளைத் தவிர தமிழக அரசியலில் அவர் நேரடியாகப் பங்கு பெற்றது என்பது மிகமிக மிக மிகக் குறைந்த அளவு காலமே ஆகும்.

தமிழகத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தப்பித் தவறி அவர் பங்கு கொண்டாலும் தி.மு.க.வைத் தாக்குவது தவிர வேறு எதுவும் அவரது பேச்சில் இருக்கவே இருக்காது. ஒவ்வொரு வாய்ப்பின் போதும் பத்திரிகையாளர்கள் விஜயகாந்திடம், ‘‘தேர்தலில் நீங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வீர்கள்’’ என்று அரைத்த மாவையே அரைப்பது போல திருப்பித் திருப்பிக் கேட்பார்கள்.

விஜயகாந்தும் சளைக்காமல், "நான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேரமாட்டேன். மக்களோடும், தெய்வத்தோடும்தான் எனது கூட்டணி அமையும்" - என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பார்.

எனினும் பார்ப்பன ஏடுகள், அவரது பேட்டிகளை, பேச்சுகளை பக்கம் பக்கமாக வெளியிடும். என்ன காரணம்? அவர் தி.மு.க.வை எதிர்க்கிறார், அவரது தி.மு.க. எதிர்ப்பு அ.தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும் என்பதாக நினைத்து அந்தப் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்த் தும்மினாலும் இருமினாலும் உளறினாலும் ஓஹோ, ஓஹோ என்று புகழ்ந்தே எழுதும்.

இப்படி அந்த ஏடுகள் எல்லாம் தன்னை புகழ்ந்து எழுதுவதைக் கண்டு விஜயகாந்துக்கும் தலை நாளுக்கு நாள் கணத்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் உண்மையாகவே தன்மீது மதிப்பும், மரியாதையும் வைத்துத்தான் தன்னைப் புகழ்கிறார்கள் என்று அவர் தவறாக நினைத்துக் கொண்டார்.

அடுத்து வரும் தேர்தலில் எப்படியாவது விஜயகாந்தை ஜெயலலிதாவின் கூட்டணியில் சேர்த்து விட வேண்டும். அப்படிச் சேர்த்தால் ஜெயலலிதா வெற்றி உறுதியாகிவிடும். அவர் மீண்டும் பதவிக்கு வந்து பார்ப்பன ஆட்சியை ஸ்தாபித்து விடுவார் என்கிற பார்ப்பன ஜாதி அபிமானத்தினாலேயே அந்த ஏடுகள் தன்னை ஆதரிக்கின்றன என்பதை விஜயகாந்த் புரிந்து கொள்ளவில்லை.

டிசம்பர் மாதம் வரையில் பார்ப்பன ஏடுகள் விஜயகாந்தைத் தொடர்ந்து புகழ்ந்துதான் எழுதி வந்தன. அந்தக் கால கட்டத்தில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் மைத்துனர் சத்தீசும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர ரகசிய பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற செய்திகள் கிசுகிசு பாணியில் கசிந்து கொண்டு இருந்தன.

ஆகவே விஜயகாந்த் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பிலும், மகிழ்ச்சியிலும் அவை முன்னைவிட அதிகமாக விஜயகாந்தைப் புகழ ஆரம்பித்தன.

தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிக்கப் போகும் மகத்தான சக்தியாக விஜயகாந்த் தான் விளங்குகிறார். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அவருக்கே உண்டு என்றெல்லாம் எழுதி வந்தன.

ஆனால், சமீபத்தில் சேலத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில்,

1. எதிர்பார்த்த அளவு கூட்டமில்லை,

2. பார்ப்பன ஏடுகள் எதிர்பார்த்ததுபோல ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிக்கவுமில்லை.


ஆகவே பார்ப்பன ஏடுகளுக்கு அது நாள் வரை விஜயகாந்த் கட்சிமீது இருந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது. விஜயகாந்த் பார்ப்பன ஆட்சி மலரும் விதத்தில் ஜெயலலிதாவை ஆதரிக்க மாட்டாரோ என்ற சந்தேகம் அவைகளிடம் வலுத்துவிட்டது. இப்போது சில ஏடுகள் விஜயகாந்தை குறை கூறியும், குற்றம் சாட்டியும் எழுத ஆரம்பித் துள்ளன.


ஒரு ஏடு,

"கடந்த 5 ஆண்டு கால சட்டமன்றத்தில் விஜயகாந்தின் சட்டமன்றப் பணி என்று குறிப்பிட எதுவுமில்லை. எப்போதாவது ஓரிரு தடவைகள் தான் அவர் சட்டமன்றக் கூட்டங்களிலேயே கலந்து கொண்டார். அப்போதும் கூட அவர் தமது தொகுதியின் மேன்மைக்காகவோ அல்லது மக்கள் முன்னேற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தோ பேசியது இல்லை. அவரது சட்டமன்றப் பணி என்பது குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமற்றதாகவே அமைந்து விட்டது."

- என்று விஜயகாந்தை முதன் முறையாக குற்றம்சாட்டி குறைகூறி எழுதியிருக்கிறது.


அதுவும் தவிர,

கடந்த 5 ஆண்டு காலத்தில் நடந்த சட்ட மன்றக் கூட்டங்களில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசிய மொத்த நேரமே ஒன்றரை மணி நேரம்தான் என்ற குற்றச்சாட்டும் கூடவே எழுந்துள்ளது.

இதைத்தான் நாம் கடந்த 5 ஆண்டு காலமாக விஜயகாந்துக்கு சுட்டிக்காட்டிய வண்ணமே இருந்தோம்.

பார்ப்பன ஏடுகள் உங்களைப் பாராட்டுவதையெல்லாம் நம்பி விடாதீர்கள். பார்ப்பனத்தி ஜெயலலிதா, தி.மு.க.வை தோற்கடித்து மீண்டும் ஆட்சியில் அமர நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்ற ஜாதி அபிமானத்துடன் தான் அவர்கள் உங்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். ஜெயலலிதாவுடன் கூட்டணியில்லை என்று நீங்கள் எப்போது அறிவித்தாலும் அந்த வினாடி முதலே பார்ப்பன ஏடுகள் உங்களை, கடுமையாகத் தாக்கி உங்கள் மதிப்பைக் குறைத்து, இகழ்ந்து விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடும்.

என்று எச்சரித்தபடியே இருந்தோம்.

இப்போதுதான், அந்த எச்சரிக்கை மெய்ப்பட ஆரம்பித்திருக்கிறது. விஜயகாந்த் அ.தி.மு. க.வுடன் கூட்டணியில்லை என்று உருவானால், அந்த வினாடி முதலே விஜயகாந்தின் கட்சியை நார் நாராகக் கிழித்து காற்றில் பறக்க விட்டு விடும், அந்தப் பார்ப்பன ஏடுகள்.

அது இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. இனியாவது விஜயகாந்த் அந்த ஏடுகள் தன்னைப் புகழ்ந்து எழுதியது அல்லது எழுதுவது எதற்காக என்பதைப் புரிந்து கொள்வார் என்று நம்பலாமா?

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

(நன்றி -தட்ஸ்தமிழ் )15 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

test

koodalnagar said...

சரியாதான் சொல்லிருக்காங்க சார்.......

goma said...

அவர் உணர்கிறாரோ இல்லையோ நாம் உணரவேண்டும்

எதிர்காலத்தில் ,நல்ல அரசியல்வாதிகள் என்றால் ,இனிமேல் பிறந்தால்தான் உண்டு.

goma said...

இன்றைய அரசியல்
பணம் பட்டம் பதவி ...என்ற ரீதியில் போகிறது
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காற்றோடு போகிறது

கோவி.கண்ணன் said...

//இனியாவது விஜயகாந்த் அந்த ஏடுகள் தன்னைப் புகழ்ந்து எழுதியது அல்லது எழுதுவது எதற்காக என்பதைப் புரிந்து கொள்வார் என்று நம்பலாமா?/

ஆடு நனையுதேன்னு.........

ssk said...

இது விஜயகாந்துக்கு மட்டுமல்ல. தமிழர் அனைவருக்கும் பொருந்தும். பார்ப்பானிடம் அடி வாங்கி தான் புரிய வேணுமா? பல நூற்றாண்டுகளாக அவன் கொடுத்த வேதனைகள் போதாதா?

Unknown said...

பாவம் கெஞ்சுகிறார் கலைஞர்..இனி வேலைக்காவாது தாத்தா

Unknown said...

அந்த ஆடு பிரியாணி ஆகாது தலைவரே

சி.பி.செந்தில்குமார் said...

உணரமாட்டார். உணர்த்துவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி koodalnagar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ssk

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்